வேப்பிலை.. வியக்க வைக்கும் இலை.. லவங்கப்பட்டை ஒன்னு போதும்.. பளிச் பற்களுக்கு சூப்பர் டிப்ஸ் பாருங்க
சென்னை: வெண்மையான பற்கள், ஆரோக்கியமான ஈறுகள் தேவை என்பதே அனைவருக்குமான எதிர்பார்ப்பாகும்.. அந்தவகையில், பற்களையும், ஈறுகளையும் பலப்படுத்த, எளிமையான டிப்ஸ்களை பார்ப்போமா?
பற்களை சரியாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும், மஞ்சள் அல்லது பழுப்பு நிற கறைகள் ஏற்பட்டுவிடும்... இந்த கறைகளை நீக்காவிட்டால், பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகமாகி, பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகரித்து விடும் அபாயம் உண்டு.

பொதுவாக, ஈறுகளின் நிறத்தை வைத்தே, வாய் ஆரோக்கியம் அறியப்படுகிறது.. ஆரோக்கியமான ஈறுகள் என்றால், ரோஸ் கலரில் காணப்படும்.. இந்த இளஞ்சிவப்பு நிறத்தில் ஈறுகள் இருந்தாலே, அவைகள் பலம்மிக்க உறுதியான ஈறுகள் என்று அர்த்தம்.
ஈறுகள்: சிலருக்கு கருப்பு நிறத்தில் ஈறுகள் காணப்படும். மெலனின் படிவதால் இப்படியான கறுப்பு திட்டுகள் ஏற்படலாம்.. அல்லது சிகரெட் நிறைய பிடித்தாலும், கறுப்பு நிறமாக ஈறுகள் மாறலாம். பல் ஆரோக்கியம் சரியாக பராமரிக்கவில்லையானாலும், இப்படியான கருப்பு நிறம் தோன்றலாம்.. பல் இடுக்குகளில் உணவு துணுக்குகள் சிக்கி, பாக்டீரியாக்களை உருவாக்கி, மெல்லிய படலமாக ஈறுகளில் படிந்து, இப்படி நிறம் மாறலாம்..
மருந்துகள்: அதுமட்டுமல்ல, நாட்பட்ட வயிற்று புண்கள், தொண்டை சதை வளர்ச்சி, சைனஸ் நோய், சீரற்ற பல்லமைப்பு, ஸ்டீராய்டு மருந்துகள், பாதரசம், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கூல்டிரிங்ஸ், இப்படி எத்தனையோ காரணங்களினாலும், ஈறுகள் பாதிக்கப்படுகின்றன.
பற்கள் & ஈறுகளின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டுமானால், வீட்டு மருத்துவத்திலேயே அதை எவ்வாறு சரி செய்யலாம் தெரியுமா?
- உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.. இப்படி தினமும் 3 வேளையும் செய்யும்போது, ஈறுகளில் ரத்தப்போக்கு இருந்தாலும் நின்றுவிடும்.
- சீஸ் சாப்பிட வேண்டும். சீஸ் சாப்பிடுவதால், உமிழ் நீர் சுரந்து பற்களும், ஈறுகளும் பலப்படுகிறது..
- தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். இதனால், ஈறுகள் வறட்சியடையாமல் இருக்கும்.
- மஞ்சள் தூள், மிளகுதூள் இரண்டையும் சேர்த்து ஈறுகளில் வைத்து மென்மையாக மசாஜ் செய்யலாம்
- நெல்லிக்காய் இடித்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தல், ஈறுகள் வலுவடையும்
- நெல்லிக்காய் இலைகள், கொய்யா இலைகள், வேப்பிலைகள் இப்படி ஏதாவது ஒரு இலைகளை தண்ணீரில் ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்து வந்தால், பற்கள், ஈறுகள் பலப்படும்
- இரவு தூங்கும்முன்பு, ஈறுகளில் வேப்ப எண்ணெய்யை தடவி வர வேண்டும். இதனால், கிருமிகள், பாக்டீரியாக்கள் அழியும்.
- ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த, கிரீன் டீயையும் தவறாமல் குடிக்க வேண்டும். தினமும் பல் துலக்கியபிறகு, சிறிது கற்றாழை ஜெல்லை வாயில் போட்டு, 5 நிமிடம் கொப்பளித்து, வாயை கழுவி வந்தால் ஈறுகள் பலம்பெறும்
- கிராம்புகளை நசுக்கி பவுடராக்கி, அதனுன் தேன் கலந்து ஈறுகளில் தேய்த்து வந்தால், கருமை நீங்கும்
- கிராம்பு எண்ணெய்யையும், ஆயில் புல்லிங் போல பயன்படுத்தலாம்..
- ஆலிவ் ஆயிலுடன், எலுமிச்சம் சாறு கலந்து, ஈறுகளில் தடவினால், ஈறுகள் உறுதிப்படும்.
- பல் துலக்கிய பிறகு, தண்ணீருடன், திரிபலா சூரணத்தை கலந்து வாய் கொப்பளிப்பது வந்தாலும், ஈறுகள் பலப்படும்.
- கற்றாழையில் நிறைய பண்புகள் உள்ளதால், அவைகளை வைத்து, ஈறுகளில் மசாஜ் செய்து வந்தாலும், கருமை நீங்கும்
- கிரீன் டீயில், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் திறன்கள் உள்ளதால், தினமும் கிரீன் டீயை குடித்து வரலாம்.
ஸ்பெஷல் பொடி: பற்களில் உள்ள கறைகளை மட்டுமல்ல, ஈறுகளில் உள்ள கருமையை போக்குவதற்காகவே, ஸ்பெஷல் லவங்கப்பட்டை பவுடரை நாம் தயார் செய்து கொள்ளலாம்.. சிறிது வேப்பிலைகள் + கல் உப்பு + பென்டோனைட் களிமண், லவங்கப்பட்டை என அனைத்தையும் சேர்த்து மிக்சியில் நைசாக பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
இந்த பொடியில் தினமும் பற்களை மென்மையாக துலக்கி வந்தாலே போதும்.. பலன்கள் கிடைக்கும். இந்த 4 பொருட்களிலுமே ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளதாலும், பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலு சேர்க்கின்றன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications