கொலஸ்ட்ரால் ஓவரா இருக்குதா? அப்ப இதை மட்டும் சாப்பிடுங்க.. இதய நோயை விரட்டும் அருமையான டிப்ஸ்
சென்னை: நெஞ்சு வலி வந்தால், ஹார்ட் அட்டாக் என்று பயப்படுகிறவர்களும் உண்டு, ஹார்ட் அட்டாக் வந்தால், வாயு பிடிப்பு என்ற நினைத்து அஜாக்கிரதையாக இருந்துவிடுவதும் உண்டு. இந்த 2 விஷயத்தையுமே அலட்சியப்படுத்த கூடாது.
காரணம், இதயவலியை ஆஞ்சைனா என்பார்கள்.. மாரடைப்பை ஹார்ட் அட்டாக் என்பார்கள். எனினும், அதனால், சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை, பல நோய்களுக்கு ஒரே அறிகுறியாக, நெஞ்சு வலி இருப்பதால், எந்த காரணம் கொண்டு இதை அலட்சியப்படுத்திவிடக்கூடாது.

மாரடைப்பு அறிகுறிகள்: திடீரென்று நெஞ்சு முழுவதும் கடுமையான வலியிருக்கும்.. அந்த வலியானது தாடை, கழுத்து, தோள்பட்டை, முதுகு தண்டுவடம், கழுத்து, பற்கள், இடது கை விரல்களுக்கு பரவ துவங்கும்.. உடம்பெல்லாம் வியர்த்து கொட்டும்.. மூச்சுத் திணறல், மயக்கம் வரும். அதாவது, மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவும்.. மாடிப்படியில் ஏறினாலே, நடந்தாலோ, அதிக வலி ஏற்படும்.
பாதிப்பு யாருக்கு: சிகரெட் பிடிப்பவர்கள், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு, சர்க்கரை நோயாளிகள், உடற்பயிற்சியும், உடலுழைப்பும் இல்லாதவர்கள், ஓய்வும், சரியான தூக்கமின்றி கடுமையாக உழைப்பவர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல, பல் பிடுங்கும்போது ஈறுகளில் தொற்று, ரத்தக்கசிவு ஏற்பட்டால், இதய வால்வுகள் பாதிக்கப்படலாம். அதனால், பற்களுக்கும் இதயத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளதால், கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டி உள்ளது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்தாலே ஆபத்துக்கள் தவிர்க்க உதவும்.. ஆரோக்கியமான உணவு + முறையான உடற்பயிற்சி + போதுமான முக்கியம் இவைகளே அத்தியாவசியமாகின்றன. அதேபோல, சில உணவுகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் துணைபுரிகின்றன.
அதில், முக்கியமானது, நெல்லிக்காய்.. கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதைவிட, இயல்பான நிலைமைக்கு வைத்திருப்பதில் நெல்லிக்காய்க்கு நிறைய பங்குண்டு.. 3 மாதம் தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டுவந்தாலே வித்தியாசம் தெரியும்.. அதேபோல,
மீன்கள்: மீன்களை சாப்பிடலாம் குறிப்பாக, சால்மன், டூனா வகையான மீன்களை சாப்பிடும்போது, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.. பாதாம், அக்ரூட் பருப்புகளில் நிறைய நார்ச்சத்துக்குளும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.
உணவில் பார்லி, ஓட்ஸ் இருவகைகளையும் அதிகமாக சேர்த்து கொள்ளலாம். இவைகளில் நிறைய நார்ச்சத்து இருப்பதுடன், உடல்எடையை குறைத்து, சீராக வைத்திருக்க உதவுகிறது. காலை உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்ள சொல்வதற்கு காரணமே, இதுதான். அதேபோல, சமையலில் பூண்டு நிறைய சேர்த்து கொள்வதால், கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படும்.
வெண்டைக்காய்: கத்திரிக்காய், வெண்டைக்காய் இரண்டுமே, நார்ச்சத்து நிறைந்ததுடன், குறைந்த கலோரிகளை கொண்டவை.. கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டவை.. நீரிழிவு நோயாளிகளும் இதனை சாப்பிடும்போது, சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். பசலைக் கீரை வாரம் 2 முறையாவது சாப்பிட்டு வரும்போது, தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும்.. சோயா பொருட்களிலும் இந்த தன்மை அதிகமாகவே உள்ளது.
அவகேடோவில் கொழுப்புகள் நிறைய இருப்பதால், தவிர்க்க சொல்வார்கள்.. ஆனால், நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை இந்த அவகேடோவுக்கு இருக்கிறதாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
30ஐ தொட்டதும் சட்டென உடல் எடை ஏறுதா? காரணம் இதுதான்! பலருக்கும் தெரியாத உண்மை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications