முருங்கை பட்டையை விடாதீங்க.. ஆச்சரியத்தை காட்டும் வாழைமர பட்டைகள்.. இத்தனை சமாச்சாரமா? சூப்பர்ல
சென்னை: முருங்கை மரத்தை போலவே, இலை, காய், பூ, பட்டை என அனைத்து பாகங்களிலும் நன்மை தரக்கூடியது வாழைமரம். அதிலும், வாழை மரப்பட்டைகள் செய்யும் நன்மைகள் ஏராளம்.

முருங்கை பட்டையை உலர்த்தி பவுடராக்கி வைத்து கொண்டால், தலைவலி, காய்ச்சலுக்கு, மூட்டுவலி பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்..
முருங்கை வேர் + பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. அதனால், முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்றுபோட்டு வந்தால் தீர்வு கிடைத்துவிடும்.
முருங்கை பட்டை: முருங்கைப் பட்டையை இடித்து சாறாக்கி, குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்து வைத்து கொண்டால், சொறி, சிரங்கு, வீக்கங்கள், கட்டிகள், புண்கள் போன்ற சரும பிரச்சனைகளுககு பயன்படுத்தலாம். காதுவலி இருப்பவர்களுக்கும், முருங்கை பட்டை நல்ல தீர்வை தரும்.. அதேபோல, இந்த பட்டையின் மேலுள்ள தோலை நீக்கிவிட்டு, நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால், உள்ளுறுப்புகள் பலப்படும்.. ரத்தம் சுத்தமாகும்..
நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள், இந்த முருங்கை பட்டையை வாரத்தில் ஒருநாளாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ரசம் அல்லது சூப் போல செய்து மிளகு சேர்த்து இந்த முருங்கை பட்டையை சமைத்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் பறந்துவிடுமாம்.. ஜீரண சக்தியும் அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும். வயிற்றில் புண் இருந்தாலும் ஆறிவிடும்.
வாழைமர தார்கள்: இன்னும் எத்தனையோ நன்மைகளை இந்த முருங்கை பட்டை நமக்கு தருகிறது.. இதுபோலவே, வாழைமரத்தின் தார்கள் என்று சொல்லக்கூடிய வாழை மர பட்டைகளும் நமக்கு பெரிதும் உதவுகின்றன..
வாழை மரங்களில் கிடைக்கும் வாழை பட்டைகள், வாழை நார்கள், பூக்களை கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், இலைகளும்கூட, வெட்டப்பட்ட பட்டைகள் என்றாலும்கூட, அவைகளில் ஆக்சிஜனை சில நாட்கள் மெல்ல வெளியிட்டுக்கொண்டே இருக்குமாம்.. அதனால்தான், பூக்கடைக்காரர்கள், மார்க்கெட்டுகளில் பூ வாங்கினால்கூட, அதை வாழை இலையில் தான் கட்டித்தருகிறார்கள்.
வாழைநார்: அதுமட்டுமல்ல, கீரைகள், காய்கள், பழங்கள், போன்றவைகளையும், வாழை மட்டைகளில் வியாபாரிகள் வைத்திருப்பார்கள்.. விவசாயிகள், இந்த வாழை மர பட்டையிலிருந்துதான், பூ கட்டும் தயார் செய்கிறார்கள்... அதாவது, வாழை வெட்டப்பட்ட மரங்களின் கழிவு மரத்தில் இருந்து, தனித்தனி பட்டைகளாக உரித்து எடுப்பார்கள்.. பிறகு அவைகளை 4 நாட்கள் வரை வெயிலில் உலர்த்தி, அதன் பிறகு, நார்களாக பிரித்தெடுப்பார்கள்.. அந்தவகையில், விவசாயிகளின் வருவாய்க்கும் இந்த வாழை மட்டை உதவுகிறது.

கெட்டுப்போன சாப்பாடாக இருந்தாலும்சரி, அல்லது விஷம் கலந்த சாப்பாடாக இருந்தாலும்சரி, வாழை இலையில் வைத்தால், அந்த இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒருவித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும்.. இதைவைத்தே உணவின் விஷத்தன்மையை அறிந்து கொள்ளலாம்..
விஷமுறிவு: அதனால்தான், விருந்துக்கு எதிரியே அழைத்தாலும், தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என்று நம்முடைய முன்னோர்கள் சொன்னார்கள்.
சமைத்த உணவில், நமக்கே தெரியாமல் நஞ்சு ஏதாவது இருந்தாலும், அதையும் வாழை நீக்கிவிடும்.. அதனால்தான், பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள்.. அதன் அடிக்கிழங்கில் இருந்து சுரக்கும் நீரை குடிக்க தருவார்களாம். இது விஷத்தை முறிக்கும் பண்புடையது. அந்தவகையில், வாழை நம்மை கைவிடாமல், என்றுமே வாழ வைக்கக்கூடியது..
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications