கழற்சிக்காய் விதை.. ஒரே பவுடர் போதும்.. உச்சி முதல் பாதம் வரை நல்லதை தரும் கழற்சிக்காய் பட்டை.. மாஸ்
சென்னை: பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுதான், இந்த கழற்சிக்காய்.. இந்த மூலிகையின் காய் மட்டுமல்ல, இலைகளும், பட்டைகளும் ஆண்களுக்கு எந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தருகின்றன தெரியுமா?
கழற்சிக்காய்கள் கடினமான முட்டை போல இருக்கும்.. உள்ளே கசப்பு நிறைந்த பருப்பு இருக்கும். இந்த பருப்பைதான் உடைத்து வெளியே எடுத்து, காயவைத்து இடித்து பவுடராக்கி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவார்கள்.

கருப்பை கோளாறு: பெரும்பாலும், பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க இந்த காய்கள் மருந்தாகின்றன.. இந்த பவுடரில், கால் ஸ்பூன் மிளகு தூள், சிறிது தேன் கலந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, தினமும் 2 வேளையும், 2 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, நீர்க்கட்டிகள் கரைந்துவிடும். குழந்தைப்பேறு உண்டாகவும் வழிபிறக்கும்.
நாட்டுமருந்து கடைகளில், கழற்சிக்காய் சூரணம் கிடைக்கிறது. இந்த சூரணத்தை ஐந்து கிராம் எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை, மாலை என தொடர்ந்து 2 மாதம் குடித்தால், சினைப்பையில் காணப்படும் நீர்க்கட்டிகள் கரையும். மாதவிடாய் பிரச்சனை சீராகும். ஹார்மோன் பிரச்சனையும் சீராகும்.
கழற்சிக்காய் விதை: இந்த கழற்சிக்காய் விதைகளுடன், 5 மிளகு சேர்த்து அரைத்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை வலி முதல் கடும்காய்ச்சல் வரை குணமாகும். இந்த பவுடருடன் சிறிது பெருங்காயம் சேர்த்து மோருடன் குடித்தால் வயிறுவலியும் தீரும்.
இந்த காய்களை போலவே, கழற்சிக்காயின் பூ, விதை, வேர்கள், பட்டை, இலைகளில் பல மருத்துவ தன்மைகள் உள்ளன.. இந்த கழற்சிக்காயின் இலைகள், சருமத்துக்கு கவசமாக திகழக்கூடியவை.. உடம்பில் அடிபட்டு காயங்கள், வீக்கங்கள் இருந்தால், இந்த இலைகளை விழுதாக அரைத்து பற்று போல போடலாம். தேவைப்பட்டால், இந்த விதைகளையும் அதனுடன் அரைத்து பூசலாம்.
இலைகள்: இந்த இலைகளை தூள் செய்து, அதில், பற்களை தேய்த்து வந்தால், பல் வலி குறைவதுடன், ஈறுகள் பலப்படும்.. பல் சொத்தையுள்ள இடத்தில் உடனே இந்த பவுடரை வைத்து தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். அல்லது இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் வாய்கொப்புளித்து வந்தாலும், வாய் துர்நாற்றமும், கிருமிகளும் நீங்கி, வாய் சுகாதாரம் பேணப்படும்.
கழற்சிக்காயின் பட்டைகள் ஆயுர்வேதத்தில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளன.. உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு இந்த பட்டைகளை அரைத்து பூசினால், கட்டிகள் பழுத்து கரைந்துவிடும்.
ஆண்மை குறைபாடு: ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், இந்த காய்களின் விதைகளை வைத்தே தீர்வு காணலாம்.. ஒரு வாணலில், விதைகளை போட்டு லேசாக வறுத்து தூள் செய்து எடுத்து வைத்து கொள்ளவேண்டும். இதில், ஒரு சிட்டிகை பொடியை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே விரைவாதம் நீங்கும். அல்லது கழற்சிக்காய் சூரணத்தை விளக்கெண்ணெயில் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்த தைலத்தை ஆண்களுக்கு விரைவீக்கமுள்ள இடத்தில் மருந்தாக தடவி வந்தால், விரைவீக்கம் நீங்கும்
இன்னும் பல அற்புத பலன்களை தரும் இந்த கழற்சிக்காய்களை, டாக்டர்களின், முறையான ஆலோசனையின் பேரில் மருந்தாக உட்கொண்டால் ஆரோக்கியம் தழைக்கும்.












Click it and Unblock the Notifications