மூட்டு வலி பாடாய்படுத்துகிறதா? இந்த தண்ணீரை குடிங்க! அப்புறம் பாருங்க மேஜிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஒரு தண்ணீரை குடித்தால் முட்டி வலியே வராது என்கிறார்கள். அது என்ன தண்ணீர் தெரியுமா? மூட்டு வலி ஏன் வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ரத்தம் அமிலத் தன்மை அடைந்தால் என்னென்ன நடக்கும். பிஎச் வேல்யூ என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து தீபா தங்கராசு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:மண்பானை நீர்-pH அளவையும் இரத்தத்தில் pH அளவையும் பார்க்கலாம்.

health knee pain

மூட்டு, எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).

ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. (Alkaline).

நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!

ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.

அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.

R.O.WATER - 5 - 6 pH அளவு.

காபி - 4.5 - 5.5 pH அளவு.

மண்பானை நீர் - 7- 8 pH அளவு.

R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது . இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பானை தண்ணீர் வெயிலுக்கும் இதமாக இருக்கும். வெயில் காலத்தில் ஜில்லென எதையாவத குடிக்கலாம் என இருக்கும். அப்போது பிரிட்ஜில் வைத்த தண்ணீரை குடிப்பர். ஆனால் இது குடிக்கும் போது ஜில்லென இருக்குமே தவிர உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும். உடல் உபாதைகளையும் தரும். ஆனால் பானையில் ஊற்றி வைத்து குடிக்கும் நீர், உடலுக்கும் நல்லது, ஜில்லென்றும் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+