வெறும் இலை.. நரம்புகளை காக்கும் அபூர்வமான எட்டி விதைகள்.. கைப்பிடி இலை போதுமே.. விஷ முறிவு ஆச்சரியம்
சென்னை: விஷத்தன்மை என்று சொல்லக்கூடிய இலைகளே, விஷத்தை முறித்து போடும் ஆற்றலை பெற்றிருக்கிறது என்றால் அது இந்த எட்டி இலைகள்தான்.. எட்டி மரத்தின் மருத்துவ பலன்கள் என்னென்ன தெரியுமா?
இதனுடைய தாவரவியல் பெயர் ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ்வாமிகா என்பதாகும்.. காஞ்சிகை என்றும் சொல்வார்கள். எட்டி மரத்தின் விதை, பட்டை, வேர், இலை, கனி, கொட்டைகள், என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை..

இலை, வேர், பட்டை எல்லாமே விஷத்தன்மையை கொண்டிருந்தாலும், மருந்தாக பயன்படுத்தும்போது, மூட்டு வலி, நரம்பு மண்டல நோய், நாய்க்கடி, வலிப்பு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது..
மத்திய அரசு சோதனை கூடத்தில் எட்டி மரத்தின் விதைகளிலிருந்து, இந்த வேதிப்பொருள்கள் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.இந்த அல்கலாய்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருந்து பயோ முறையில் மருந்தாக நமக்கு இங்கே விற்பனை செய்யப்படுகிறது.
இலைகள்: அந்தவகையில், நரம்பு பாதிப்புகளை சரிசெய்வதில், இந்த மரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. மத்திய நரம்பு மண்டலத்தின் மீது செயல்படுவதால், நாடி துடிப்பினை சரிபடுத்தி ரத்த அழுத்தத்தினை அதிகரிக்க செய்கிறது.. இதய செயல் இழப்பின்போது ரத்த ஓட்டத்தினை சீர் செய்யும் வலுவேற்றியாக இந்த இலைகள் பயன்படுத்தப்படுகிறது. கைகால் வலியை குணப்படுத்தவும் உதவுகிறது.
இந்த இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் நரம்பு வலி குணமாகும்.. இந்த இலையின் இளந்தளிரை அரைத்து வெண்ணெய்யில் கலந்து பூசினால், கட்டிகள், கொப்பளங்கள் கரைந்து உடைந்து குணமாகும்..
கொப்புளங்கள்: உஷ்ணத்தினால் உண்டாகும் கொப்புளங்கள், உடலில் புண்களால் கட்டிகள் ஏற்படும் போது எட்டி மரத்தின் இளந்தளிரை அரைத்து அதனுடன் பசு வெண்ணெய் கலந்து கட்டிகள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் கட்டிகள் உடைந்து குணமாகும்.
சித்த வைத்தியத்தில் எட்டி மரத்திலிருந்து எட்டித் தைலம் தயாரிக்கப்படுகிறது. இந்த மரத்தில் அல்கலாய்டுகள் அதாவது இயற்கையாக தாவரங்களிலிருக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. வயிற்றுவலி, வாந்தி, குடல் எரிச்சல், மன அழுத்தம், தலைவலி, மூச்சுத்திணறல் போன்றவற்றிக்கு இந்த அல்கலாய்டுகள்தான் மருந்தாக பயன்படுகின்றன..
விதைகள்: இதன் விதையிலிருந்து ஸ்டிரிக்னைன், புரூசைன் பிரித்தெடுக்கிறார்கள். இந்த பட்டைகளும் மருத்துவ தன்மை வாய்ந்தவை.. கேரளாவில் இந்த பட்டைகளை அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் விஷமுறிவுகளுக்கு நக்ஸ்வாமகா என்ற மருந்தையே தருவார்கள்.. எட்டி மரத்தின் பட்டையை நெய்யில் காய்ச்சி குழைத்து புண், கட்டிகள் மீது தடவ வேண்டும். சொறி, சிரங்கு பிரச்சனைகளால் சருமம் பாதிக்கப்படும் போதும் இதை பயன்படுத்தலாம்...
ஒருவேளை சீழ்க்கட்டி இருந்தால், இந்த எட்டி பழச்சாற்றினை, சீழ் மிகுந்த கட்டியின் மீது தடவினால், நிவாரணம் கிடைக்கும். இந்த பழத்திலிருந்து சில மாத்திரைகள், பஸ்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவைகள் தொழுநோயாளிகளுக்கு மருந்தாக தரப்பட்டன.
வேர்கள்: கசப்பு மிகுந்த இந்த மரத்தின் வேர்களை, கஷாயம் போல வைத்து விஷ காய்ச்சலுக்கு மருந்தாக தருவார்கள். அவ்வளவு ஏன், காலரா போன்ற பயங்கர நோய்கள் வந்தால், இந்த வேர்களிலும், பட்டைகளிலும், எலுமிச்சை கலந்து மருந்து தயாரித்து தருவார்கள். எட்டி மரத்தின் விதைகளில் களிம்புகள் தயாரிக்கப்பட்டு முடக்குவாத நோய்களுக்கு மருந்தாகின்றன. இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த எட்டி மர விதை, இலைகளை, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, ஆரோக்கியமான பயனை பெறலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications