நெல்லிக்கனி.. சர்க்கரை நோயாளி பூசணிக்காய் சாப்பிடலாமா? நீரிழிவு நோயாளிகளின் அற்புத பழங்கள்.. வாவ்
சென்னை: நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள், காய்கறிகள் என்னென் தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் பூசணிக்காயை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, அதிக அளவு சிறுநீர் கழிப்பதும், உடல் சோர்வுகளும் இருக்கும்.. இதை சரிக்கட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டி உள்ளது. ஆனால், எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடுவதாக ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், பருப்புகள், விதைகள், கீரைகள், முளைகட்டிய தானியங்கள், இவைகளை தவிர்க்கவே கூடாது என்பது அடிப்படையான விஷய... காரணம், பருப்புகளில் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவு, அத்துடன் நார்ச்சத்துக்களும் அதிகம்.. இந்த இரண்டுமே ரத்த சர்க்கரை அளவை அவ்வளவாக பாதிக்காது...
புரதங்கள்: மேலும், வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள், இரும்புச்சத்துக்கள் என அனைத்துமே இவைகளில் கிடைத்துவிடுகிறது. ஆனால், என்ன பழங்களை சாப்பிடலாம்? என்ன காய்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம் என்பதிலும் குழப்பம் வந்துவிடுகிறது..
பழங்களை பொறுத்தவரை, சர்க்கரை சத்து அதிகம் இல்லாத நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை சாப்பிடலாம் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகள் தினமும் 4, 5 பழங்களையும் சாப்பிடலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
கொய்யாப்பழம்: முக்கிய கொய்யாப்பழம் சாப்பிடலாம்.. இதில் வைட்டமின் A அதிகமும், கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் உள்ளன.. அதேபோல, சர்க்கரரை சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் மலச்சிக்கலை சீர் செய்கிறது.
அதேபோல் நாவல் பழத்தை தவிர்க்கவே கூடாது.. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை விரைவில் கட்டுப்படுத்தும் தன்மை இந்த பழத்துக்கும் உண்டு, இதன் கொட்டைகளுக்கும் உண்டு. நாவல் பழத்தின் கொட்டைகள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக விரைவாகக் கட்டுப்படுத்துகிறது.. அதைவிட ஆச்சரியம், நாவல் வேர்களை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால், சர்க்கரை கட்டுக்குள்ளேயே இருக்கும்.
பழங்கள்: அன்னாசி, ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, பப்பாளி, சிட்ரஸ் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை ஓரளவு சாப்பிடலாம்.. காலையில் வெறும் வயிற்றில் ஒரு முழு நெல்லிக்காயுடன் அதைவிட 2 மடங்கு அதிகமாக உள்ள பாகற்காய் சேர்த்து அரைத்து ஜூஸ் எடுத்து குடித்து வந்தால் மிகவும் நல்லது.. இதனால், இன்சுலின் தாராளமாகவே சுரக்கும்.
வாழைப்பழங்களில் மஞ்சள் வாழைப்பழங்களை வாரத்துக்கு 2 சிறிய பழங்களை மட்டுமே சாப்பிடலாம். பச்சை வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழமாக உள்ளது. அதாவது, பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள், இந்த பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
பச்சை வாழைப்பழம்: இந்த பழத்தில், ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை தாமதாமாக்குவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன..
அதுமட்டுமல்ல, பச்சை வாழைப்பழத்திலுள்ள ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகள், செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.. மேலும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறதாம். பழுத்த வாழைப்பழங்களை விட பழுக்காத வாழைப்பழங்களில் குறைவான சர்க்கரையும், அதிக ஸ்டார்ச் எதிர்ப்புத் திறன் உள்ளது..
செவ்வாழை: அதேபோல, செவ்வாழையும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என்கிறார்கள். காரணம், இதில், நார்ச்சத்து அதிகமாக உள்ளன.. நேந்திரம் பழங்களிலும் நார்ச்சத்து நிறைய உள்ளது. எனினும், ஒரு நாளைக்கு, ஒரு சிறிய வாழைப்பழம் மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.
காய்கறிகளில், வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெண்டைக்காய், கேரட், முட்டைக்கோஸ், பச்சை நிறக்காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள், வெள்ளைப்பூண்டு, மஞ்சள், பீன்ஸ், வெந்தயம் உள்ளிட்ட உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.
மஞ்சள் பூசணி: மஞ்சள் நிற பூசணி நார்கள், ஆக்ஸிஜனேற்றத்தின் புதையல் என்கிறார்கள். இதை உணவில் அளவோடு சேர்த்து கொள்வதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்... பல்வேறு நாடுகளில், இந்த பூசணிக்காய், சர்க்கரை நோய்க்கான சிகிச்சையாகவே பயன்படுத்தப்படுகிறதாம்..
காரணம், பூசணிக்காயில் பாலிசாக்கரைடுகள் என்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. எனவே, பூசணிக்காயுடன், வெங்காயம், கேரட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றையும் சேர்த்து சமைப்பது கூடுதல் நன்மைகளை தரும்.
பழங்கள்: அதேபோல, அரிசி சாதம் சாப்பிட்டால் சுகர் ஏறிவிடும் என்றால், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்குமாம்.. எனவே, சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களின் உதவியுடன், மேற்கண்ட பழங்களையும், காய்கறிளையும் "அளவுடன்" எடுத்து கொள்வதால் ஆரோக்கியம் பெருகும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications