வெறும் பழம்.. அள்ளி அள்ளி நாவற்பழம் பலன்.. கடகடனு வெயிட் குறைய.. சர்னு சுகர் இறங்க.. நாவல் பழங்கள்
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடிய பழங்களில் ஒன்றுதான் நாவல் பழம்.. இதிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
நாவல் பழத்தில், வைட்டமின் C, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் போன்ற மொத்த சத்துக்களும் உள்ளன.. அதனால்தான், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் சீன மருத்துவ முறைகளில் நாவல் பழத்தின் கொட்டைகளை பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்..

நாவல் பழங்கள்: நாவல் பழங்கள் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது. இதனால், ரத்தசோகை பிரச்சனை நீங்கும்.. குறைந்த கலோரி பழம் என்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த பழத்தை தேர்ந்தெடுக்கலாம், இதனால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கக்கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும் இந்த பழம், செரிமான கோளாறுகளை சீராக்குகின்றன.. நுரையீரலுக்கு பாதுகாப்பையும் தருகின்றன.. கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்புகள், பற்கள் உறுதியாகின்றன.. குடல்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றிவிடும் தன்மை நாவல் பழங்களுக்கு உண்டு.
வயிற்றுப்போக்கு: நாவல் பழத்திலுள்ள நார்ச்சத்து, செரிமானத்துக்கு பக்க பலமாக உள்ளது. மலச்சிக்கலுக்கு தீர்வு தருகிறது.. வயிற்றுப்போக்கு இருந்தால், இந்த நாவல் பழத்தில் ஜூஸ் தயாரித்து லேசாக உப்பு போட்டு குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எப்போதுமே, கசப்பும் துவர்ப்பும் நிறைந்த உணவுப்பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாம். அந்ததவகையில் துவர்ப்பு நிறைந்த இந்த நாவல் பழம், சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது.
சர்க்கரை நோயாளிகள்: நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ஸ்களும், ஆன்டி பாக்டீரியல் குணமும் நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக இருக்கிறது.. இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்... இந்த பழத்தில் பாலிபீனோலிக் இருப்பதால் நீரிழிவு சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றுகிறது.
வைட்டமின் C அதிகமாக உள்ளதால், முகத்தில் பருக்கள் ஏற்பட வாய்ப்பில்லை.. முகசுருக்கத்தை தள்ளிப்போடக்கூடிய சக்தி நாவல் பழத்துக்குண்டு.. இதனால், முகமும் பொலிவு பெறும். சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் மாசுபாடு போன்றவற்றிலிருந்தும் நாவல் பழம் பாதுகாப்பு தருகிறது.
அதேபோல, கல்லீரல் பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு பிரச்சினைகளையும் சரிசெய்ய இந்த பழம் துணைபுரிகிறது. தொழுநோய் குணமாக சாப்பிட, இந்த பழத்தைதான் நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்களாம்..
நாவல் பழம்: ஆனால், குளிர்ச்சி தரும் இந்த பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. நிறைய நாவல் பழம் சாப்பிட்டால், சுவாச பிரச்சனைகள் ஏற்படுமாம். சளி, தொண்டை கமறல், தொண்டை கட்டிக்கொள்வது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
ஹீமோகுளோபின் தொந்தரவு இருப்பவர்கள், நாவல் பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இதனால் ரத்தம் விருத்தியாகும்.. உடலில் நீர் சத்து வெளியேறுவதிலிருந்து இந்த பழம் தடுக்கிறது. இயல்பாகவே, தொற்றுக்களையும், பாக்டீரியாக்களையும் தன்மை கொண்ட பழம் என்பதால், பற்களையும் ஈறுகளையும் வலுப்படுத்தி காக்கிறது.
சிறுநீரக கற்கள்: இந்த பழத்தின் விதைகளும் மருந்தாகின்றன.. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், இந்த நாவல் பழ விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து தருவார்கள்.. இதனால் சிறுநீரக கற்கள் உடைந்து கரைந்து வெளியேறிவிடும்.












Click it and Unblock the Notifications