மட்டன் சாப்பிடறீங்களா.. மீன் வாங்க போறீங்களா? ஹோட்டலுக்கு போனதுமே "இதை" கவனியுங்க.. ரொம்ப முக்கியம்
சென்னை: மட்டன், சிக்கன், மீன் சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழக அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
கேரளாவில் கடந்த வரும் ஷவர்மா சாப்பிட்ட, 16 வயது சிறுமி உயிரிழந்தார்.. இப்போது 14 வயது நாமக்கல் சிறுமி இறந்துள்ளார்.. இதற்கெல்லாம் காரணம், இறைச்சியை முறையாக பதப்படுத்தப்படுவதில்லை, வேகவைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

2 சிக்கல்கள்: அதேசமயம், இது தொடர்பாக, 2 விதமான சிக்கல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. உணவகங்களில் அடிக்கடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.. உயிரிழப்புகள் நடந்தால் மட்டுமே, ஓட்டல்களிலும், இறைச்சி மார்க்கெட்டுகளிலும் சோதனைகள் நடத்தப்படுகிறதே தவிர, மற்ற நேரங்களில் இப்படியான சோதனைகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று பொதுமக்கள் அதிருப்தியுடன் கூறுகிறார்கள்.
அப்படியே அதிகாரிகள், உணவகங்களில் சோதனை நடத்தினாலும்கூட, மாதிரி செய்வதற்காக அந்த உணவுகளை கொண்டுசென்றாலும்கூட, போதிய அளவில், பகுப்பாய்வு கூடங்கள் இருப்பதில்லையாம்..
ஒரு மாதிரியை சேகரிக்க அனுப்பினால், 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது., அதனால்தான், உணவின் தரத்தை உறுதி செய்வதில், அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்..
அசைவ உணவகம்: இப்படிப்பட்ட சூழலில் ஒரு அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.. தமிழகம் முழுவதுமள்ள இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகளும், உடனடியாக களப்பணியில் இறங்கி உள்ளனர்.
அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும், பொதுமக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
பாக்டீரியாக்கள்: ஓட்டல்களில், சரியாக கறியை வேகவைக்காமல் போனால், ஷிகெல்லா, ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ், லிஸ்டீரியா மோனோசைப்டோஜீனஸ் போன்ற பாக்டீரியாக்கள் உருவாகி விடுகிறதாம்.. இதை சாப்பிடும்போது, அப்பாவி மக்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
அதேபோல, உணவுகளில் கலக்கப்படும் கெமிக்கல், சமைக்க பயன்படுத்தப்படும் சுத்தமில்லாத தண்ணீரும், உடல்நல பாதிப்புக்கு காரணமாகின்றன.. உணவுப் பொருட்களை மோசமான இடங்களில் வைக்க கூடாது என்றும், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது வயிற்றிலிருந்து மூளை, நரம்பு மண்டலத்தை கூட பாதித்து விடும் என்றும் டாக்டர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.தெரிவிக்கின்றனர்.
வித்தியாச சுவை: உணவுகளை சாப்பிடும்போதே ஏதாவது வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக அந்த உணவை நாம் சாப்பிடாமல் தவிர்த்துவிட வேண்டுமாம். நாம் சென்று சாப்பிடும் ஓட்டல், சுத்தமாக இருக்கிறதா? குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் இடங்களில் பாக்டீரியா இல்லாத சுத்தமான இடங்களாக இருக்கிறதா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்கிறார்கள்.
இறைச்சியை பதப்படுத்துவதில் இருந்தே கவனமாக இருக்க வேண்டுமாம்.. இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, மறுநாள் அரைகுறை தீயில் சமைத்து சாப்பிடுவதே முதல் ஆபத்து என்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், இறைச்சியை, பிளாஸ்டிக் கவரில் காற்று புகாதவாறு அடைத்து, அதற்குபிறகுதான், ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டுமாம்.. அவைகளை சமைக்கும்போது, மொத்த இறைச்சியிலும் தீ பரவினால்தான், கறி முழுமையாக வேகும்..
5 மணி நேரம்: 5 மணி நேரம் வெளியே கம்பியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தாலும், பாக்டீரியாக்கள் அதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதாம்.. அதனாலேயே பெரும்பாலான உடல் உபாதைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், அனைத்து இறைச்சி கடைகள், அசைவ ஓட்டல்களில் இறைச்சியை முறையாக பதப்படுத்துகின்றனரா? என்பதை ஆராய மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications