கீழாநெல்லி.. புற்றுநோய் முதல் காமாலை வரை ஓடிரும்.. கீழாநெல்லியில் இத்தனை நன்மையா? விடாதீங்க பெண்களே
சென்னை: பற்கள் முதல் கல்லீரல் வரை, உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்வதில் மிகப்பெரிய பங்கு இந்த கீழாநெல்லிக்கு உண்டு. பேருதவி புரிகிறது அதேசமயம், பெண்களுக்கும் பலவழிகளில் இந்த கீழாநெல்லி உதவுகிறது?
கீழாநெல்லி இலைகளுக்கு அடியில், தலைகீழாக சின்ன சின்ன காய்கள் குவிந்திருக்கும்.. இலைகளுக்கு கீழே உள்ளதால்தான், கீழ்க்காய் நெல்லி என்று பெயர் வந்தது.. கீழ்வாய் நெல்லி என்றும் சொல்வார்கள்..

கீழாநெல்லி கீரை ஒன்று இருந்தாலே போதும், வயிறு தொடர்பான அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.. பெரும்பாலும், மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால், அதை தீர்ப்பதற்காக இந்த கீழாநெல்லியை பயன்படுத்துவார்கள். அதனால்தான், கல்லீரலின் நண்பன் என்றும் இந்த கீரையை சொல்வார்கள்.
குளிர்ச்சி கீரை: இந்த கீரையை சுத்தம் செய்து விழுதாக அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால், காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும். உடல்சூடு, வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.. சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும்.. இதெல்லாம் அடிப்படையான விஷயம் என்றாலும், பெண்களுக்கு எந்த வகையில், இந்த கீரை பயன்படுகிறது தெரியுமா?
பொதுவாக சில பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்த போக்கு ஏற்படும். இதனால், ஹீமோகுளோபின் பிரச்சனையும் அதிகமாகிவிடும். இந்த ரத்தசோகையை கீழாநெல்லி எளிதாக தீர்க்கிறது.
அதேபோல, மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி அதிகமாகிவிட்டால், கீழாநெல்லியை பொடியாக அரைத்து, அதனுடன் 3 முதல் 6 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டாலே போதும்.. தீர்வு கிடைக்கும். அதேபோல, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், அதற்கும் கீழாநெல்லி தீர்வை தருகிறது.
வெள்ளைப்படுதல்: இந்த கீழாநெல்லி கீரையின் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் கலந்து குடித்துவரலாம். அல்லது ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 3 டம்ளர் தண்ணீரில் இதை சேர்த்து சுண்ட காய்ச்சி, காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவந்தாலே வெள்ளைப்படுதல் நோய் குணமடையும். அதுமட்டுமல்ல, மலட்டுத் தன்மையையும் இந்த கீரை போக்குகிறது.
தலைமுடி உதிருகிறதா: தலைமுடி பிரச்சனைக்கும் கீழாநெல்லி உதவுகிறது.. தலைமுடி உதிர பெரும்பாலும் காரணம், உடல் சூடுதான்.. இந்த கீழாநெல்லியோ குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால், தலைமுடி உதிர்வு பிரச்சனை இருந்தால், கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வு சட்டென்று நிற்கும்.
கண்எரிச்சல்: கீழாநெல்லி தைலம் என்றே கடைகளில் விற்கிறது.. இதில் குளித்து வந்தால், தலை சுற்றல், கை, கால், கண் எரிச்சல் போன்றவை தீரும்.. அல்லது கீழாநெல்லியை அம்மியில் விழுதாக அரைத்து தலைக்கு தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்தாலும் நிவாரணம் கிடைக்கும்.. மனமும் அமைதி பெறும்.
அதேபோல, முக அழகுக்கும் இந்த கீரை உதவுகிறது.. இந்த இலைகளுடன் கடலை மாவு சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்து, ஊறவைத்து குளித்தால், சரும நோய்கள் அண்டாது. கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், சர்க்கரை கட்டுக்குள் வரும் என்பார்கள்.. ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், டாக்டரின் அட்வைஸ்கள் இல்லாமல் இதை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications