சர்னு சர்க்கரை இறங்கணுமா?அப்ப இந்த "3 இலை"யை ட்ரை பண்ணுங்க.. நீரிழிவு நோயாளிகளின் அருமருந்து கீரைகள்
சென்னை: சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களின் பரிந்துரையில் மருந்துகளை எடுத்து வந்தாலும்கூட, ஆரோக்கியமான உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அந்தவகையில், இயற்கையான சில இலைகளும் நீழிரிவு நோயாளிகளுக்கு கை கொடுத்து உதவுகின்றன.
நம்முடைய உடலில் இன்சுலினைபோல் செயல்பட்டு, சர்க்கரையை கட்டுப்படுத்துவதால்தான், இந்த செடிக்கு இன்சுலின் செடி என்றே பெயர் வந்ததாம். இந்த செடியின் பெயரில் இன்சுலின் இருந்தாலும், செடியில் இன்சுலின் கிடையாது.

புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பி-கரோட்டின், கார்சோலிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இந்த இலைகளில் நிறைந்திருக்கின்றன.
நாலஞ்சு இலை: சர்க்கரை நோயாளிகள் இந்த செடியின் 2 இலைகளை, வெறுமனே பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தாலே, சர்க்கரையின் அளவு மெல்ல கட்டுப்படும்.. லேசான புளிப்பு சுவையுள்ள இந்த இலையானது, இனிப்பின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறது.. அத்துடன் சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைத்து, சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதாக சொல்கிறார்கள்.
சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றும் சில நொதிகள் இந்த இலையில் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்ல, சர்க்கரை நோய் அதிகமாகிவிட்டாலே, கண்கள், நரம்புகள் போன்றவைகளின் பாதிப்புகள் அதிகமாகிவிடும்.. இதுபோன்ற கோளாறுகளுக்கெல்லாம் நிவாரணமாக உள்ளன இந்த இன்சுலின் இலைகள்.
சீதா இலைகள்: அடுத்ததாக, சீதாப்பழ மரத்தின் இலைகளை சொல்லலாம்.. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்தாகிறது. சீதாப்பழ இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. சீதா இலைகள் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது... இதனுடன் ரத்த சர்க்கரையையும் குறைக்கிறதாம்.
இந்த இலைகள் உடலிலுள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் இதனை வைக்கும். சீதா பழ இலைகளை தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அதன் பிறகு வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வந்தால், சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வேப்பிலைகள்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைகளுக்கும் உண்டு என்பது என்சிபிஐ-ன் (NCBI)ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது... அதனால், வெறும் வயிற்றில் நாலஞ்சு வேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. கணையமும் தன்னுடைய வேலையை சரியாக செய்யும் இதனால், இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலினும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் தண்ணீரில், 20 வேப்பிலையை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி, சாப்பிடுவதற்கு முன்பு, அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.
கொய்யா இலைகள்: கொய்யா இலைகளை பொறுத்தவரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் திறன் கொண்டது.. அத்துடன், நீண்ட கால ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடியது.. இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்கும் பண்புகள் இந்த கொய்யா இலைகளில் உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
செரிமானத்தின்போது கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்றும் பல நொதிகளையும் கொய்யா இலைகள் தடுக்கிறதாம்.. முக்கியமாக, டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. கொய்யா குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், அதனுடைய செரிமானமும், உறிஞ்சுதலும் தாமதமாகிறது.. எனவே, உணவுக்கு பிறகு கொய்யா இலை டீ குடித்து வந்தால், குளுக்கோஸ் உறிஞ்சுதலை தடுக்கலாம்..
இன்சுலின்: இன்சுலின் சுரப்பை இந்த கீரை சுரக்க செய்வதால், சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கீரை இதுவாகும்.. இந்த கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி, நிழலில் உலர்த்தி காயவைத்து, மிக்ஸியில் தூள் செய்து வைத்து கொண்டு பயன்படுத்தலாம்.
காசினிகீரை பொடி என்று நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. அல்லது இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நீரிழிவு நோய் கட்டுப்படும். காசினிக்கீரை இன்சுலின் சுரப்பை சுரக்க செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
சர்க்கரை நோய்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் வந்தால், இந்த கீரையை அரைத்து புண்களின் மீது பற்று போட்டு கட்டினால், சீக்கிரமாகவே புண்கள் ஆறிவிடும். உடலில் எங்கே வீக்கம் இருந்தாலும்சரி, புண்கள் இருந்தாலும், அவைகளை குணப்படுத்தும் தன்மை காசினிக்கு உண்டு.. அல்லது இந்த கீரையின் சாற்றினை, புண்களின் மீது தடவினாலே, புண்கள் ஆறிவிடும்.
அதேபோல, கற்றாழை இலைகளையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை தானாகவே கட்டுப்படுத்தும்.
அறிவுரை: மேற்கண்ட இலைகள் அனைத்துமே, இயற்கையானது என்றாலும்கூட, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியவை என ஆய்வுகளின் மூலம் நிரூபணமானாலும்கூட, நீரிழிவு நோயாளிகள் இதை மருத்துவர்களின் பரிந்துரையின்றி சாப்பிடக்கூடாது. எந்த உணவையும் மருந்தாக எடுத்து கொள்ளும்போது, டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்து கொண்டால் ஆரோக்கியம் தழைக்கும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications