வெறும் குச்சி.. முருங்கையிலையோடு இதையும் சேருங்க.. கிறங்கடிக்கும் இலைகளின் ஈர்க்குகள்.. அதிசய நலன்
சென்னை: வீண் என்று தூக்கி போடப்படும், கீரை பாகங்களிலும் பல நன்மைகள் இருக்கவே செய்கின்றன.. அந்தவகையில், ஒருசிலவற்றை பார்க்கலாம்.
வேப்பிலைகளை பொறுத்தவரை குளிர்ச்சி நிறைந்தவவை.. மருத்துவ சக்தி வாய்ந்தவை.. அதனால்தான், பல்வேறு மருந்து தயாரிப்புகளில் வேப்பிலைகளை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், வேப்பிலைகள் அளவுக்கு, வேப்பங்குச்சிகளை பலரும் பயன்படுத்துவதில்லை.. பற்பசை தயாரிப்புகளில், இந்த குச்சிகள் சேர்க்கப்படுகிறது என்றாலும், நேரடியாக குச்சிகளை பயன்படுத்தும்போது அதன் பலன்கள் இரட்டிப்பாகிறது.
ஆலமரம்: முன்னோர்களுக்கு கை கொடுத்து உதவிய, இந்த வேப்பங்குச்சிகளில் பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், ஈறுகளும் வலுவாகின்றன.. பற்களும் வெண்மையாகின்றன.
நேரடியாக வேப்பங்குச்சியில் பற்களை துலக்க முடியாமல் போனால், அந்த குச்சியில் உப்பு, கடுகு எண்ணெய் இந்த இரண்டையும் கலந்து தேய்த்தால், டபுள் பலன் கிடைக்கும். அதேபோல, ஆலமரக் குச்சிகளில் பற்களை தேய்த்து வந்தாலும் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும். அதனால்தான், ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
முருங்கை குச்சி: முருங்கை குச்சி எனப்படும் முருங்கை ஈர்க்குகளில் கால்சியம் நிறைய உள்ளது.. இதனால் பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதியை தருகிறது.. பெண்களுக்கு மேனோபாஸ் பிரச்சனையின்போது, உடலில் பல உபாதைகள் வரலாம்.
அதிக ரத்தப்போக்கு ஏற்படும். மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு ஏற்படும்.. இதற்கெல்லாம் முருங்கை குச்சிகளே போதுமான பலனை தந்துவிடும்.. ஈர்க்குச்சிகளில் சூப் போல வைத்து குடித்தால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், நரம்புகளும் பலப்படும்.. தலையில் நீர்க்கோர்த்திருந்தாலும் உடனே வெளியேறிவிடும்.. இதில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து காய்ச்சி குடிக்கும்போது, வறட்டு இருமலும் நீங்கும்..
அதேபோல, கறிவேப்பிலை குச்சிகளிலும் போதுமான அளவுக்கு சத்துக்கள் உள்ளன.. கறிவேப்பிலை துவையல் செய்யும்போது, இந்த ஈர்க்குகளையும் சேர்த்து அரைத்தால், சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.. கைக்குழந்தைகள் சில சமயங்களில் தாய்ப்பாலை கக்கி விடுவார்கள். கறிவேப்பிலை ஈர்க்கின் வெளித்தோலை உரித்து, தாய்ப்பால் சேர்த்து அரைத்து, அந்த சாற்றை மட்டும், குழந்தையின் நாவின் சில முறை தடவிவிட்டால் பால் கக்குதல் கட்டுப்படுமாம்.
ஈர்க்கு துவையல்: சிலர் முள்ளங்கியில் இந்த கறிவேப்பிலை ஈர்க்கு சேர்த்து துவையல் போல செய்வார்கள்.. அதாவது முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொண்டு, உப்பு சேர்த்த மோரில் 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். இப்படி மூழ்கி வைத்தால் முள்ளங்கி வாடைநீங்கிவிடும். நிறமும் மாறாமல் இருக்கும்.
ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலையுடன் ஈர்க்குகளையும் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது, முள்ளங்கியை தண்ணீர் இல்லாமல் எடுத்து, வாணலில் கொட்டி வதக்க வேண்டும். இறுதியில் தேங்காய் துருவல் சிறிது சேர்த்து வதக்கி ஆற வைத்தால் துவையல் ரெடி. அதுமட்டுமல்ல, எந்த ரசம் வைத்தாலும்சரி, மிளகு சீரகத்துடன், இந்த முருங்கையின் ஈர்க்குகளையும் சேர்த்து அரைத்து சமைத்தால் கூடுதல் சத்துக்கள் கிடைக்கும்.
குமட்டல்கள்: காபி, டீ குடிப்பவர்களுக்கு பித்தம் அதிகமாகிவிடும்.. சிலருக்கு வாந்தி, குமட்டல்கள் ஏற்படும். அப்படி நேரிடும்போது, அரச மரத்தின் குச்சிகளில் சூப் போல வைத்து குடித்தால் , நிவாரணம் கிடைக்கும்.. அல்லது சமையல்களிலும், துவையல், சட்னி போன்றவை செய்யும்போதும், இந்த குச்சிகளை சேர்த்து கொள்ளலாம்.. சுவாச கோளாறு இருப்பவர்கள், இந்த மரத்தின் குச்சிகளிலிருந்து வெளிவரும் புகையை சுவாசிக்கலாம்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications