முருங்கை பட்டை.. கீல்வாதத்தையும் முடக்கி போடுமே.. தீராத மூட்டு வலியையும் தீர்க்கும் வெந்தயம்.. வாவ்
சென்னை: வாத நோய் இருப்பவர்கள், உப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமாம். அத்துடன், நார்ச்சத்து உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும் என்கிறார்கள.
நரம்பு செல்களில் கெட்ட நீர் தங்கி, தசைகளில் ஊறி, வாயு அதிகரித்து வரும் நோயே வாத நோயாகும்... இந்த வாத நோய் தாக்கும் இடங்களை பொறுத்து அது வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது..

மூட்டுகள்: மூட்டுகளை தாக்கினால் மூட்டு வாதம், முகத்தைத் தாக்கி முகவாதம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.. மொத்தம் 80 வகையான வாதங்கள் இருந்தாலும், மனிதர்களை அதிகமாக தாக்குவது முடக்கு வாதம், பக்கவாதம் தான்.
காரணம், வாத நோய்களிலேயே மூட்டுகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறதாம்.. மனித இயக்கங்களை முற்றிலும் முடக்கிவிடுவதே முடக்குவாதமாகும்.. எனவே, மருத்துவர்களை சந்தித்து, இதற்கு முறையான சிகிச்சையை உடனடியாக பெற வேண்டும்.
மாற்றங்கள்: அதேசமயம், உணவு முறைகளிலும் சில மாற்றங்களை கொண்டுவரலாம்.. அதாவது, மலச்சிக்கலை உண்டாக்காத அளவுக்கு உணவுமுறைகளை கையாள வேண்டுமாம்.. நார்ச்சத்து நிறைந்த, வெங்காயம், தக்காளி, கேரட்,, புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளை சேர்த்து பச்சடி போல தயார் செய்து சாப்பிடலாம்.. உணவில் புளியை குறைத்து கொள்ள வேண்டும்..
அதேபோல, சமையலில் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். அதிக உப்பு பொருட்களை சாப்பிட்டால், மூட்டுவலி பிரச்சனைகள் அதிகமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, அதிக சோடியம் உள்ள உணவை சாப்பிடும்போது, கீல்வாதம் அழற்சி அதிகரிக்குமாம்.. எனவே, உணவில் உப்பின் அளவைக் குறைப்பது நல்லது
முருங்கைக்கீரை: பொரித்த உணவுகளையும் நிறைய சாப்பிடும்போது, முடக்கு வாத பிரச்சனை அதிகமாகும்.. எனவே, முள்ளங்கி, வாழைத்தண்டு, முருங்கைக்கீரை போன்றவற்றை அதிகமாக சேர்த்து கொள்வதால், நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் கிடைக்கும்.. காபி, டீயை குறைத்து கொண்டு, பார்லி நீரை 1 டம்ளர் குடிக்கலாம்... கொள்ளு ரசம் மிகவும் நல்லது.. அதிலும், முடக்கத்தை விரட்டும் முடக்கத்தான் கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.
முருங்கை கீரையை போலவே, முருங்கை பட்டைகளும் வாதத்துக்கு நல்லது.. நரம்புக் கோளாறு இருப்பவர்கள், முருங்கை பட்டைகளை வாரத்தில் ஒருநாளாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த முருங்கை பட்டைகளை உலர்த்தி, தூள் செய்து கொண்டால், மூட்டுவலி பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.. தலைவலி, காய்ச்சலுக்கும் இந்த பவுடர் நல்லது. அதேபோல, முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்றுபோட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.
வெந்தயம்: அதேபோல, வெந்தயம் மூட்டுகளுக்கு மிகவும் நல்லது... ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை, அரை கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து விட்டு வெந்தயத்தை மென்று சாப்பிட்டு வந்தாலே, மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து மூட்டு வலியும் வலியும் குறைகிறதாம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications