நாவல் பழம்.. நல்லது செய்யும் பழம்.. நாவல் ஜூஸ் ஒன்னு போதும், மொத்த நோயும் ஓடிரும்.. இதய நண்பன் நாவல்
சென்னை: சர்க்கரை நோயை விரட்டுவது முதல் பல் ஈறுகளை போக்குவது வரை பெரும்பலனை தரக்கூடியது நாவல் பழங்கள்.. எப்பவுமே நாவல் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாமாம்.. பழம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி அல்லது அதுக்கப்புறம்தான் சாப்பிடணுமாம்.
புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்C, B, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இப்படி பல சத்துக்களை அடக்கியதுதான் நாவல் பழம்.. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த நாவல் பழம் பெரிதும் கை கொடுக்கிறது..

இதய பாதுகாப்பு: இதய நோய்கள் வராமல் தடுப்பதில் இந்த பழத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. காரணம், நாவல் பழத்தில் பொட்டாசியம் ஏராளமாக அடங்கியிருக்கிறது. அதாவது, 100 கிராம் நாவல் பழத்தில் 55 மில்லிகிராம் பொட்டாசியம் இருக்கிறதாம். எனவே, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்து நோய்களை நெருங்க விடாமல், தமனிகளை சீராக செயல்படவைக்க இந்த பழம் தூண்டுகோலாகிறது.
நாவல் என்றாலே நீரிழிவு நோய்தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் மிகச்சிறந்த வரப்பிரசாதம். இந்த பழம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.. அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் உள்ளிட்ட நீரிழிவு நோயின் அறிகுறியை இந்த பழம் குணப்படுத்துகிறது...
சர்க்கரை நோயாளிகள்: லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்த இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும். இனிப்பின் அளவும் இந்த பழத்தில் மிகவும் குறைவு.. நீரிழிவு நோயாளிகள், இந்த பழத்தின் விதைகளை நன்றாக இடித்து துாளாக்கி, தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே நீரிழிவு நோய் குணமாகும்.
நாவல் பழத்தில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்தும் உடல் எடையை குறைப்போருக்கு மிகவும் உதவுகிறது.. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இந்த பழம் உதவுகிறது.
நாவல் ஜூஸ்: நாவல் பழ ஜூஸில், சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.. சிறுநீரக கற்களை கரைப்பதிலும் இந்த பழத்துக்கு பெரும் பங்குண்டு.. அதேபோல மூல நோய் உள்ளவர்கள், தினமும் 2 அல்லது 3 நாவல் பழம் சாப்பிட்டு வந்தால், 3 மாதங்களிலேயே மூல நோய் குணமாகுமாம்.
நாவல் பழத்திலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு, மலேரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருக்கின்றன.. அதனால், நாவல் பழத்தை சாப்பிட்டு வரும்போது, தொற்றுக்கள் எளிதில் நம்மை அண்டாது. ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது. ஈறுகள், பற்கள், பிரச்சனைக்கு நாவல் பழம் சாப்பிட்டாலே போதும்..!!












Click it and Unblock the Notifications