Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கையிலையை விட்றாதீங்க.. கண்ணெல்லாம் தண்ணீரா.. "உன் கண்ணில் நீர் வழிந்தால்".. இது மட்டும் போதுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்ப பார்த்தாலும் சிலருக்கு, கண்ணில் நீர் சுரந்து கொண்டேயிருக்கும் ஏன் தெரியுமா? இதற்கான காரணங்கள் என்ன? இதை எளிய முறையில், ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியுமா?

நம் உடம்பில், ரத்தம் பாயாத பகுதி என்றால், அது கண்ணில் உள்ள கருவிழிகள்தான்.. கண்ணுக்கு பின்புறம் உள்ள கண் திரவம் (Aqueous Eye Fluid) மூலமே கருவிழி தனக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெற்றுக் கொள்கிறது.

Do you know the Excellent Drumstick Leaves and Healthy Remedies for Watering Eyes

நோய்த்தொற்று: கண்களில் மிக முக்கியமானது கண்ணீர்தான்.. இந்த கண்ணீர் மூலம்தான், காற்று மண்டலத்திலிருந்து ஆக்சிஜனை நேரடியாக கருவிழி கிரகிக்கிறது. நோய்த்தொற்றிலிருந்து கண்களை காப்பதும் இந்த கண்ணீர் தான். கண்ணில் நீர் சுரக்கவில்லையானால், பார்வையே மங்கிவிடும்.. கருவிழியின்மீது கண்ணீர் படர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுவே அளவுக்கு அதிகமாகவும் போய்விடக்கூடாது. இப்படி கண்ணில், நீர் வடிய ஆரம்பித்துவிட்டால், கை வைத்து கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றும்.. இந்த கண்ணீர் வடிய சில காரணங்கள் சொல்லப்படுகின்றன..

வாய்வழி மருந்துகள்: உலர் கண் நோய்க்குறி, சில வாய்வழி மருந்துகள், தன்னுடல் தாக்கு நோய், தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்கள், ஒவ்வாமை, சில வகை கண் மருந்துகள், கண் தொற்று பாதிப்பு இப்படி பல பாதிப்புகள் காரணமாக கண்ணில் நீர் வடியலாம். அவ்வளவு ஏன், வைத்த கண் வாங்காமல், டிவியை குழந்தைகள் பார்த்து கொண்டிருந்தாலோ அல்லது வீடியோ கேம்ஸ், என செல்போனில் நீண்ட நேரம் விளையாடினாலோ, கண்கள் சீக்கிரமாக களைத்து போய்விடும்..

கண்ணுக்கு நாம் தரும் இதுபோன்ற அதிகப்படியான வேலைப்பளு மற்றும் தொடர் நெருக்கடிகளால், கண்ணிலிருந்து நீர் வடியலாம். அல்லது கண்ணீர்ச் சுரப்பிகளில் நிறைய கண்ணீர் சுரக்கலாம் அல்லது, Nasolacrimal duct என்று சொல்லப்படும் நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்படும்போதும் கண்ணில் நீர் வழியலாம். அல்லது நரம்புத் தளர்ச்சி ஏற்படும்போது கண்ணைச் சரியாக மூட முடியாதவர்களுக்கும் கண்ணில் நீர் வடியலாம். அல்லது பயம் காரணமாகவும் சிலருக்கு கண்ணில் நீர் வரலாம்.

திரிபலா பொடி: கண்ணில் நீர் வடிவதை சாதாரணமாக அதை விட்டுவிடவும் கூடாது.. வீட்டு மருத்துவத்தை வைத்து, அதுவும் ஆரம்பத்திலே இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.. ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரால் கண்களை கழுவி வந்தால், கண் அழற்சி, வறட்சி, சிவத்தல், கண் எரிச்சல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்..

அல்லது ரோஜா இதழில் சிறிது தண்ணீரை ஊற்றி, இரவெல்லாம் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், இந்த தண்ணீரால் கண்களை கழுவ வேண்டும்.. ரோஸ்வாட்டரில் நிறைய கெமிக்கல் இருக்கலாம். அதனால், வீட்டிலேயே ரோஜா தண்ணீரை வைத்து கண்களால் கழுவி வரலாம்.. அல்லது புளிக்காத சுத்தமான தயிரை ஒரு சொட்டு கண்ணில் விட்டு வரலாம்.. பசும்பாலையும் இப்படி கண்ணில் விடலாம்..

Do you know the Excellent Drumstick Leaves and Healthy Remedies for Watering Eyes

கண்களை கழுவ வேண்டும்: தனியா விதைகள், சோம்பு, இரண்டையும் இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் இந்த தண்ணீரை மட்டும் எடுத்து கண்களை கழுவி வரலாம்.

அதேபோல, சுத்தமான பருத்தி துணியில், நந்தியாவட்டை பூக்களை சுற்றி, இதனை கண்களின் மீது கட்டிக் கொள்ள வேண்டும். தூங்கும்போதோ அல்லது ஓய்வு நேரங்களிலோ இப்படி செய்தால், கண்ணில் நீர் வடிவது நிற்கும்.. அல்லது மருதாணி இலைகளையும் விழுதுபோல அரைத்து கண்களின்மீது கட்டி வந்தாலும் கண்ணில் நீர் வடிதல் குணமாகும். முருங்கைக்கீரை வெறுமனே வாணலில் லேசாக வதக்கி கண்களின்மீது கட்டி வந்தாலும், கண் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.

டாக்டர்கள்: கண்ணில் நீர்வடிய துவங்கும் ஆரம்ப நிலையில் இவைகளை வீட்டிலேயே நாம் செய்து கொள்ளலாம். ஆனால், நீர் அதிகமாக வடிந்தாலோ அல்லது கண்ணில் சிறு பிரச்சனை என்றாலும், உடனடியாக டாக்டரை சந்தித்தே ஆக வேண்டும். நாமாகவே மெடிக்கல் ஷாப்புகளில் மருந்துகளை வாங்கி கண்ணில் போடக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+