வெறும் 6 இலை போதும்.. ஆச்சரியத்தை தரும் வேப்பமர பட்டை.. இத்தனை அற்புதங்களா? அசத்தும் வேப்பிலை
சென்னை: வேப்பிலைகள் எந்த அளவுக்கு நமக்கு உபயோகமாகிறதோ, அதுபோலவே, வேப்ப மரத்தின் பட்டைகளும் நமக்கு பெருத்த நன்மைகளை தருகின்றன.
வேப்பிலை.. ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால், ஆயுர்வேதத்தில் வேம்பு-க்கென்றே ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கிறது.. வெறும் நாலஞ்சு இலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே பல பிரச்சனைகள் விலகுகின்றன.

சர்க்கரை நோய்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வேப்பிலைக்கு உள்ளது.. ஒரு லிட்டர் தண்ணீரில், 20 வேப்பிலையை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி, சாப்பிடுவதற்கு முன்பு, அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.
வேப்பிலைச்சாறு, ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது.. கெட்ட கொழுப்பை அகற்ற கூடியது..வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து காலையில் விழுங்கினால், குடல்பூச்சிகள் வெளியேறும்.. அலர்ஜியும் ஓடிரும்.
ரத்தசோகை: ரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். புற்றுநோய் வளர்ச்சியை தடைபடுத்துகிறது.. சுவாசம் தொடர்பான பிரச்சனையை நீக்குகிறது. அம்மை நோய் புண்களின் தீவிரத்தை தடுக்கிறது. சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமிநாசினியாக உதவுவது..
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல், நகச்சுத்தி போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம். வெறும் வேப்பிலையை அரைத்து கட்டினால், ஆறாத ரணம்கூட ஆறும்.. பழுத்து உடையாத கட்டியும் உடைந்து குணமாகும். சொரி, சிரங்கு, தலைமுடி உதிர்தல், பொடுகு பிரச்சனைக்கும் இந்த விழுதை பயன்படுத்தலாம். வேப்பிலையின் பயன்கள் இவ்வாறாக இருந்தாலும், வேப்பம்பட்டையின் பயன்களும் ஆச்சரிய நன்மைகளை தரக்கூடியது..
கற்பூரம்: கசப்பு சுவையை கொண்ட இந்த பட்டை, ஜீரணத்துக்கு நல்லது.. குளிர்ச்சியை தரக்கூடியது.. குடல்வாயுவை அகற்றக்கூடியது.. பித்தத்தை நீக்கக்கூடியது.. பசியை தூண்டக்கூடியது.. ஏராளமான ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இந்த மரப்பட்டையில் உள்ளதால், தோல் நோய்களுக்கு மருந்தாக உதவக்கூடியது.. இந்த பட்டையுடன் சிறிது கற்பூரத்தை சேர்த்து அரைத்து, இதனை பருக்கள், புண்களின் மீது தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
அரிப்பு, தேமல் பிரச்சனைகளும் தீரும்.. வெறும் பட்டையை நீரில் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குளித்து வந்தாலே, சருமம் பாதுகாக்கப்படும். அலர்ஜிகள் நீங்கிவிடும்.. அரிப்பு பிரச்சனையும் தீர்ந்துவிடும். 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி நீங்கும். நோய்கள் நம்மை அணுகாது என்கிறார்கள்..
மரப்பட்டைகள்: உடல் சூட்டினை தணிக்கக்கூடிய இந்த வேப்ப மரப்பட்டையானது, காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடியது.. இந்த மரப்பட்டையை நீரில் போட்டு, பாதி நீராகும் வரை கொதிக்க வைத்து குடித்தாலே போதும். காய்ச்சல் குறைய துவங்கும்.. அல்லது வேப்பமர பட்டையுடன் 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து, பசும்பாலில் கலந்து குடித்தாலும் காய்ச்சல் குணமாகும்
வேப்ப மரப்பட்டையில் கிருமி நாசினிகள் உள்ளதால், தொற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கிறது.. காயங்களையும் ஆற்றக்கூடியது. இந்த மரப்பட்டையுடன் மஞ்ச பொடியும் சேர்த்து சருமத்துக்கு உபயோகிக்கலாம்.

கொரோனா வைரஸ்: வேப்பமரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு, கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... சமீபத்தில் விஞ்ஞானிகள், இதனை விலங்குகளுக்கும் தந்து பரிசோதித்துள்ளனர்.. அப்போதுதான், இந்த உண்மை நிரூபணமாகி உள்ளது. வைரஸ் மட்டுமல்லாமல், அதன் புதிய உருமாற்றங்களுக்கு எதிராகவும் செயல்படும் திறன் கொண்டுள்ளதாம் இந்த பட்டை... அதுமட்டுமல்ல, மனித செல்களுக்குள் வைரஸ் நுழைவதைத் தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications