முழங்கால் வரை தலைமுடி வேணுமா? பால் + மோர் + வெண்ணெய் + நெய்.. புதுசா இருக்குல்ல? .. பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: அடர்த்தி இல்லாத தலைமுடியால் அவதிப்படுகிறீர்களா? அக்கு அக்காக தலைமுடி கொட்டுகிறதா? இதோ ஒருசில எளிய டிப்ஸ்களை ட்ரை பண்ணலாமே.
தலைமுடிக்கு நெய், வெண்ணெய் இரண்டுமே போதுமான அளவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவை... வெண்ணையை பொறுத்தவரை, வைட்டமின் E, B12, புரோட்டீன் நிறைந்துள்ளதால், நேரடியாகவே தலைக்கு தடவினால், முடிஉதிர்வது நிற்கும்.. வெண்ண்யிலுள்ள கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், தலைமுடிக்கு வலுவை தருகின்றன.

நெய் கொழுப்பு: தலைமுடி ஆரோக்கியமில்லாமலும், உறுதியில்லாமலும் இருந்தால், நெய்யை தாராளமாக தடவலாம். நெய்யிலிருக்கும் கொழுப்பு அமிலமானது, தலைமுடியின் சேதத்தை தடுக்கிறது.. அத்துடன், வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்கி, தலைமுடியை உறுதியாக்குகிறது. வெறுமனே நெய் மட்டும் தடவாமல், சிறிது தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து, லேசாக சூடுபடுத்தி தடவினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
அதேபோல, வேப்பிலையையையும் நெய்யுடன் சேர்த்து எண்ணெய் போல தயாரித்து தடவினால், பொடுகு, இளநரைக்கும் சிறந்த மருந்தாக இருக்கும்.
வேப்பிலைகள்: இதற்கு ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் தேன், 15 வேப்பிலைகளை போட்டு இரவெல்லாம் அப்படியே ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இதனை லேசாக சூடுபடுத்திவிட்டு, வேப்பிலையை அதிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். பிறகு அந்த நெய்யை மட்டும், இளஞ்சூட்டிலேயே தலைக்கு தடவி 30 நிமிடம் ஊறவைத்து குளித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. பொடுகு, இளநரையும் தடுக்கப்படும்.
அதேபோல, நீர்மோர் தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்தினை வழங்குகிறது.. மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், தலைமுடிக்கு சிறந்த சத்துக்கள் கிடைக்கின்றன..
மோரை தலைக்கு தேய்த்து, மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்து வந்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும்.. தலைமுடியும் நீளமாக வளர உதவும்.
தேங்காய் பால்: அதேபோல, தேங்காய் பால் தலைமுடிக்கு நல்ல மருந்தாகும்.. இந்த தேங்காய்ப்பாலில், நார்ச்சத்துகள், புரதம், மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ் உள்ளதால், தலைமுடி நன்றாக வளர துணைபுரிகிறது.. தலைமுடியும் ஈரப்பதத்துடன் திகழும்..
தேங்காய் பால், ஆலிவ் எண்ணெய், தேன் கலந்து லேசாக சூடுசெய்து, தலைமுடியில் மசாஜ செய்தால், நன்றாக முடி செழித்து வளரும். அல்லது, தேங்காய் பாலுடன் தேன் மட்டுமே கலந்து தேய்த்து மசாஜ் செய்யலாம்,












Click it and Unblock the Notifications