இட்லி மாவு.. உளுத்தம்பருப்பு சேர்த்து தோசை மாவு அரைக்கிறீங்களா? அப்ப இதை கவனியுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: இட்லி சிறந்த உணவாக கருதப்பட காரணம் என்ன தெரியுமா? சர்க்கரை ஏன் சர்க்கரை நோயாளிகளின் பெஸ்ட் உணவு தெரியுமா?
புழுங்கல் அரிசி, உளுந்து இந்த 2 பொருட்களையும் வைத்துதான், இட்லிக்கு மாவு அரைக்கிறோம். இந்த 2 பொருட்களை மட்டுமே பிரதான பயன்படுத்தி மாவு அரைக்க காரணம் என்ன தெரியுமா?

தானியம், பயிறு வகைகளில், நார்ச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.. உதாரணத்துக்கு, பயறு வகை புரோட்டீன்களில் லைசின் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகை புரதத்தில் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும் உள்ளன. அதனால்தான், பொங்கல் செய்யும்போது, அரிசியும், பாசிப்பருப்பையும் சேர்த்து சமைக்கிறார்கள்.
தானிய வகைகள்: அந்தவகையில் இட்லியை பொறுத்தவரை, தானிய வகையான அரிசியும், உளுந்தும் இணையும்போது, புரோட்டீன் நிறைந்த உணவாக மாறுகிறது.. அரிசியையும் உளுந்தையும் அரைத்து மாவாக்குவதால், உணவு பொருட்களும் நுண்மையாக்கப்படுகின்றன.
உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன.. அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிப்பதுடன், கொழுப்பின் அளவை பராமரிப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுப்பதன் மூலமும், நம்முடைய இதய செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம்: எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 100 கிராம் உளுந்தில் 267 மி.கி மெக்னீசியம் உள்ளதாம்.. எனவே, பற்கள், எலும்புகளுக்கு தேவையான கால்சியம் நமக்கு கிடைத்துவிடும்.
அதேபோல, இட்லிக்கு மாவு அரைக்கும்போது, முடிந்தவரை கருப்பு உளுந்து பயன்படுத்தினால் இன்னும் நல்லது என்கிறார்கள். காரணம், இந்த உளுந்து பருப்பு தோலில்தான் Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியா நிறைய உள்ளதாம்.. இந்தப் பாக்டீரியாதான் இட்லி மாவு புளிப்பதற்கும் முக்கிய காரணமாகிறது..
கருப்பு உளுந்து: தோல் நீக்கம் செய்யப்பட்ட உளுந்து பயன்படுத்தினால் மாவு புளிக்காமலேயே போய்விடும். அதனால்தான், மாவை புளிக்க வைக்க, வெந்தயம் சேர்த்து அரைக்கிறார்கள்.. எனினும், நேரடியாகவே, கருப்பு உளுந்து சேர்த்து மாவு அரைக்கும்போது, அதிக நன்மை கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி சிறந்த உணவாகிறது.. எண்ணெய், கொழுப்பு இல்லாதது.. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக இருந்தாலும், ஆவியில் வேகவைத்து எடுக்கும்போது, ஆரோக்கியம் கூடுகிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவாக மாறிவிடுகிறது. இதனால், ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜனேற்றம் கிடைக்கிறது.. ஆனால், அரிசி இட்லி என்றால் 2, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என்றால் 3 சாப்பிடலாம் என்கிறார்கள்.
சட்னி வகைகள்: ஆனால், தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி இரண்டையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டுமாம்.. இவைகளுக்கு பதிலாக, புதினா கொத்தமல்லி சட்னி, சாம்பார் போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். அதேபோல, எந்த இட்லி செய்தாலும், அந்த இட்லி மாவில் சிறிது கேரட் துருவி போட்டும் வேகவைத்து எடுக்கலாம்.












Click it and Unblock the Notifications