Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேப்பிலை அசத்துதே.. ஜஸ்ட் ஒரு கைப்பிடி வேப்பிலை போதும்.. உச்சந்தலை முதல் சருமம்வரை காக்கும் வேப்பிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயாளிகளின் அருமருந்தாகும் வேப்பிலையின் பயன்கள் அனைவரும் அறிந்தது என்றாலும், தலைமுடிக்கும், சருமத்துக்கும் இந்த வேப்பிலையை எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் என நிறைய சத்துக்கள் இந்த வேம்புவில் அடங்கியிருப்பதால்தான், ஆயுர்வேதத்தில் வேப்பிலைக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது..

Do you know the Excellent benefits of Neem Leaves and Neem leaf is the Best Treatment for Healthy Skin, Hair growth

உடல்நலக்கோளாறு: தினமும் நாலஞ்சு வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே பல உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது இந்த வேப்பிலை.. கெட்ட கொழுப்பை அகற்ற கூடியது..

வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து காலையில் விழுங்கினால், குடல்பூச்சிகள் வெளியேறும்.. அலர்ஜியும் விலகும்.. ரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். புற்றுநோய் வளர்ச்சியும் தடைபடும். சுவாசம் தொடர்பான பிரச்சனையும் நீங்கும். அம்மை நோய் புண்களின் தீவிரம் தடுக்கப்படும். சொறி, சிரங்கு, புண்கள், காயங்களுக்கு நிவாரணம் தரும்.

முகப்பொலிவு: இப்படி எத்தனையோ பண்புகள் இந்த வேப்பிலைக்கு இருந்தாலும், முகப்பொலிவுக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் அளவுக்கு அதிகமாகவே இந்த வேப்பிலை உதவுகிறது.

முகத்தில் கருப்பான புள்ளிகள் படர்ந்து காணப்பட்டாலோ, அல்லது தழும்புகள், பருக்கள் நிறைந்திருந்தாலே வேப்பிலையிலேயே தீர்வு காணலாம்.. முக்கியமாக ஹார்மோன் பிரச்சனையாலும், ஒழுங்கற்ற மாதவிடாய், மொனோபாஸ் போன்றவற்றினாலும் பெண்களுக்கு மங்கு வரக்கூடும்.. இதற்கும் வேப்பிலை மருந்தாகிறது.

காய்ச்சாத பால்: ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பாலை எடுத்து, அதில், பஞ்சை தொட்டு முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பிறகு, கொழுந்து வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து விதுபோல அரைத்து, மங்கு, பருக்கள், கருமையான திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி விட வேண்டும். நன்றாக காய்ந்தபிறகு, கழுவிவிடவேண்டும். இப்படி செய்து வரும்போது முகத்தில் மங்கு மறைய துவங்கும்.

அல்லது வேப்பிலை + ஆரஞ்சு தோல் இரண்டையும் தண்ணீரில் சேர்த்து ஊறவைத்து அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் தேன், தயிர், சோயா பால் சேர்த்து பேஸ்ட் போல கலந்து முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தாலும், பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கிவிடும்.

வேப்பிலைகள்: தலையில் சொரி, சிரங்கு, அரிப்பு, பேன், பொடுகு, தொற்றுநோய்கள் போன்ற எந்த தொந்தரவு இருந்தாலும், வேப்பிலை எண்ணெய்யை தடவி வரலாம்.. அல்லது வேப்பிலையை அரைத்து, அந்த விழுதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து குளித்து வந்தாலும், முடி கொட்டுவது நின்றுவிடுவதுடன், தலைமுடி வலுப்பெறும்.

அல்லது, தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி, அதில் வேப்பிலை எண்ணெய்யையும் சேர்த்து, தலைக்கு தடவி வரலாம். அல்லது ஒரு கையளவு வேப்பிலையை சுடுநீரில் கொதிக்க எடுத்துக் கொண்டு, அந்த வேப்பிலைகளை அரைத்து பேஸ்ட் போல தலையில் தடவி வந்தாலும், தலைமுடி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தலைமுடி ஆரோக்கியம்: அல்லது முட்டையின் வெள்ளைக்கருவுடன் வேப்பிலையையும் சேர்த்து விழுதுபோல அரைத்து தடவி குளித்து வரலாம். அல்லது வேப்பிலையை விழுதுபோல அரைத்து, சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி குளித்துவந்தாலும், தலைமுடி வறட்சி, பொடுகு தொல்லை நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+