இட்லி மாவு இருக்கா? நீங்க நைட்டில் தோசை சாப்பிடறீங்களா.. நம்பலேன்னாலும் இதான் நிஜம்.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: நாம் உண்ணும் உணவு சரியாகவும், முறையாகவும், இருந்தாலே, பாதி நோய்கள் நம்மை அண்டாது என்கிறார்கள்.. அந்த வகையில், நொதித்தல் மற்றும் எதிரெதிர் பண்புகளை கொண்ட உணவுகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
எதிர் எதிர் குணங்கள் மற்றும் பண்புகளை கொண்ட உணவுகள் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டுமாம்.. உதாரணத்துக்கு குளிர்ச்சியும், உஷ்ணமும் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

எதிரெதிர் குணம்: பால் + கொள்ளு, தேன் + நெய் இப்படி இருவேறு குணங்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை முதல் ஸ்லோ பாய்சன் வரை கொண்டுபோய் விட்டுவிடுமாம்.
அதேபோல பிரியாணிக்கு வைக்கப்படும் வெங்காய பச்சடி முறையே தவறு என்கிறார்கள்.. தயிர் வெங்காயம் இரண்டையுமே ஒன்றாக சாப்பிடக்கூடாதாம். காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தந்துவிடுகிறது.. தயிருடன், மீன், கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்..
தயிர் கவனம்: அதேபோல தயிர் சூடுசெய்யக்கூடாது.. அப்படி சூடு செய்தால், தயிர் திரிவதுடன், நமக்கு பலவிதமான அலர்ஜியை ஏற்படுத்தும். மோர்க்குழம்பு செய்தாலும்கூட தயிரை, அவ்வளவாக கொதிக்க விட மாட்டார்கள்.
இரவில் தயிர் சாப்பிட்டாலும் செரிமானப் பிரச்சனை வந்துவிடுமாம்.. இதில் கீரையையும் சேர்த்து கொள்ளலாம். இறைச்சி வகைகளையும் சேர்த்து கொள்ளலாம். இவையெல்லாம் செரிமானம் ஆக தாமதமாகும் அல்லது அஜீரணம், வயிறு உபாதைகளை தந்துவிடும். பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிட்டால் சுடுநீர் அல்லது டீ குடிக்கலாம். ஆனால் கூல் டிரிங்ஸ் கூடாது.
செரிமானம்: செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு...அப்படிப்பட்ட தயிரை, சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் தாமதமடைந்து, சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். எனவே, மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள்.
தயிர் + கீரைகள், தயிர் + கருவாடு, மாம்பழம் + தயிர், இப்படி எதையுமே சேர்த்து சாப்பிடக்கூடாது.. தயிருடன் இவைகள் சேரும்போது, செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி, அஜீரணத்தை கொண்டுவந்துவிட்டுவிடும். குளிர்ச்சியான கற்றாழை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், உடனே அன்னாசி, பப்பாளி போன்ற சூடு தரக்கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது.
இட்லி, தோசை: அதேபோல நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும. இட்லி, தோசை, ஆப்பம், தயிர் போன்ற எல்லாமே நொதிக்க வைக்கப்பட்டவைதான். அதாவது புளித்து வைக்கப்பட்டு, அதன்பிறகு சமைக்கப்படுபவை.
இந்த நொதித்த உணவுகள் நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன.. ஜீரணத்தை அதிகரிக்க செய்கிறது.. நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது... உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க செய்கிறது. ஆனால் நொதித்த உணவுகளை இரவு நேரத்தில் மட்டும் தவிர்த்தால் நல்லது என்கிறார்கள். வயிறு உபாதைகள் உள்ளவர்கள், அஜீரணம், அசிடிட்டி, வாயு தொந்தரவு இருப்பவர்கள், இரவு நேரங்களில் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்..
கர்ப்பிணி பெண்கள்: கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் பெண்களும் இரவு நேரங்களில் நொதித்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. தோசை, இட்லி, தயிர், பனீர் இப்படி எதுவாக இருந்தாலும் இரவில் தவிர்க்கலாம்..
தாய்ப்பால் கொடுப்பதால், தாய்க்கு வயிறு உபாதை என்றால், குழந்தைக்கும் வயிற்று வலி ஏற்பட்டு பாதிப்பை தந்துவிடுமாம். எனவே, கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே இரவில் நொதித்தல் உணவுகளை சாப்பிட வேண்டும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications