வெறும் 4 இலையே போதும்.. பீட்ரூட் கீரைகளின் நம்ப முடியாத ஆச்சரியம்.. பீட்ரூட்டை இனி இலையோடு வாங்குங்க
சென்னை: உடல் உஷ்ணத்தை போக்கி, கல்லீரலை பாதுகாக்கும் கீரைதான் இந்த பீட்ரூட் கீரை.. ஏகப்பட்ட சத்துக்களை கொண்டிருக்கும் பீட்ரூட் இலைகளின் மகத்துவம் என்ன தெரியுமா?
பீட்ரூட் காய்களை ரத்தக்காய் என்றே சொல்வார்கள்.. அந்த அளவுக்கு அனீமியாவை விரட்டி, ரத்தவிருத்தியை அதிகரிக்கக்கூடியது.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்களுக்கு, தலையாய உதவுவது இந்த பீட்ரூட் கிழங்குகள்தான்.

கனிம சத்துக்கள்: பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் என நிறைந்துள்ளன.. ஆனால், பீட்ரூட் இலையில், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் C, நிறைய வைட்டமின்களும், கனிமங்களும் அடங்கியுள்ளன..
அதாவது, பீட்ரூட்டில் உள்ள சத்துக்களை போலவே, அதன் இலைகள் முழுவதிலுமே சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான், இந்த இலைகளை பொடியாக நறுக்கக்கூடாது என்பார்கள். செடிகளில் பறிக்கும்போதும், கத்தியை வைத்து வெட்டி எடுக்க கூடாதாம்.. கையிலேயே பறிக்க வேண்டுமாம்.
குளிர்ச்சி கீரை: உடல்சூட்டினை போக்கும் தன்மை இந்த குளிர்ச்சி நிறைந்த கீரைக்கு உண்டு.. கண் வீக்கம், கண் அழற்சி போன்றவை இருந்தால், பீட்ரூட் கீரையிலிருந்து சாற எடுத்து, கண் இமைகளில் பூசினால் நிவாரணம் கிடைக்கும். அதேபோல, உஷ்ணத்தினால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் இருந்தாலும், பீட்ருட் கீரை உதவுகிறது.. சிறுநீரைப்பெருக்கி அதனை மிதமாக வெளியேற்ற செய்கிறது..
கால்சியமும், வைட்டமின் K இரண்டுமே பீட்ரூட் இலையில் அதிகம் என்பதால், ரத்தம் உறைவதற்கும் புதிய செல்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது..
இந்த கீரையிலுள்ள மாங்கனீசு, எலும்பு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. பீட்ரூட் கீரைகளை சாப்பிட்டு வருவதால், கண்கள் கூர்மை பெறுகின்றன.. புற ஊதா ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கிறது.. நினைவாற்றலையும் பெருக்கக்கூடியது என்பதால் வளரும் குழந்தைகளுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தரலாம்.
நரம்புகள்: பீட்ரூட் கீரைகளில் காணப்படும் நரம்புகள்தான், கரோட்டின் என்ற உயிர்சத்துக்களை பெற்றிருக்கின்றன. இந்த கரோட்டின் வைட்டமின் A சத்துக்களை அதிகம் சேர்த்து வைத்து கொள்கிறது. குறைவான கலோரி இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடியக்கூடிய இந்த பீட்ரூட்டை, இலைகளுடன் சேர்த்தே வாங்குவதுதான் இனி நல்லது.
பீட்ரூட் இனிப்பாக இருந்தாலும், இதன் இலைகள் ரத்த சர்க்கரையை குறைக்கின்றன என்பது ஆச்சரியமான தகவலாகும்.. கல்லீரலின் கொழுப்பை கரைக்கும் தன்மையும் இந்த இலைகளுக்கு உண்டு. அடிக்கடி பீட்ரூட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகிறது, செரிமான கோளாறுகள் நீங்குகிறது.. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது..
தலைமுடி வளர்ச்சி: இந்த இலைகளை தலைமுடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.. இந்த பீட்ரூட் இலைகளை, தண்ணீரில் சிறிது நேரம் வேகவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துவிட வேண்டும். அந்த இலைகளை மட்டும் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து வந்தாலே முடி கொட்டுவது நின்றுவிடும்.












Click it and Unblock the Notifications