வெறும் கனி போதும்.. அதுவும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிச்சாலே கடகடனு வெயிட் குறையும்.. ஆயுசு 100
சென்னை: வெறும் வயிற்றில் ஒரே ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதனால், உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
நெல்லிக்காயை பொறுத்தவரை, கால்சியம், வைட்டமின் C, புரோட்டீன் நிறைந்த கனியாகும்.. அதனால்தான், சித்தா, ஆயுர்வேதம் மருத்துவங்களில் நெல்லிக்காய்களுக்கான முக்கியத்துவமும், மகத்துவமும் இன்னமும் குறையாமல் உள்ளது.

நெல்லிக்காய்: ஒரு குட்டி நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் C இருக்கிறதாம்.. அதாவது, ஆரஞ்சு பழங்களை விட, 8 மடங்கு வைட்டமின் - C அதிகமாக உள்ளதாம்.. லவங்கப்பட்டை தூளை விட 2 மடங்கு ஆக்சிஜனேற்ற பண்பு அதிகம் உள்ளதாம். அதனால்தான், எப்போதுமே நெல்லிக்காயை பச்சையாக சாப்பிட சொல்வார்கள்..
அதேபோல, கால்சியம் + இரும்புச்சத்து இரண்டுமே இருப்பதால், எலும்புகள், பற்கள் உறுதியாவதுடன், ரத்தசோகை பிரச்சனையை அண்ட விடாமல் செய்துவிடும். நெல்லிக்காயில் உள்ள பீட்டா குளுக்கோளின், சர்க்கரை வியாதியினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவந்தாலே, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம.
தயிர், உப்பு: நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் மிக மிக நன்றாக இருக்கும். அதுவும், ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள், தயிர், உப்பு சேர்த்து பச்சடிபோல செய்து சாப்பிட்டால், கல்லீரல் பலம்பெறும்
தலைமுடிக்கும், சருமத்துக்கும் இந்த நெல்லிக்காய் பெருத்த நன்மைகளை தருகிறது.. வயதான தோற்றத்தை தடுக்கும் சக்தி நெல்லிக்காய்களுக்கு உண்டு.. இதிலுள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள், நம்முடைய சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை, தளர்வுகளை குறைக்கின்றன.. நெல்லிக்காய் சாறில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், கண்ணெதிரே சருமத்தில் பளபளப்பு கூடுவதை காணலாம்.
உடல் எடை: உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், வெறும் வயிற்றில், நெல்லிக்காய் சாறுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து குடித்துவந்தால், ஊளைச்சதை குறைய ஆரம்பிக்கும்

எப்போதுமே நெல்லிக்காயை வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட சொல்கிறார்கள்.. இதனால், வயிற்றுப்புண், வாய்ப்புண்கள் நீங்குவதுடன், செரிமானம் சீராகும்.. குடல் பாதுகாப்பு காக்கப்படும்.. மூட்டு வலி, முழங்கால் வலி, மூட்டு வீக்கம், போன்ற கோளாறுகளை சரிசெய்கிறது.. கரோட்டின் + கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள இந்த நெல்லிக்காய், தலைமுடியை வலுவாக்குகிறது. நரைமுடியை தடுக்கிறது.
தலைமுடி: நெல்லிக்காயில் வைட்டமின்கள், தாது உப்புகள் தலை முடி பராமரிப்புக்கும், பொடுகு பிரச்சனையை தீர்க்கவும், முடி அடர்த்தியாக வளரவும் உதவுகிறது.. நெல்லிக்காய் பொடியை, தேங்காய் எண்ணெயில் கலந்து, தலைமுடியில் வேர்க்கால்கள் வரை தேய்த்து மசாஜ் செய்து வந்தாலே போதும். இந்த நெல்லிக்காயை இரவில் மோரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் விழுதாக அரைத்து தலை தேய்த்து குளித்து வந்தால், உடல் சூடு தணியும்.. ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications