திங்கள்கிழமைகளில் வரும் மாரடைப்பு.. மிகவும் மோசமானது.. மக்களே உஷார்.. ஆய்வில் பகீர் தகவல்
சென்னை: மிகவும் மோசமான மாரடைப்புகள் திங்கள்கிழமைகளில்தான் வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
மாரடைப்பு... இதை உயிர்க் கொல்லி என்றே சொல்லலாம். மாரடைப்பு காரணமாக பெரும்பாலானோர் இறந்துவிடுகிறார்கள். சிலர் முதலுதவி சிகிச்சை அளித்தவுடன் பிழைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவரை அணுகி உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அதை பொன்னான நேரம் என அழைக்கிறார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் நின்று விடுவதுதான் மாரடைப்பு என்கிறார்கள்.

ஹார்ட் அட்டாக்கும் கார்டியாக் அரெஸ்டும் வெவ்வேறானவை. ஹார்ட் அட்டாக் வந்தாலாவது பிழைக்க கொஞ்சம் சான்ஸ்கள் இருக்கின்றன. ஆனால் கார்டியாக் அரெஸ்ட் வந்தால் கொஞ்சம் சிரமம்தான் என்கிறார்கள். இந்த நிலையில் ஹார்ட் அட்டாக்குகள் திங்கள்கிழமைகளில் வருவதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
பெல் ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களின் மருத்துவர்களின் கூற்றுபடி, 10528 நோயாளிகளிடமிருந்து தரவை ஆய்வு செய்ததில் வேலை வாரத்தின் தொடக்கத்தில் மிக மோசமான மாரடைப்பு ஏற்பட்டது என தெரியவந்தது. ஜூன் 4ஆம் தேதி பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டியில் ஆய்வை வழங்கிய மருத்துவர்கள் ஒரு பெரிய கரோனரி தமனி முழுவதுமாக தடுக்கப்படும் போது ஏற்படும் மாரடைப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
அயர்லாந்தில் 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கு இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மேற்கண்ட விதமான மாரடைப்பு விகிதங்களில் அதிகரிப்பானது வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கள்கிழமைகளில்தான் அதிகரித்தது.
அது போல் எதிர்பார்த்ததைவிட அதிகமான மாரடைப்பு விகிதங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இருந்தன. எனினும் இந்த திங்கள்கிழமை நிகழ்வு ஏன் ஏற்படுகிறது என்பதை இதுவரை விஞ்ஞானிகளால் முழுமையாக விளக்க முடியவில்லை. முந்தைய ஆய்வுகள் திங்கள்கிழமை அன்று மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவை உடலின் தூக்கம் அல்லது விழித்திருக்கும் சுழற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் கூறுகின்றன.
இங்கிலாந்தில் இது போன்ற மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 30,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க அவர்களுக்கு அவசர மதிப்பீடு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது. இது தடுக்கப்பட்ட கரோனரி தமனியை மீண்டும் திறக்கும் செயல்முறையாகும். இந்த ஆய்வுகள் மூலம் இந்த கொடிய நோய் குறித்து மருத்துவர்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்றும் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications