துத்திக்கீரை.. தூள் கிளப்பும் துத்தி இலைகள்.. உடம்பெல்லாம் குளுகுளு துத்தி கீரை.. சபாஷ் "சக்கரகாய்"
சென்னை: மூலநோய் என்றாலே அதற்கு முதன்மையான மருந்தாக கருதப்படுவது இந்த துத்திக்கீரைகள்தான்.. அதேசமயம் மூலநோயை தவிர வேறு எந்த பிரச்சனைகளுக்கெல்லாம் இந்த துத்திக்கீரை பயன்படுகிறது தெரியுமா?
துத்தியின் இலைகளும், வேர்களும், பூக்களும், மட்டைகளும், மருத்துவ தன்மையை கொண்டவை. இதய வடிவத்தில் உள்ள இலைகள் தித்திப்பாக இருக்கும். காய்களில் சக்கரம்போல் காய்த்து கிடக்கும்.

மூலநோய்கள்: மற்ற கீரைகளை போலவே, பருப்புகளில் சேர்த்து, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தாலே மூலநோய்கள் நம்மை அண்டாது..
அல்லது மூல நோய் வந்தவர்கள், இந்த கீரையை சுத்தம் செய்து, கழுவி, விழுதாக அரைத்து, வெறும் வயிற்றில் ஒரு வாரத்துக்கு ஒரு டம்ளர் குடித்தாலே மூலநோய் குணமாகிவிடும். இந்த இலைகளை கழுவி அரைத்து கஷாயம் போல அல்லது சூப் போல வைத்து குடித்தாலும் மூலநோய் குணமாகும். மூலச்சூடும் நீங்கிவிடும். அல்லது இந்த இலையில் ரசம் வைத்து சாப்பிடலாம்.
பாதிப்புகள் : விளக்கெண்ணெய்யில் இந்த இலையை வதக்கி எடுத்து, வாழையிலை அல்லது வெற்றிலையில் சேர்த்து கட்டி, மூலம் பாதிப்புகள் இருக்கும் இடத்தில் கட்டினால், எரிச்சல், வீக்கம், வலி, குத்தல் நீங்கும்.
எந்தவகையில் பயன்படுத்தினாலும், மூலத்தை விரட்டுவதில் முதன்மையானதாக துத்தி இலைகள் விளங்குகின்றன.. அதேபோல உஷ்ணம் சம்பந்தமான நோய்களையும் இந்த துத்தி இலைகள் விரட்டுகின்றன.. குறிப்பாக சிறுநீர் எரிச்சலை தணிக்கும் தன்மை இந்த இலைகளுக்கு உண்டு,.. குடல்புண்ணை ஆற்றும் சக்தி இந்த இலைகளுக்கு உண்டு.. உடலில் அதிக உஷ்ணம் சேர்ந்துவிட்டால், பசும்பாலுடன் இந்த துத்தி கீரையை பொடி செய்து கலந்து குடித்தாலே, மொத்த உஷ்ணமும் விலகிவிடும்.
கொப்புளங்கள்: உடம்பிற்குள் உண்டாகும் உஷ்ண கோளாறுகளை தவிர, சருமத்தில் ஏற்படும் உஷ்ண கோளாறுகளையும் இந்த துத்தி இலைகள் போக்குகின்றன.. உடலில் கட்டிகள், புண்கள், கொப்புளங்கள் ஏற்பட்டுவிட்டால், துத்தி இலைகளிலிருந்து சாறு எடுத்து, அதில் அரிசி மாவு சிறிது கலந்து, கட்டிகள் மீது கட்டினாலே போதும்.. அவைகள் பழுத்து உடைந்துவிடும்.
அதிக உஷ்ணத்தால், பெண்களுக்கு கருப்பையில் கோளாறுகள் ஏதாவது ஏற்பட்டாலும், மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்பட்டாலும், இந்த துத்தி இலைகளை, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்..
துத்தி இலைகள்: பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் பிரச்சனையும் இந்த இலை விரட்டுகிறது.. துத்தி இலை, துத்தி பூ, துத்தி காய், துத்தி வேர், துத்தி வேர் என அனைத்து பாகத்தையும் கஷாயம் போல வைத்து குடித்தால், ஆண்மை அதிகரிக்குமாம்..
ஆக, உடலில் ஏற்படும் வாய்ப்புண்கள், வயிற்று புண்கள், முதல் ஆசனவாய் புண்கள், மூல நோய் கட்டிகள், சிறுநீர் எரிச்சல் என ஒட்டுமொத்த உஷ்ணத்தையும் தணிக்கும் திறன் இந்த துத்தி இலைகளுக்கு உண்டு என்பதால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த கீரைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications