வெறும் இலை.. அதுவும் பூசணிக்காய் இலை.. புற்றுநோயை அடித்து விரட்டும் "பூசணி இலைகள்" அட்டகாச நன்மைகள்
சென்னை: பூசணிக்காய் போலவே, பூசணிக்காய் இலைகளும் நமக்கு பல நன்மைகளை தரக்கூடியது.. எந்தெந்த வகைகளில் நமக்கு உதவுகிறது தெரியுமா?
பொட்டாசியம், கால்சியம், போலிக் அமிலம், இரும்புச் சத்து, வைட்டமின் E, B6, A, C, மக்னீசியம், பாஸ்பரஸ், தயமின், நியசின், நார்ச்சத்து, ரிபோப்ளவின், கொப்பர், மாங்கனீஸ், புரோட்டீன் போன்ற சத்துக்கள் கலந்துள்ளன..

வயது முதிர்ச்சி: இதில் ஏகப்பட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், வயது முதிர்ச்சியை தள்ளி போடுகிறது.. சருமத்துக்கு பாதுகாப்பை தருகிறது.. பூசணிக்காய் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவ்வளவு எளிதில் வயதாவது கிடையாது... வைட்டமின் உள்ளதால், சரும பாதுகாப்பை அள்ளி வழங்குகிறது.. சருமத்தில் ஏற்படும் காயங்கள், தழும்புகள், போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
போதாக்குறைக்கு வைட்டமின் A நிறைந்திருப்பதால், கண்பார்வைக்கும் தூண்டுகோலாகிறது.. இதனால், வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை இந்த இலைகள் தடுக்கின்றன.
பூசணி இலைகள்: பூசணி இலைகளில், சர்க்கரை நோயாளிகளுக்கு பூசணிக்காய் இலைகள் பேருதவி புரிகின்றன.. ஹைப்போ கிளைசெமிக் விளைவு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தாலே, புற்றுநோய் அண்டாது.. அப்படியிருக்கும்போது, இந்த பூசணி இலைகளில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்கும் நிரம்பி உள்ளன.
ஆண்கள், பெண்கள் இருவருக்குமான குறைபாட்டை இந்த பூசணி இலைகள் நிவர்த்தி செய்கின்றன.. விந்தணுக்களில் குறைபாடு பிரச்சனைகளை போக்குவதுடன், விந்தணுக்களின் வளத்தையும் அதிகரிக்க செய்து, குழந்தை பாக்கியத்தை தருகிறது இந்த இலைகள்... கருவுறுதல் திறனை அதிகரிக்க பெண்கள் இந்த இலைகளை சமையலில் சேர்த்து கொள்ளலாம்..
தாய்மார்கள்: இளம்தாய்மார்களுக்கு பால் சுரக்க இந்த இலைகள் உதவுகின்றன.. நிறைய கால்சியம் சத்துக்கள் இதில் உள்ளதால், பால் சுரக்க தூண்டுகோலாகின்றன. இதனால், கால்சியம் பற்றாக்குறையை போக்குவதுடன், பற்களும் எலும்புகளும் வலிமையை தருகிறது..
நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால், உடலிலுள்ள கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகிறது.. இதனால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. இருந்தால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் குறைவு... இந்த இலையிலுள்ள பொட்டாசியம் சீரற்ற இதய துடிப்பை தடுக்கவும் பேருதவி புரிகிறது.
பெருங்குடல் புற்று: ஜீரண சக்தியை இந்த இலைகள் அதிகரிக்க செய்வதால், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்குகின்றன.. இதனால், குடல் பாதுகாப்பு காக்கப்படுகிறது.. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய், பூசணி இலை மூலம் குணப்படுத்த முடியும். அதுமட்டுமல்ல, குடல் இயக்கத்தை எளிதாக்கும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளது.. சீரான குடல் இயக்கம் நடக்க துணைபுரிவதால், பெருங்குடலில் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை எளிதாக தடுக்கப்பட்டு விடுகிறது.
இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், அனீமியா பிரச்சனையை அடித்து விரட்டுகிறது.. மற்ற இலைகளை போல் இந்த பூசணி இலை கசப்பதில்லை.. அதனால், பொரியல் தவிர, சூப், சாலட்கள் செய்து, அதில் சேர்த்து சாப்பிடலாம்.
பூசணி சாறு: பூசணி இலையில் சாறு எடுத்து, சரும காயங்களுக்கு பயன்படுத்தலாம்.. குறிப்பாக, தீக்காயம், கடித்தல், வீக்கம், புண், காயங்கள் போன்றவற்றை இந்த சாறு குணப்படுத்தக்கூடியது..
பூச்சி கடித்தாலும், அதற்கும் நிவாரணமாக இதை பூசலாம். இந்த இலையில் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளதால், காயங்கள் வேகமாக ஆற தூண்டுகிறது. பூசணி இலைச்சாறு, பற்களுக்கும் பாதுகாப்பானது.. கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்த இந்த சாறு, வாய் ஆரோக்கியத்தை காக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், பித்தப்பையில் கற்கள் இருந்தாலும், இந்த சாறு குடித்து வரலாம்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications