இவங்கெல்லாம் மீன் எண்ணெய் சாப்பிட கூடாது.. தினம் 1 மீன் மாத்திரை போதுமே, வீட்டில் "குட்நியூஸ்" வரும்
சென்னை: இதயத்தையும், சருமத்தையும் கவசம் போல பாதுகாக்கும் மீன் எண்ணெய் மாத்திரைகளின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? யாரெல்லாம் இந்த மாத்திரையை சாப்பிடக்கூடாது தெரியுமா?
இதயம் சிறப்பாக செயல்பட உதவுவதற்கு உறுதுணையாக இருப்பது கடல் மீன்கள் ஆகும்.. மீன்களை நேரடியாக உண்ண முடியாதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடலாம்.

இதயம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு இந்த மீன் மாத்திரைகளைதான், டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.. வாரத்தில் 2 முறையாவது மீன் வகைகளை சாப்பிடும்படி சமீபத்தில்கூட இதய நோய்களுக்கான அமெரிக்க அமைப்பு (American Heart Association) அறிவுறுத்தியிருந்தது.
மருந்துகள்: அந்த அளவுக்கு மருத்துவ குணம் நிறைந்த இந்த மீன் எண்ணெய்கள், ஒமேகா 3 அதிகமுள்ள, சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளில் இருந்தே, தயாரிக்கப்படுகின்றன.. குறிப்பாக, திமிங்கலம் போன்ற பெரிய மீன்களை நாம் சாப்பிடுவதில்லை என்பதால், அதிலிருந்து மீன் எண்ணெய் தயாரிப்பார்கள்.
மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடும்போது, மாரடைப்பு அபாயம் அதிகமாக காரணமான கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.. ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவும் கட்டுப்படுகிறது.. மன அழுத்ததை போக்கி, சுறுசுறுப்பை தரக்கூடிய தன்மை மீன் எண்ணெய் மாத்திரைகளுக்கு உள்ளது.
குழந்தை பேறு: பாலியல் ஆரோக்கியத்தை இந்த மீன் எண்ணெய் மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. மீன் எண்ணெய்யை தினமும் சாப்பிடுவதால், ஆண்மை அதிகரித்து குழந்தை பேறு பெறும் வாய்ப்பையும் அதிகரிக்க செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மூட்டுகளில் வலி, முழங்கால் வலி, முடக்குவாதம் போன்ற தொந்தரவுகளை தடுக்கவும், இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் உதவுகின்றன.. அதனால்தான், கால்சியம் குறைபாடு உள்ள பெண்களுக்கு இந்த மீன் எண்ணெய்யை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் நோயான ரிக்கெட்ஸ் நோயை போக்குவதற்கு இந்த மீன் எண்ணெய்யைதான் மருந்தாகிறதாம்.
ஆஸ்துமா: புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மையும் இந்த மாத்திரைகளுக்கு உண்டு. சுவாச பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வு தருபவை இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள்.. குறிப்பாக, ஆஸ்துமா பிரச்சனையையே இந்த மாத்திரை தீர்க்கிறதாம்.
நரம்புகளில் உண்டாகும் பாதிப்புகளையும் நீக்குகிறது. சருமம் பளபளப்பாக இருக்கவும், பொலிவுடன் காணப்படவும் மீன் எண்ணெய் மாத்திரைகள் துணை புரிகின்றன.. அத்துடன் கண்பார்வை குறைபாடுகளும்.. கண்பார்வையும் கூர்மை பெறும்.. வயிற்றிலுள்ள புண்களை ஆற்ற வேண்டுமானால், மீன் எண்ணெய்யே மருந்தாகின்றன.
வரப்பிரசாதம்: மூளையின் செயல்பாட்டுத்திறனையும் இது அதிகரிக்க செய்கிறது.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மீன் எண்ணெய் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகள் எரிப்பதை விரைவுப்படுத்துகிறது.
ஆனால், மீன் எண்ணெய் மாத்திரையை அதிகமாக சாப்பிடக்கூடாது.. நிறைய மீன் மாத்திரைகளை சாப்பிட்டால் வயிறு உபாதைகள் ஏற்படலாம்.. தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்படும்.. அத்துடன், ஈறுகள், மூக்கில் ரத்தப்போக்குக்கு வரலாம். அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருபவர்களும், மீன் எண்ணெய் மாத்திரை எடுத்து கொள்ளக்கூடாது.. காரணம், ஆபரேஷன் நடைபெற்ற இடத்தில் ரத்தக்கசிவு அதிகமாக ஏற்படுமாம்.
ரத்த அழுத்தம்: அதேபோல, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இந்த மாத்திரையை தவிர்க்கலாம்.. எனவே, ஆரோக்கியமாக இருப்பவர்கள், உடலில் எந்தவித நோயும் இல்லாமல் இருப்பவர்கள், ஒருநாளில் ஒன்றரை டீஸ்பூன் மட்டுமே இந்த எண்ணெய்யை சாப்பிடலாம்.. அதுவும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சாப்பிட வேண்டும்.












Click it and Unblock the Notifications