முருங்கையிலை ஸ்பெஷாலிடீஸ்.. கீரைகளின் முதல்வன் முருங்கைகீரை. "ஆபத்பாந்தவன்"னு ஏன் சொல்றாங்க தெரியுமா
சென்னை: கீரைகளின் அரசன் அல்லது கீரைகளின் முதல்வன் என்றே சொல்லலாம் இந்த முருங்கைக்கீரையை.. இந்த அளவுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில், முருங்கைக்கீரையில் என்னென்ன அம்சங்கள் உள்ளது தெரியுமா?
1. ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே இந்த முருங்கையிலையில் நிரம்பி கிடக்கின்றன.

2. மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது.
3. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்த கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
4. மற்ற கீரைகளைப் போல இல்லாமல், காய்ந்துப்போன முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இந்த கீரையின் மற்றொரு ஸ்பெஷலாட்டி.
5. 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது. முருங்கை கீரையில் 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வு குறிப்புகள் சொல்கின்றன.
6. முருங்கைக்கீரையில் மற்ற தாவர உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது.. செயற்கையாக நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தைவிட, இயற்கையாக முருங்கை கீரையில் கிடைக்கும் இரும்பு சத்தை நம்முடைய உடல் எளிதில் கிரகித்து கொள்கிறது.
7. ஒரு வயது குழந்தை முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, 1 ஸ்பூன் உலர்ந்த முருங்கைக்கீரை பவுடர் தந்தால், குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு தேவையான 14 சதம் புரதம், 40 சதம் கால்சியம், 23 கிராம் இரும்பு சத்து, வைட்டமின் A சத்து கிடைத்துவிடும்.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்ததால்தான், முருங்கைக் கீரையை "ஆபத்பாந்தவன்" என்கிறார்கள்.. முருங்கைக்கீரையை அளவுக்கு அதிகமாக வேக வைக்கும்போது, அதிலிருக்கும் சத்துக்கள் வீணாகி முருங்கைக்கீரையின் பயன்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.. அதனால்தான் வெந்து கெட்டது முருங்கை என்று ஒரு பழமொழியே உண்டு.












Click it and Unblock the Notifications