கொத்து கொத்தா தொங்கும் இலைகள்.. பப்பாளி இலை சாறு கொஞ்சூண்டு போதும்.. கருகருன்னு முடி வளரும் பாருங்க
சென்னை: பப்பாளியைவிட, பப்பாளி இலைகளில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.. பப்பாளி இலைகளினால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பப்பாளி இலைகளில் ஏகப்பட்ட வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.. வைட்டமின் B, E, A, K, தாதுக்கள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உட்பட சபோனின்கள், டானின்கள், ஆல்கலாய்டுகள் அடங்கியிருக்கின்றன.

முக்கியமாக, வைட்டமின்-C அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, பல தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. காயங்களை ஆற்றுதல், உடல் திசுக்களின் வளர்ச்சி, சேதமடைந்த செல்களை மறுபடியும் உருவாக்குதல் போன்றவற்றுக்கு உறுதுணையாக இந்த இலைகள் உள்ளன..
பப்பாளி இலைகள்: ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இந்த பப்பாளி இலைகளுக்கு உண்டு.. பப்பாளி இலைகளில் லைகோபீன் உள்ளதால், புற்றுநோயை தடுக்கும் பண்புகளை பெற்றிருக்கிறது..
புற்றுநோய் செல் வளர்ச்சி மட்டுமல்லாமல் அதனால் உண்டாகும் சிக்கல்களையும் தடுத்து காக்கிறது.. இளம்பெண்களை பாடாய் படுத்திவரும் பிசிஓடி என்று சொல்லக்கூடிய கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை உடைக்க இந்த இலைகள் பயன்படுகின்றன.
கோளாறுகள்: அந்தவகையில், பப்பாளி இலைகளிலிருந்து சாறு எடுத்து பல உடல்நலம் சார்ந்த கோளாறுகளை தீர்க்க பயன்படுத்தலாம். இதில் முதன்மையானது, டெங்கு வைரஸ் தொற்றாகும்.. அளவுக்கு அதிகமான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி, நடுக்கம், கண் வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால், தினமும் 25 மில்லி பப்பாளி இலை சாற்றினை, நீரில் கலந்து குடித்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.. டெங்கு மட்டுமல்லாமல், மலேரியா, சிக்கன் குனியா காய்ச்சலின் வீரியத்தையும் இந்த சாறு குறைக்கிறது.
நீர்ச்சத்தும், நார்ச்சத்து நிறைந்த இலைச்சாற்றை குடித்து வருவது, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. இதிலுள்ள நார்ச்சத்து, கொழுப்பின் அளவையும் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த சாற்றில், நார்ச்சத்து அதிகம், கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் முயற்சிக்கலாம்.
செரிமான பிரச்சனைகள்: அஜீரணம், செரிமான பிரச்சனைகள் நீங்குவதுடன், கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றுகிறது. பப்பாளி இலை சாறு பொடுகை நீக்கக்கூடியது என்பதுடன், கூந்தலில் வறட்சியை போக்கக்கூடியது.. அதனால், இந்த இலையின் சாற்றினை தலைக்கு தடவி வரலாம்..
சருமத்தை சுத்தமாக வைத்திருக்கவும் இந்த சாறு உதவுகிறது... தோல் சுருக்கத்தை நீக்கி, வயதான தோற்றத்தை தள்ளிப்போடும் தன்மை இந்த பப்பாளி இலை சாற்றுக்கு உள்ளது..
பப்பாளி சாறு: இந்த பப்பாளி சாறு எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? பப்பாளி இலைகளை சுத்தம் செய்து, பொடி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இதில், சிறிது முட்டைக்கோஸ் நறுக்கி சேர்த்து, தண்ணீர் கலந்து அரைத்து எடுத்தபால், பப்பாளி இலை சாறு தயார்.. வெறுமனே இந்த சாற்றினை குடித்து வந்தாலும், வயிறு சுத்தமாகும். உடலில் புத்துணர்ச்சி கிடைக்குமாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications