மூளை செல்கள்.. குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் முருங்கை பூக்கள்.. பெஸ்ட் உணவுகள், சூப்கள்
சென்னை: வளரும் குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்ய உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா? பிள்ளைகள் தவிர்க்கக்கூடாத 2 சூப் வகைகள் என்னென்ன தெரியுமா?
வயிற்றில் கரு உருவாகும்போதே, மூளையின் செல்கள் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் என்கிறார்கள். அதேபோல, 1 முதல் 3 வயது வரையிலான குழந்தையின் மூளை வளர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அத்தியாவசியமாகிறது.. குழந்தையிலிருந்து, பருவ வயது வரும்வரை உடலுக்கும், மன ஆரோக்கியத்துக்கும் ஊட்டச்சத்து உணவுகளை சரியான அளவில் தர வேண்டும்.

உடலுறுப்புகள்: 6 மாதம் முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளில், 3-ல் 2 பேருக்கு ஊட்டச்சத்துள்ள உணவு சரிவர கிடைக்காததால், அவர்களது மூளை, உடல் உறுப்புகளின் வளர்ச்சி மோசமாகிவிடுகிறதாம்.. இதனால் நோய் எதிர்ப்பு திறனும் குறைந்து, அந்த குழந்தைகளுக்கு பல நோய்களும் ஏற்பட்டு, இறப்பு வரை சென்றுவிடுவதாக யூனிசெஃப் கூறுகிறது.
எனவே, வளரும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து, புரோட்டீன் நிறைந்த உணவுகளை கட்டாயம் தர வேணடும். கீரைகள், பீன்ஸ், பூசணி விதைகள், புரோக்கோலி, ப்ளூபெர்ரி வகை உணவுகள், ஆரஞ்சு, அவகேடா, சாலமன் மீன், முட்டை, வால்நட்ஸ், பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, மஞ்சள், டார்க் சாக்லேட்டுகள், ஓட்ஸ், தயிர், கிரீன் டீ போன்றவற்றை உணவில் அவசியம் தர வேண்டும்.
முருங்கை பூக்கள்: முருங்கைக்கீரையை அல்லது முருங்கைப்பூக்களில் பொரியல் செய்து தரலாம்.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது இந்த முருங்கை பூக்கள்.. இந்த முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, அத்துடன் பனங்கல்கண்டு கலந்து, தினமும் காலை, 2 வேளையும் குடித்து வந்தாலும், நினைவாற்றல் அதிகரிக்கும்.
வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைய உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது... இதனால், குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களை வராமல் தடுக்கிறது. எனவே தினமும் 3-5 வால்நட் சாப்பிட தரலாம்.. தினம் ஒரு முட்டை சாப்பிடுவாலும் ஞாபக சக்தி அதிகரிக்க செய்யும் முருங்கைப்பூக்களில் சூப் செய்தும் குடிக்கலாம்.
முருங்கை சூப்: இதற்கு முதலில், தனியா, சீரகம், மிளகு, சுக்கு, பூண்டு, எல்லாவற்றையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இந்த அரைத்து விழுதையும் ஊற்றி, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். மசாலா வாசனை போனதும், பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களை சேர்த்து மறுபடியும் கொதிக்க விட வேண்டும். பூக்கள் வெந்ததும் இறக்கினால் முருங்கை சூப் தயார்..!!
அதேபோல, குழந்தைகளின் மூளையை வளர்ச்சியடைய செய்வதில் வல்லாரை கீரை சூப் பேருதவி செய்கிறது.. 20 வல்லரை கீரை, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்..
சத்தான சூப்: ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதுகளை சேர்த்து வதக்க வேண்டும். இதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.. பிறகு வேகவைத்து மசித்த பாசிபருப்பு 1 ஸ்பூன், உப்பு, சிறிது மிளகுதூள் சேர்த்து கலக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப் ரெடி
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications