கோரைக்கிழங்கு.. அசத்தல் + ஆரோக்கியமான வேர்க்கிழங்கு.. கோரை என்ற கோரைக்கிழங்கின் ஆச்சரியம் தெரியுமா?
சென்னை: இந்திய மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத தாவரம்தான் கோரைக்கிழங்கு.. இந்த கிழங்கு நமக்கு தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கோரைக்கிழங்கு புல்வகைச் சேர்ந்த சிறுசெடியாகும்.. கோரை என்று பெயர்.. இந்த செடியின் வேர்க்கிழங்குகளைதான், கோரைக்கிழங்கு என்பார்கள்.. கசப்பு சுவையாக இருக்கும்.

நாட்டு மருந்து: காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் எளிதாகவே கிடைக்கும் கோரைக்கிழங்கை பச்சையாகவும் பயன்படுத்தலாம்.. காயவைத்து பவுடர் செய்தும் பயன்படுத்தலாம்.. நாட்டு மருந்து கடைகளில் கிழங்கும் கிடைக்கிறது.. பொடியும் கிடைக்கிறது. எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் போக்கும் திறன் இந்த கோரைக்கிழங்கிற்கு உண்டு.. அதிலும் மலேரியா காய்ச்சலை அசால்ட்டாக குணப்படுத்த கூடியது.
குழந்தைகளுக்கு வயிறு வலி என்றால், இந்த கிழங்கைதான் மருந்தாக பயன்படுத்துவார்கள்.. இதனால், நாட்பட்ட வயிற்று போக்கும் நின்றுவிடும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கோரைக்கிழங்கை அதில் நசுக்கி போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு தந்து வந்தால், அஜீரண கோளாறு நீங்கும்.. குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்கும்.
கோரைக்கிழங்கு: குளிர்ச்சி மிகுந்த கோரைக்கிழங்கை காய வைத்து, பவுடர் செய்து வைத்து கொண்டால், பல உடல்நல உபாதைகளுக்கு பயன்படுத்தலாம். தினமும் 2வேளை, 1 டம்ளர் பாலில் இந்த பவுடரில் அரை ஸ்பூன் கலந்து குடித்தாலே, மூட்டு வலிகள் பறந்துவிடும்.
கோரைக்கிழங்கு, இஞ்சி இரண்டையும் அரைத்து, அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் புழுக்கள் வெளியேறிவிடும். மாதவிடாயை தூண்டக்கூடியது இந்த கிழங்கு.. இளந்தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருக்க இந்த கிழங்கை தருவார்கள்..
பச்சையான கோரை கிழங்குகளை கழுவி சுத்தம் செய்து, அரைத்து மார்பகத்தில் பூசுவதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வெள்ளைப்படுதல் தொந்தரவு இருந்தால், மாதவிடாய் நேரத்தில் வலி இருந்தால், இந்த கிழங்கை பயன்படுத்தலாம்.. கர்ப்பப்பை புண்களை ஆற்றக்கூடிய தன்மை இந்த கிழங்கிற்கு உண்டு.
சரும பாதுகாப்பு: இந்த கிழங்கு, சரும பாதுகாப்பை தரக்கூடியது.. தோலிலுள்ள சுருக்கத்தை நீக்கி, பொலிவை தருகிறது.. கோரைக்கிழங்கை, பசும் பால் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்தால், சரும அலர்ஜிகள் நீங்குவதுடன், வியர்வை நாற்றமும் நீங்கிவிடும்.
உடல் வலியை போக்கும் கோரைக்கிழங்கு, தைலங்களில் நறுமணத்துக்காக சேர்க்கப்படுகிறது.. கோரைக்கிழங்கு பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஒன்றாக கலந்து சருமத்தின் மீது தடவி குளிக்கலாம்.
முக சுருக்கம்: கோரைக்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடி இந்த மூன்றையும் பாலில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், முக சுருக்கம் நீங்கிவிடும்.. சருமமும் பளபளப்பு பெறும். முகப்பரு எப்போதுமே வராமல் காக்கப்படும்.. அதுமட்டுமல்ல, எந்தவிதமான சரும நோய்களையும் இந்த கோரைக்கிழங்கு அண்டவிடாது.












Click it and Unblock the Notifications