குப்பைமேனி சூப்பர்.. முகப்பரு சட்டுன்னு போகணுமா? சோற்றுக்கற்றாழை, தக்காளி போதுமே.. பருக்கள் மறையும்
சென்னை: முகப்பருக்களை தடுக்க எளிய வழிமுறைகள் இருக்கிறதா? இயற்கையான முறையில் என்னென்ன தீர்வு காணலாம் தெரியுமா?
சரும பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே முகப்பரு வருவது தடுக்கப்படும்.

காய்கறிகள்: கீரைகள், காய்கறிகளை உணவில் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும்.. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்க்கலாம்.. சமையலில் அதிக எண்ணெய்யை குறைத்து கொள்ள வேண்டும்.. எப்போதுமே பிறர் உபயோகித்த தலையணை உறை, சோப், டவல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
முகப்பருக்கள் வந்தால், இதற்கு எத்தனையோ க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.. ஆனால், சிலசமயம், இந்த க்ரீம்களாலும் தீர்வு கிடைப்பதில்லை. டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும், லோஷன்களையும், கிரீம்களையும் பயன்படுத்தக் கூடாது.
வேப்பிலை: வேப்பிலை போன்ற சிறந்த கிருமிநாசினி வேறில்லை.. கொழுந்து வேப்பிலையை விழுதாக அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும். அல்லது சோற்றுக்கற்றாழையீன் நடுப்பகுதியில் உள்ள சதையை மட்டும் எடுத்து நன்றாக கழுவி, முகத்தில் தடவிவந்தாலும், தீர்வுகிடைக்கும்.
அருகம்புல் பொடியையும் + குப்பைமேனி இலைப்பொடியை இரண்டையும கலந்து பருக்களில் தடவலாம்.. முகப்பரு உள்ள இடத்தில் வெள்ளைப்பூண்டு வைத்து தேய்த்து, 10 நிமிடத்தில் கழுவினால் போதும்.. பப்பாளி சாறினை முகத்தில் கலந்து வரலாம்.
சருமம்: தேங்காய் எண்ணெய்யைவிட சிறந்த மருந்து வேறில்லை.. ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இவை எல்லாமே தேங்காய் எண்ணெய்யில் உள்ளன.. இந்த எண்ணெய் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது..
ஆனால் தேங்காய் எண்ணெய்யுடன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் தடவ கூடாது, முகத்தில் நேரடியாக எண்ணெய்யை பயன்படுத்தவும்கூடாது, எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் தடவவும்கூடாது.
தேங்காய் எண்ணெய்: வினிகரையும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுவதை தவிர்க்க வேண்டும். நாம் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக கடலை மாவையும் முகத்தில் தடவலாம். கடலை மாவில் மஞ்சள், கற்றாழை ஜெல் அல்லது தயிர் கலந்து தடவலாம். இந்த பொருட்கள் அனைத்தும் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
50 மில்லி நல்லெண்ணெய்யில் மிளகை 20 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்... பிறகு, இந்த கலவையை முகப்பரு உள்ள இடங்களில் தடவினால், பருக்கள் நீங்கும். எலுமிச்சம் சாறு + தண்ணீர் கலந்து, பரு உள்ள இடங்களில் தடவி கழுவிவந்தால் பருக்கள் மறையும்.
தக்காளி சாறு: தக்காளியில் சாறு எடுத்து, வெள்ளரிப்பிஞ்சு சேர்த்து ஊற வைத்து, முகத்தில் தடவி கழுவிவந்தாலும், பரு மறையும்... அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியையும் உரசி, முகப்பரு மீது தேய்க்கலாம்.. முகப்பருக்கள் அதிகமாக ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணர்களை அணுக வேண்டுமே தவிர, கடைகளில் எந்த மருந்தையும் வாங்கி பயன்படுத்தக்கூடாது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications