வெற்றி வேர்.. அதுவே வெட்டி வேர்.. சகல சரும நோயை ஓட்டும் மேஜிக் வெட்டி வேர்கள்.. இப்படி யூஸ் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெட்டி வேர்களை, வெற்றி வேர்கள் என்றே சொல்லலாம்.. உள்ளூறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், சருமத்துக்கும் சேர்த்து பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் இந்த வெட்டி வேர்கள் தருகின்றன.

குளிர்ச்சி நிறைந்த வெட்டி வேர்களில் இரும்பு, மாங்கனீசு, B6 வைட்டமின் நிறைந்துள்ளன.. இவைகளை தவிர, 300 க்கும் அதிகமான என்சைம்களின் செயல்பாட்டிற்கு காரணமான துத்தநாகம் காணப்படுகிறது...

Do you know the Excellent Health Benefits of vettiver and Super Medicinal Uses of Vetti Ver Water

இந்த முக்கியமான சத்துக்களே, நம்முடைய உடலில் செல் பிரிவு, செல் வளர்ச்சி, காயங்கள் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த வேர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க உதவுகிறது. எனவே, திசுக்களை சேதாரமின்றி பாதுகாக்ககூடிய தன்மை இந்த வேர்களுக்கு உண்டு.

சூப்பர் வேர்கள்: வெயில் காலத்தில் இந்த வெட்டி வேர்களின் பலன்கள் அதிகம் உண்டு. நீர்க்கடுப்பு, காய்ச்சல், சோர்வு போன்றவற்றை தீர்க்க இந்த வெட்டி வேர்கள் உதவுகின்றன..

கடைகளில் வெட்டி வேர் பொடி என்றே தனியாக கிடைக்கிறது. இதனை வாங்கியும் பயன்படுத்தலாம்.. உடம்பில் உஷ்ணம் அதிகமாகிவிடும்போது, சிறுநீர்ப்போக்கை தூண்டிவிட இந்த வெட்டிவேர் தூள் பயன்படுகிறது.. வயிறு வலி இருந்தாலும், அரை தண்ணீர் டம்ளர் தண்ணீரில் இந்த வெட்டி வேர் பவுடர், கருஞ்சீரக பொடி இரண்டையும் சேர்த்து கொதிக்க வைத்தால் வயிறு வலி நீங்கிவிடும்.

வெட்டிவேர்கள்: கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெட்டிவேரினை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூச குணமடையும்.
வெட்டிவேர்களை மண்பானை நீரில் போட்டுவைத்து குடித்தால் மிகச்சிறந்த பலனை தரும்.. இந்த தண்ணீரை குடித்து வந்தால், உடல் சோர்வு, உடல் சூடு இரண்டுமே நீங்கிவிடும்.. ரத்தம் அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தண்ணீர் மிகவும் நல்லது.

சுடுநீர்: அதேபோல, இந்த வெட்டி வேர்கள் கலந்த சுடுநீரில் குளித்து வந்தால், உடலில் துர்நாற்றம் நீங்குவதுடன், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். உடம்பில் அதிக வியர்வை, அரிப்பு பிரச்சனைக்கு, வெட்டிவேரை தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து குளித்து வரலாம்..

வெட்டி வேரை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, 2 நாட்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு, எண்ணெய்யை மட்டும் தனியாக பிரித்தெடுத்து வைத்துக் கொண்டால் பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாகும்.. இதனால், மூட்டுவலி, முழங்கால் வலி, வீக்கங்கள் போன்றவற்றுக்கு தடவி வரலாம்.

எண்ணெய்: வெட்டிவேர் கலந்த எண்ணெய்யை, சருமத்துக்கு தடவி வருவது பாதுகாப்பானது.. சருமத்துளைகளை நீக்கவும், முகப்பருக்களை நீக்கவும் இந்த எண்ணெய் பேருதவி புரிகிறது..

அதேபோல, சருமத்திலுள்ள நச்சுக்களும் நீங்கும். அவ்வளவு ஏன், தோலின் சில வகையான தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க இந்த வெட்டிவேர் எண்ணெய் உதவுகிறதாம். அதேபோல, முகப்பருவுக்கு சிகிச்சைக்கும் வெட்டிவேர் உதவுகிறது. வயதான சுருக்கத்தை தள்ளிப்போடுவதுடன், தோல் புற்றுநோயை அண்டவிடாமல் தடுக்கும் பண்பு வெட்டி வேர்களுக்கு உண்டு.

மன அழுத்தம்: தூக்கம் சரியாக வராவிட்டால், தலையணைக்கு அடியில் சிறிது வெட்டி வேர்களை வைத்துவிட்டால், நிம்மதியான தூக்கம் வரும்.. வெட்டி வேர்களை சிறிது வீட்டில் ஆங்காங்கே வைத்துவிட்டாலே போதும், வீடு முழுக்க நல்ல மணம் பரவி, மனமும் அமைதி பெறும்.. மன அழுத்தமும் விலகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+