சுக்கான் கீரை.. சுக்கு சுக்காக நோயை நொறுக்கும் சுக்காங்கீரை.. ரத்த கொதிப்பை அடக்கும் 4 வகையான இலைகள்
சென்னை: உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், என்னவெல்லாம் உணவில் தவிர்க்கலாம்? என்னவெல்லாம் அதிகம் சாப்பிடலாம் தெரியுமா? ரத்த அழுத்த பாதிப்பை குறைப்பதற்கு, 4 வகையான கீரைகள் பெரிதும் உதவுவதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
ரத்த அழுத்தம் என்றாலே, "உப்பு" தான் நம் கண்முன்னே வந்து நிற்கும் பொருளாகும்.. உப்பு மட்டுமில்லாமல் சர்க்கரையும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது என்பதை பலரும் அறிவதில்லை.. அதிகபடியாக சர்க்கரையே பலவித நோய்களுக்கும் காரணமாகிவிடுகின்றன. எனவே, தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்களில் மிக முக்கியமானது உப்பு, சர்க்கரையாகும்.

மதுபானங்கள்: அதேபோல, மது அருந்துவதும், நிறைய காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஊறுகாய் உட்பட பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்துவிட்டு, சமையலில் பூண்டு, இஞ்சி, மஞ்சள், போன்ற அழற்சி எதிர்ப்பு பண்புகளும், பூஞ்சை பண்புகளும் உள்ள மூலிகைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் சுடுநீருடன், 2, 3 பூண்டு பற்களை மென்று சாப்பிடுவது பெரும் பலனை தருகிறதாம். அல்லது துளசி, ஏலக்காய் பயன்படுத்தி டீ போட்டு குடிக்கலாம்.
சுக்கான் கீரை: கீரைகளில், ரத்த அழுத்தத்திற்கு பேருதவி புரிவது சுக்கான் கீரையாகும்.. இந்த கீரையின் அருமை தெரியாததால், சமையலில் அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதில்லை.. ஏதாவது ஒரு பருப்புடன் இந்த கீரையை சமைத்து சாப்பிட்டால், ரத்த அழுத்த பிரச்சனை நீங்கும்.. ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
அதுமட்டுமல்ல, தைராய்டு பிரச்சனை, எலும்பு தேய்மானம் பிரச்சனை, ஆர்த்ரைடிஸ் பிரச்சனை, இந்த கீரையில் சூப் தயாரித்து குடிக்கலாம். இதயத்தை பாதுகாக்கக் கூடியது.. ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது இந்த கீரை..
முருங்கைக்கீரை: முருங்கைக்கீரைகள் ரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன.. ரத்த அழுத்தம் குறைந்தாலும் சரி, ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சரி, இரண்டிற்குமே இந்த முருங்கைக்கீரை பயன்படும்.. முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டாலே, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
அதேபோல, அரைக்கீரையும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த கீரையை சுத்தம் செய்து கழுவி, அதிலிருந்து சாறு எடுத்து, அதில் சீரகத்தை ஊற வைத்து, காயவைத்து தூளாக்கி, தினமும் 2 வேளைக்கு, 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சீராகும்.. ரத்த அழுத்த நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது அகத்திக்கீரை..
4 கீரைகள்: எனவே, சுக்கான் கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை போன்றவைகளை உணவில் சேர்த்து கொண்டாலே, ரத்த அழுத்த பிரச்சனை நீங்கிவிடும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications