கீழாநெல்லி இலை... இந்த 2 கீரைகளையும் விட்றாதீங்க.. மஞ்சள் காமாலையை விரட்டும் அருமையான கீழாநெல்லி ஜூஸ்
சென்னை: கல்லீரல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும், கீரைகள்தான் முக்கிய தீர்வாக உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. அந்தவகையில் 2 வகையான கீரைகளை பற்றி பார்ப்போம்.
உடல் பருமன், மதுப்பழக்கம் போன்றவைகள்தான், கல்லீரல் பாதிப்புகளுக்கு அடிப்படை காரணங்களாக அமைகின்றன.. அதேசமயம், கீரைகள், மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளும்போது, நைட்ரேட் கல்லீரலில் கொழுப்புச்சத்து சேராமல் தடுக்கின்றன..
பாதிப்புகள்: கல்லீரல் பாதிப்புகளுக்கு இவைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும், நீரிழிவு நோய், இருதய பாதிப்புகள், ரத்தக்கொதிப்பு போன்ற பல்வேறு தொந்தரவுகளுக்கு மிகச்சிறந்த நிவாரணமாக கீரைகள் அமைந்து கொண்டிருக்கின்றன..

குறிப்பாக கீரைகளில் உள்ள சத்துகள், இன்சுலின் அளவை சமநிலைக்கு கொண்டு வருவதால் டைப் 2 நீரிழிவு பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்க முடிகிறது.. இதனால், கல்லீரல் புற்றுநோய் வருவதையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
கீழாநெல்லி இலைகளை காயவைத்து, அதனுடன், அதிமதுரத்தையும், சீரகத்தையும் கலந்து அரைத்து பொடி செய்து சாப்பிட்டால், கல்லீரல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.
கீரைகளை பொறுத்தவரை, கரிசலாங்கண்ணி கீரையை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.. இரும்புச்சத்து, தங்கச்சத்து அதிக அளவில் உள்ளன.. அதனால்தான், "தங்கம் மூலிகை" என்று இந்த கீரையை சொல்கிறார்கள். இந்த கீரையை பருப்பு கடைந்து சாப்பிட்டு வரும்போது, கல்லீரல், மட்டுமல்லாமல் மண்ணீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பலம் பெறுகின்றன.. அவைகள் திறன்பட செயல்பட வைக்கக்கூடிய பண்பு இந்த கீரைக்கு உள்ளது..
நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தக்கூடியது.. உடலில் சேரும் அதிகமான கொழுப்பை இந்த கீரை கரைத்துவிடும்.
இந்த கரிசலாங்கண்ணியை கீழாநெல்லியுடன் கலந்து, மஞ்சள் காமாலைக்கு மருந்தாக தருவார்கள்.. அதாவது, இந்த 2 கீரையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்துக்கொண்டு, பால் அல்லது மோரில் கலந்து 7 நாட்கள் குடித்தாலே காமாலை குணமாகும்..
ஈரல் வீக்கமும் குறையும்.. ஆனால், இவைகள் இரண்டுமே மூலிகை இலைகள் என்பதால், புளி, காரம், எண்ணெய் சேர்க்காமல் அந்த நாட்களில் பத்தியம் இருக்க வேண்டுமாம். எனினும், மருந்தாக உட்கொள்ளும்போது, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே சாப்பிட வேண்டும்.
கீழாநெல்லி: இதில் கீழாநெல்லியை பொறுத்தவரை, இந்த கீரையை மட்டுமே சுத்தம் செய்து விழுதாக அரைத்து மோருடன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும். உடல்சூடு, வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.. சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும்..
கீழா நெல்லி பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.. இந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து, சீரகத்தூள், தேன் கலந்து குடித்தாலும் காமாலை நோய் குணமாகும்.. அல்லது இந்த செடியை காய வைத்து, பொடித்து, மோரில் கலக்கி சாப்பிட்டாலும் காமாலை தீரும்..
அதேபோல, மஞ்சள் காமாலை என்றில்லாமல், ஹெப்படைட்டிஸ்-B, ஹெப்படைட்டிஸ்-C போன்ற நோய்த்தொற்றுக்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீழாநெல்லிக்கு உண்டு.. இதை பயன்படுத்தும்போது, கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்கூட தடுத்து நிறுத்தப்பட்டுவிடுமாம்.
கீரைகள்: இந்த கீரையை தவிர, அரச மர இலைகளும் கல்லீரல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டாலும், இந்த இலைச்சாறுடன், பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் 3 முறை குடித்தாலே பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
அதேபோல, வாரத்திற்கு 3 முறை சிறுபசலை கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கமும் குணமாகிறது. முக்கியமாக சமையலில், பீட்ரூட் ஜூஸ் முள்ளங்கி சாறு, க்ரீன் டீ, மஞ்சள், இஞ்சி, பூண்டு, இப்படி அனைத்துமே கல்லீரலை காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
உணவுகள்: மொத்தத்தில், வைட்டமின் B, C, தாதுக்கள், குளுட்டோதயோனின் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும், கல்லீரல் ஆரோக்கியம் காக்கப்படும்
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications