வாகை இலை.. வகை வகையான நோய்களை ஓட்டும் வாகை.. வெற்றியை தரும் வாகை பூக்களின் ஆச்சரியம்: வாவ் வாகையிலை
சென்னை: கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கும் வாகை இலைகளின் பிற நன்மைகள் என்னென்ன தெரியுமா?
குட்டி குட்டி இலைகளுடன், அதிக விதைகளை கொண்ட காய்களை கொண்டதுதான் வாகை மரம்.. சங்ககாலத்தில், போர்களில் வெற்றி பெறும் வீரர்கள் சூடிக்கொள்வது இந்த வாகை மலர்களைதான்.

மருத்துவ பலன்கள்: மண்ணரிப்பை போக்குவதில் மிகப்பெரிய பங்கை இந்த மரம் இன்றுவரை தந்துவருகிறது.. இந்த வாகை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், வேர்கள், பட்டை என எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவைதான்.
இந்த வாகையில், கால்சியம், புரதம், சோடியம், பொட்டாசியம் மெக்னீசியம் உட்பட ஏராளமான வேதி உப்புகள் நிறைந்துள்ளன.. உடலில் வீக்கங்கள், கட்டிகளை உடைத்து ஆற்றும் தன்மை இந்த வாகைக்கு உண்டு.
இலைகள்: வாகை மரத்தின் பூக்களை கொண்டு, விஷக்கடிகளுக்கு மருந்து தயாரிக்கிறார்கள்.. இதனால், உடலில் சேர்ந்த விஷங்கள் முறிந்துவிடும்.. ஆடு, மாடுகள் இதன் இலைகளை விரும்பி சாப்பிடும்.. காரணம், இலைகளில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதாவது உலர்ந்த வாகை இலையில் 2.8 சதவீதம் நைட்ரஜன் இருக்கிறதாம். அதனால்தான் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக இந்த இலைகளை பயன்படுத்துவார்கள்.
வாகை மரத்தின் பூக்கள், பித்தத்தை நீக்கக்கூடியது. வாகை பூக்களை நன்றாக அலசிசுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து சுண்ட காய்ச்சி குடித்து வந்தால், பித்தமும், வாதமும் சேர்ந்து குணமாகும். இந்த மரத்தின் பட்டையை உலரவைத்து தூள் செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண்கள் குணமாகும். இந்த பட்டை தூளை குடித்து வருவதால் நன்றாக பசியும் எடுக்கும்.
கண்களை காக்கும் இலை: இந்த மரத்தின் இலைகள், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்கக்கூடியது.. கண்கள் சிவத்தல், கண் எரிச்சல், கண் அரிப்பு, கண்ணில் நீர் வடிதல், கண்பார்வை மங்குதல் போன்ற மொத்த பார்வை கோளாறுகளையும் இந்த வாகை இலைகள் தீர்த்துவிடும். இந்த இலைகளில் டீ தயாரித்து குடிக்கலாம். அல்லது இலைகளை கழுவி சுத்தம் செய்து, வெறுமனே தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
அல்லது கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.. இந்த இலைகளை அலசி சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது சீரகம, 2 தம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்ட காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலே போதும்.. கண் பார்வை கூர்மையாகும்..
கண் நோய்கள்: ஒருவேளை, கண்ணில் பாதிப்புகள் இருந்தாலோ, கண்களில் கட்டிகள் வந்தாலோ, கண்கள் சிவந்துபோய்விட்டாலோ, ஒரு வாணலில் விளக்கெண்ணைய் விட்டு, ஐந்தாறு வாகை இலைகளை வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த இலைகளை ஆறவிட்டு, கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மீது வதக்கிய வாகை இலைகளை வைத்துக்கட்டினால் போதும்.. அடுத்த சிறிது நேரத்தில் கண் வலிகள், கண் வீக்கம், கண் எரிச்சல் குணமாகிவிடும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications