செவ்வாழையை.. 21 நாள் சாப்பிட்டாலே அற்புதம்.. 48 நாள் என்றால் குஷி செய்தி வரும்.. நம்பித்தான் ஆகணும்
சென்னை: செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் மென்று சாப்பிட வேண்டுமாம்.. ஏன் தெரியுமா? செவ்வாழை சாப்பிடுவதற்கென்றே பிரத்யேகமாக நேரம் இருக்கிறதாம். என்ன தெரியுமா?
செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சிறுநீரகங்களில் கற்கள் சேராமல் தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது. இதனால், இதயம் சீராக செயல்படுவதுடன், பக்கவாதம், மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது..
உடல் உறுப்புகள்: அதிக ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கும், தோல் பிரச்சனை இருப்பவர்களும், செவ்வாழை மிகுந்த பலனை தரக்கூடியது.. நுரையீரல், கல்லீரல், இதயம், குடல், என முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்துக்கு பெரும் உதவி புரிகிறது செவ்வாழை.

தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பிரச்சனைகளே வருவதே கிடையாதாம்.. மாலைக்கண் பாதிப்பு இருப்பவர்களும், செவ்வாழையை சாப்பிடுவதால் கண்பார்வை கூர்மைபெறும்.. செவ்வாழையை துண்டு செய்து, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தாலே கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதலும் நின்றுவிடும்.
செவ்வாழை: இதற்கு காரணம், செவ்வாழையில் நியூட்டின் (Nutein), ஸியான்தினின் (zeaxanthin), பீட்டா கரோட்டின், வைட்டமின் A போன்ற சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன..
கண்களின் செல்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சரி செய்வதுடன், மூப்பு காரணமாக கண்களின் உள் அடுக்குகளில் உள்ள தசைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தடுக்கப்படவும் இந்த செவ்வாழை உதவுகிறது.. கண்கள் சிவந்து போவது போன்ற தொந்தரவு இருந்தால், தினமும் 2 செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலும் போதும்.
பல் ஆரோக்கியம்: கண்ணுக்கு எந்த அளவுக்கு இந்த பழம் நல்லதோ, அதுபோலவே பற்களுக்கும் நல்லது. பல் ஆடுவது, ஈறுகள் பலவீனமாக இருப்பது போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய செவ்வாழையே போதும்.
48 நாட்களுக்கு செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு, நரம்புத்தளர்ச்சி நீங்கி, நரம்புகள் பலப்பட்டு, ஆண்மை கோளாறுகள் சீராகும் என்பார்கள். அதுபோலவே 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்கள் வலுவடைந்து, ஈறுகளும் உறுதியடையுமாம். வாழைப்பழங்களிலேயே பற்களுக்கு வலிமை தரக்கூடியது இந்த செவ்வாழை மட்டும்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சத்துக்கள்: எப்போதுமே, முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட வேண்டுமாம். அப்போதுதான், ஒரு நாளைக்கு தேவையான மொத்த சத்துக்களில் 60 சதவீதம் நமக்கு கிடைத்துவிடும். ஒருவேளை அன்றைய தினம் நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில், சத்துக்கள் மிகக்குறைவாக இருந்தாலும், இந்த ஒரு வாழைப்பழத்தில் கிடைக்கும் சத்துக்கள் அதை சரிக்கட்டிவிடும்.
அதேபோல, செவ்வாழையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. காரணம், இந்த செவ்வாழைகள் செரிமானம் ஆக எப்படியும் 7 மணி நேரம் ஆகுமாம். அதனால், காலையிலேயே சாப்பிட்டால் செரிமானம் எளிதாவதுடன், அன்றைய தினத்துக்கு தேவையான ஆற்றலும், புத்துணர்ச்சியும் காலையிலேயே கிடைத்துவிடும்.
டைமிங்: அதனால், காலையில் 6 மணிக்கு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அல்லது பகல் 11 மணி அல்லது சாயங்காலம் 4 மணி போல சாப்பிடலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் சாப்பாடு சாப்பிட்டதுமே செவ்வாழையை சாப்பிடக்கூடாது. இதனால், மந்த உணர்வு நிறைய ஏற்பட்டுவிடுவதுடன், இந்த செவ்வாழையின் சத்துக்களும் முழுமையாக கிடைக்காது.












Click it and Unblock the Notifications