ஈறுகள் ஈர்க்கணுமா? ரோஸ் கலரில் ஈறுகள் வேணுமா.. பல் ஈறுகளை பலப்படுத்தும் அற்புத டிப்ஸ்கள்
சென்னை: பற்களின் ஈறுகள் பலவீனமாக இருக்கிறதா? ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுகிறதா? ஈறுகளில் கருப்பு நிறம் படிந்திருக்கிறதா? இதற்கெல்லாம் எளிய முறையில் தீர்வுகளை காண முடியுமா?
ஈறுகளின் நிறத்தை வைத்தே, வாய் ஆரோக்கியம் அறியப்படுகிறது.. ஆரோக்கியமான ஈறுகள் என்றால், ரோஸ் கலரில் காணப்படும்.. இந்த இளஞ்சிவப்பு நிறத்தில் ஈறுகள் இருந்தாலே, அவைகள் பலம்மிக்க உறுதியான ஈறுகள் என்று அர்த்தம்.

ஈறுகள்: சிலருக்கு கருப்பு நிறத்தில் ஈறுகள் காணப்படும். இதற்கு பலவகையான காரணங்கள் இருக்கலாம்.. அதிகப்படியான மெலனின் படிவதால் இப்படியான கருப்பு திட்டுகள் ஏற்படலாம்.. அல்லது சிகரெட் நிறைய பிடித்தாலும், கருப்பு நிறமாக ஈறுகள் மாறலாம்.
பல் ஆரோக்கியம் சரியாக பராமரிக்கப்படவில்லையானாலும், இப்படியான கருப்பு நிறம் தோன்றலாம்.. பல் இடுக்குகளில் உணவு துணுக்குகள் சிக்கி, பாக்டீரியாக்களை உருவாக்கி, மெல்லிய படலமாக ஈறுகளில் படிந்து, இப்படி நிறம் மாறலாம்..
மருந்துகள்: அதுமட்டுமல்ல, நாட்பட்ட வயிற்று புண்கள், தொண்டை சதை வளர்ச்சி, சைனஸ் நோய், சீரற்ற பல்லமைப்பு, ஸ்டீராய்டு மருந்துகள், பாதரசம், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கூல்டிரிங்ஸ், இப்படி எத்தனையோ காரணங்களினாலும், ஈறுகள் பாதிக்கப்படுகின்றன.
ஈறுகளின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டுமானால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.. உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.. இப்படி தினமும் 3 வேளையும் செய்யும்போது, ஈறுகளில் ரத்தப்போக்கு இருந்தாலும் நின்றுவிடும். இரவு தூங்கும்முன்பு, ஈறுகளில் வேப்ப எண்ணெய்யை தடவினால், பாக்டீரியாக்கள் அழியும்.

கற்றாழை ஜெல்: அதேபோல ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த, கிரீன் டீயையும் தவறாமல் குடிக்க வேண்டும். தினமும் பல் துலக்கியபிறகு, சிறிது கற்றாழை ஜெல்லை வாயில் போட்டு, 5 நிமிடம் கொப்பளித்து, வாயை கழுவி வந்தாலும் ஈறுகளின் ஆரோக்கியம் காக்கப்படும்.
அதேபோல, கிராம்பு எண்ணெய்யையும், ஆயில் புல்லிங் போல பயன்படுத்தலாம்.. ஆலிவ் ஆயிலுடன், எலுமிச்சம் சாறு கலந்தும், ஈறுகளில் தடவினால், ஈறுகள் உறுதிப்படும். அல்லது, பல் துலக்கிய பிறகு, தண்ணீருடன், திரிபலா சூரணத்தை கலந்து வாய் கொப்பளித்து வந்தாலும், ஈறுகள் பலப்படும்.
ஆயில் புல்லிங்: நெல்லிக்காய் பொடி கால் கப் எடுத்துக் கொண்டு, மஞ்சள்- 1 ஸ்பூன், பட்டைப் பொடி - கால் ஸ்பூன், கிராம்புப் பொடி - அரை ஸ்பூன், உப்பு - 1 ஸ்பூன் போன்றவற்றையும் சேர்க்க வேண்டும். பிறகு, ஒரு வாணலில் நல்லெண்ணெய் கால் கப் சேர்த்து, இந்த பொடிகளையும் அதில் கொட்டி கலந்து, ஒரு பாட்டிலில் எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.. இந்த எண்ணெய்யில் தினமும் ஆயில் புல்லிங் செய்துவந்தால், ஈறுகள் பலப்படும். பற்களும் கெட்டிப்படும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications