ஒரே ஒரு "தோல்".. ஓராயிரம் நலன்.. மினுமினு சருமம் முதல் கருகரு முடி வரை: இந்த பழத்தோலை கீழே போடாதீங்க
சென்னை: மாதுளம் பழத்தோலை இனி கீழே தூக்கி எறியாதீங்க.. சருமம் முதல் கல்லீரல் வரை காத்து நிற்கக்கூடிய இந்த மாதுளையின் தோல்களில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?
உடல் எடை குறைய வேண்டுமானாலும்சரி, முகப்பொலிவு வேண்டுமானாலும் சரி, கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகளை நீக்க வேண்டுமானாலும் சரி, புற்றுநோயை நெருக்கவிடாமல் செய்வானாலும் சரி, மொத்த பிரச்சனைக்கும் தீர்வாகிறது இந்த மாதுளம் பழ தோல்கள்.

பழத்தோல்: மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகளை போலவே, இந்த பழத்தின் தோல்கள் மட்டும் 50 சதவீதம் பயன்கள் இருக்கிறதாம்.. அதிக ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது இந்த தோல்.. பாலிஃபினைல் அதிகம் நிறைந்திருப்பதால், புற்றுநோய் வராமல் தடுக்க பேருதவி புரிகிறது இந்த மாதுளை தோல்கள்.
மாதுளம் பழத்தின் தோல்களை சேகரித்து, அதை கழுவி சுத்தம் செய்து, வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு அதை பொடி செய்து, சலித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளலாம். இதில் டீ போட்டு குடிக்கலாம்ட.. அல்லது கஷாயம் போல காய்ச்சி குடிக்கலாம்.. அல்லது வெறுமனே சுடுநீரில் கலந்து குடிக்கலாம். இதனால், வயிற்றிலுள்ள கழிவுகள், நச்சுக்கள், புழுக்கள் உட்பட வெளியேறிவிடும். உடலில் இருக்கும் நச்சுக்களை எதிர்த்துப் போராடிகிறது இந்த மாதுளை தோல்.
மாதுளை டீ: இந்த மாதுளை டீயை தொடர்ந்து குடித்து வந்தால், நினைவுத்திறனை அதிகமாகும்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகும்.. தினமும் தூங்கப்போகும் முன்பு, இந்த டீயை குடித்து வந்தால், கல்லீரல் சிறப்பாக வேலை செய்யும்.. கல்லீரலை சுற்றி படிந்திருக்கும் கொழுப்புகளும் கரைந்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதேபோல, மாதுளம்பழத்தின் தோலில் அதிக அளவு வைட்டமின் C நிரம்பியிருப்பதால், வளர்ச்சி மற்றும் குறைபாடுகளைச் சமாளிக்கும் ஊட்டச்சத்து ஆகும்.
சுவாச கோளாறுகள்: தொண்டை புண், இருமல் தொந்தரவு இருப்பவர்கள் இந்த தூளில் டீ தயாரித்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். அல்லது வெந்நீரில் கலந்து வெதுவெதுப்பாக குடித்தாலே சுவாச கோளாறுகள் நீங்கும்.. மாதுளை பொடியில் நிறைய ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால், காது கேளாமை பிரச்சனைகளை செய்யக்கூடியவை.
காய வைத்த மாதுளை தோல்களை பயன்படுத்துவது போல, புதிதாக பழத்திலிருந்து உரிக்கப்பட்ட தோல்களையும் மருந்தாக பயன்படுத்தலாம்.. உரித்தெடுக்கப்பட்டட மாதுளை தோல்களை, இடித்தால் அதிலிருந்து சாறு போல வரும்.. இதில், 50 மில்லி குடித்து வந்தாலே, ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.. இதனால், சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும்.. டைப் 2 நீரிழிவு நோயாளிகள், இரவு தூங்கும்முன்பு இதை குடித்து வந்தாலே போதும், மறுநாள் காலை சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம்.
சரும பாதுகாப்பு: மாதுளம் பழ தோல், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.. கரும்புள்ளி, வெண் புள்ளிகளையும் விரட்டியடிக்க உதவுகிறது.. மாதுளம் பழ பவுடரிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் 1 ஸ்பூன் பழுப்பு சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் அவகோடா எண்ணெய் (ஏதாவது நறுமண எண்ணெய்) போன்றவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதை முகம், கழுத்து, கைகளில் நன்றாக மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.. இதனால், சருமம் பளபளப்பாகும், அத்துடன் தோல் பராமரிப்பும் பாதுகாக்கப்படும்.. பிக்மண்டேஷன் பிரச்சனை உள்ளவர்கள், இந்த மாதுளை பொடியுடன், கொஞ்சம் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தலைமுடி: இந்த பவுடர் தலைமுடியையும் காக்கிறது.. பொடி செய்த மாதுளம் பவுடரை, எண்ணெய்யுடன் கலந்து முடியின் வேர்களில் தேய்த்து, 2 மணி நேரத்திற்கு பிறகு, தலைமுடியை கழுவி வந்தால், பொடுகு தொல்லை நீங்கிவிடும்.. முடி உதிர்வதும் நின்றுவிடுமாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications