முருங்கை பூக்கள்.. அடடே.. மலைக்க வைக்கும் மணத்தக்காளி கீரை.. நாடி நரம்புகளின் நலன் காக்கும் கீரைகள்
சென்னை: நரம்புகளை வலுப்படுத்தவும், நரம்பு தளர்ச்சியை நீக்கவும், பல்வேறு வகையான கீரைகள் அருமருந்தாக திகழ்கின்றன. அவைகளில் ஒருசிலவற்றை பற்றி பார்ப்போம்..!!
ஒருவர் நிலைத்தடுமாற்றத்தால் அவதிக்கு ஆளானால், அவர்களது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றே அர்த்தம்.. இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால, அலட்சியம் கூடாது.. அது அவர்களை கீழே விழச்செய்து, காயங்களை ஏற்படுத்திவிடும்.

தலைவலி: கை நடுங்குதல், பதற்றம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், புரோட்டின் மற்றும் வைட்டமின் உணவுகளை சரிவர சாப்பிடாததுதான் பிரதான காரணமாக இருக்க முடியும்.. கடுமையான தலைவலி வந்தாலும், நரம்பு பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஒருவரது கழுத்துடன் தொடர்புள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதுவும் மோசமான தலைவலியை உண்டுபண்ணிவிடும்.
எனினும், நரம்புகளுக்கு வலு தருவது முதல் நரம்பு தளர்ச்சியை நீக்குவது வரை, உணவிலேயே சரிசெய்துவிடலாம். அந்தவகையில் உதவக்கூடியதுதான், முருங்கை வேர்கள்.. இந்த வேரில் வைட்டமின்கள், தாதுக்கள், பயோஆக்டிவ் கலவைகள், துத்தநாகம், இரும்பு போன்றவை நிறைந்துள்ளன. வேர்களை கழுவி சுத்தம் செய்து, கஷாயம் போல செய்து குடிக்கலாம்
நரம்புத்தளர்ச்சி: அல்லது முருங்கை வேரை பொடி செய்து, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டியும் சாப்பிடலாம்.. அல்லது முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் 2 வேளை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சிகள் முற்றிலுமாக நீங்கும்...!
அதேபோல, முருங்கை பூக்களையும் உபயோகப்படுத்தலாம். இந்த பூக்களில் நிறைய பொட்டாசியம் உள்ளது, நரம்புகள் செயலிழந்தால், அதை இந்த முருங்கை பூவில் தயாரிக்கப்படும் கஷாயம் சரி செய்கிறது.. முருங்கை பூக்களை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
வல்லாரைக்கீரை: இதில், வல்லாரைக்கீரையின் பங்கு அபரிமிதமானது.. மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக இந்த கீரை விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இக்கீரைகள் பேருதவி புரிகின்றன.. வெரிகோஸ் வெயின் என்று சொல்லக்கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கு, இந்த வல்லாரைக்கீரை அருமருந்தாகிறது..
சமையலில் அடிக்கடி மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்ள வேண்டும் இதனால், நரம்புத்தளர்ச்சி நீங்கும். அதேபோல, பசலைக்கீரையை வாரம் 2 முறையாவது கடைந்து சாப்பிட்டு வர வேண்டும்.. வைட்டமின் A, B, C, புரதம், இரும்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ள பசலைக்கீரை, சாப்பிட்டு வந்தால், சாப்பிட நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன், உடல் உஷ்ணமும் தணியும் என்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications