தொப்பை கரையணுமா? அப்ப இதை குடிச்சி பாருங்க.. அதுவும் வெறும் வயிற்றில்.. நம்ப முடியாத சூப்பர் "விதை"
சென்னை: உடல் எடையை குறைக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும், அவைகளுக்கு தூண்டுகோலாக உதவக்கூடியது சத்தான பானங்கள்தான். அந்தவகையில் சோம்பு நீர் தவிர்க்க முடியாதது.
சோம்பு என்று சொல்லப்படும் பெருஞ்சீரகம், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வக்கிறது.. இதற்கு காரணம், துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள், என பல்வேறு விஷயங்கள் இந்த பெருஞ்சீரகத்தில் உள்ளன.

உடல் பருமனை குறைக்க, ஆயுர்வேத மருத்துவத்திலேயே, இந்த சோம்பு தண்ணீர்தான் பரிந்துரைக்கப்படுகிறது. இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு, மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது இந்த தண்ணீரில் டீ போட்டும் குடிக்கலாம். வெறும் வயிற்றில் இப்படி சோம்பு தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னனென் தெரியுமா?
கொழுப்புகள்: உடலிலுள்ள கலோரிகள், கொழுப்புகள் கரைந்து குறைய துவங்கும்.. ரத்தத்திலுள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகள் வெறியேறி, ரத்தம் சுத்தமாகும்.. வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப்பகுதி கரைந்து, தொப்பை குறைய துவங்கும்.. வயிற்றுப்புண் ஆறும்.. இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் தீரும்.. சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படும். தோல் நிறம் மினுமினுப்பு கூடும்.. நிம்மதியான தூக்கத்தை தரும்.
வெறும் வாயில், 4 சோம்பு மென்று சாப்பிட்டாலே, வாய் துர்நாற்றங்கள் நீங்கும்.. பற்களும் சேதமாகாது... கண் பார்வை தெளிவடையும்.. வயிற்று உப்புசத்தை தணிக்கும்.. கர்ப்பப்பை சார்ந்த குறைபாடுகள் நீங்கும்..
வயிற்றுப்பகுதி சதை: பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் வளரக்கூடிய சதையை கரைக்க, இந்த சோம்பு தண்ணீர்தான் பெஸ்ட் சாய்ஸ்.. மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலிலுள்ள கலோரிகளை குறைக்க இந்த தண்ணீர் உதவுகிறது. இதனால், ரத்தத்திலுள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தமும் சுத்தப்படுகிறது.
வைட்டமின்கள், தாதுக்களுக்கான உடலின் உறிஞ்சுதல் சக்தியை மேம்படுத்த இந்த சோம்பு உதவுகிறது. மொத்தத்தில், மாங்கனீசு, துத்தநாகம், செலினியம், ஜீயாக்சாண்டின், லுடீன், பீட்டா கரோட்டின், குளோரின், பாஸ்பரஸ் என ஆக்ஸிஜனேற்றிகளின் எண்ணிக்கைகள் மிக அதிகம் என்பதால், உடல் எடையை குறைக்க இந்த சோம்பு பேருதவி புரிகிறது.
தவிர்க்கலாம்: ஆனால், கர்ப்பிணி பெண்கள் சோம்பு தண்ணீர் குடித்தால், கருப்பை சுருக்கம் ஏற்பட்டுவிடுமாம். அதனால், கர்ப்பிணிகள் இதை குடிப்பதை தவிர்க்கலாம்.. அதேபோல, மருந்து மாத்திரைகளை சாப்பிடுபவர்களும், தோல் அலர்ஜி, ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களும், இந்த சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்..!!
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications