முருங்கைக்கீரை மெடிசின்.. இதென்ன தண்ணீரிலுமா? முருங்கை பூவை பச்சையா சாப்பிடலாமா? அதிசய முருங்கை மரம்
சென்னை: முருங்கை மரத்தை வைத்து ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.. அந்தவகையில், சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? முருங்கை பூக்களை பச்சையாக சாப்பிடலாமா?
கீரைகளின் அரசன் எனலாம்.. அல்லது கீரைகளின் முதல்வன் எனலாம்.. அதிசய மரம் எனலாம்.. வாழ்க்கை மரம் எனலாம்.. பிரம்மவிருட்சம் எனலாம்.. "ஆபத்பாந்தவன்" எனலாம்.. இன்னும் பல பெயர்களில் இந்த முருங்கையை அழைக்கிறார்கள்.

சத்துக்கள்: ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே இந்த முருங்கையிலையில் நிரம்பி கிடக்கின்றன.
மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ஏ இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது.
முருங்கைக்கீரை: மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்த கீரையில் உள்ளது. 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது. முருங்கை கீரையில் 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வு குறிப்புகள் சொல்கின்றன. முருங்கைக்கீரையில் மற்ற தாவர உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது..
இந்த மரத்தின் வேர், பட்டை, இலை, பிசின், காய், பூ என அத்தனை பாகமும் மருத்துவ தன்மை வாய்ந்தது.. முருங்கையில் மட்டும் எதுவுமே வீணாண பாகம் என்று சொல்ல முடியாது.
பனங்கற்கண்டு: தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பவர்கள், முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் குடித்து வந்தால் உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் சேர்த்து, இதையும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.. தாம்பத்யம் சிறக்கும். இந்த பூக்களை பொரியல் செய்து சாப்பிடலாம், துவையல் செய்யலாம்.. கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.. பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறையும்.. அத்துடன், சர்க்கரை நோய்க்கும் நல்லது.
முருங்கைப்பூ கஷாயம்: அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டுவிடும்.. இவர்களும், இந்த முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் 2 முறை குடித்து வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
அமெரிக்காவில் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தில் தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் மரம், செடி, கொடிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். அப்போது, தண்ணீரை தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் குறைந்த செலவில் தண்ணீரை தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சபாஷ் பலன்கள்: நீரிலிருக்கும் தேவையில்லாத அசுத்தங்களை இந்த முருஙகை நீக்குகிறதாம்.. நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றனவாம்.. இதன்மூலம் தண்ணீர் நீண்ட நாட்களுக்கு சுத்தமாக இருக்கும் என்கிறார்கள்.. மனித குலத்துக்கு பயன்தரும் இந்த முருங்கையை வைத்து, பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications