ஈர்க்குச்சி ஈர்க்குதே.. வேப்பங்குச்சி, முருங்கை குச்சி.. அப்பறம் ஆலங்குச்சி.. ஆயுளை கூட்டும் குச்சி
சென்னை: இயற்கையின் படைப்பில் அனைத்துமே அற்புதம்தான்.. அந்தவகையில், ஒவ்வொரு மரமும் மனித குலத்துக்கு நன்மைகளை வாரி வழங்குகின்றன.. அந்தவகையில், அந்த மரங்களின் குச்சிகளும்கூட, மகத்துவம் நிறைந்தவையே.. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
முருங்கை குச்சியை ஈர்க்கு என்பார்கள்.. இந்த ஈர்க்குகளில் அதிகளவு கால்சியம் உள்ளது.. இதனால் பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் நல்லது.. அதேபோல, 40., 45 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மேனோபாஸ் பிரச்சனை ஏற்படும்..

அப்போது, மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும்.. இதுபோன்ற தொந்தரவு உள்ளவர்கள், இந்த முருங்கை ஈர்க்குச்சியை உணவில் சேர்த்துக் கொண்டால், உபாதைகள் தீரும்.. இளம் பெண்களும், இந்த ஈர்க்குச்சியை சமைத்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்.
முருங்கை குச்சி: இந்த குச்சிகளை வைத்து சூப் செய்வார்கள். இந்த முருங்கை காம்புகளை வைத்து, சூப் குடித்தால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால் வெளியேறிவிடும்.. வறட்டு இருமலும் நீங்கும்.. உடல் பலம் பெறும்.. மலச்சிக்கலும் தீரும். கால்சியம் நிறைய உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் நல்லது.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலி நீங்கும்..
இதிலுள்ள அத்தனை நன்மைகளும் கறிவேப்பிலை குச்சிகளிலும் உள்ளன.. ரசம் உள்ளிட்டவை செய்யும்போது, கறிவேப்பிலைகளுடன், இந்த குச்சிகளையும் இடித்து சேர்த்தால், இரட்டிப்பு நன்மை கிடைக்கும். அரச மரத்தின் குச்சிகளை எடுத்துக் கொண்டால், சாப்பிடும்போது, ரத்தத்திலுள்ள பித்தத்தை தீர்க்கிறது.
இந்த மரத்தின் குச்சிகளிலிருந்து வெளிவரும் புகையானது, சுவாசிப்பவர்களின் சளி, மூச்சுத்திணறல் பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது. அதிக களைப்பு இருந்தாலும், அவைகளை நீக்கி உடல் தசைகளை வலுவேற்றக் கூடியது,..
வாய் ஆரோக்கியம்: வேப்பங்குச்சிகளை பொறுத்தவரை, கசப்பு நிறைந்த மருந்து என்றே சொல்லலாம்.. வாய் ஆரோக்கயத்தை பேணக்கூடியது.. வாயை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், பாக்டீரியாக்கள் உருவாகி, மஞ்சள் நிறத்திற்கு காரணமான நிறமிகளை உற்பத்தி செய்துவிடும்.
மேலும், ரத்தத்தில் பில்ருமின் அளவு அதிகரித்து, கடைசியில் சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டுபோய் விடும். எனவே, வாரம் ஒருமுறையாவது, வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் துலக்கினால், வாயிலுள்ள நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகுவது தடுக்கப்படும்..

வேப்பங்குச்சி: இந்த வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இதனால், ஈறுகளும் வலுவாகின்றன.. பற்களும் வெண்மையாகின்றன.
தேவைப்பட்டால், வேப்பங்குச்சியில் பல் துலக்கும் முன்பு, அதில் உப்பு, கடுகு எண்ணெயை இரண்டையும் கலந்து தேய்த்தால், டபுள் பலன் கிடைக்கும். அதேபோல, ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தாலும் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும். ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்பதே உண்மையான கூற்று.
சந்தன மரத்தின் குச்சிகளை எடுத்து கொண்டால், பூம்புகார் காட்சியகம், சருவோதய சங்கம், கைரளி, காதி பவன் விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.. விலை மதிப்புள்ள இந்த சந்தனக் குச்சியை முகத்தில் தடவினால், முகம் பொலிவு பெறும்.












Click it and Unblock the Notifications