வில்வ இலை.. நுரையீரலின் "நண்பன்" வில்வம்.. கல்லீரலின் காவலன் வில்வம் பழங்கள்.. அதிசயம் வில்வம் பழம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்வம் இலைகளை போலவே, வில்வம் பழத்தின் மருத்துவம் திகைக்க வைக்கிறது.. இந்த பழத்தின் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வில்வ மரத்தின் இலை, காய், பழம், பூக்கள், வேர், கொழுந்து, தளிர்கள் என அனைத்துமே மருத்துவ சக்தி கொண்டது. வில்வ இலைகளில் நிறைய ஆன்டி பயாடிக் நிறைந்துள்ளதால், பல்வேறு நோய்களை குணப்படுத்துகின்றன.

Do you know the Excellent Health Benefits of Vilam Fruit and Bael Fruit Vilam Pazham is the Best for Lungs

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இலைகள் மிகவும் நல்லது.. இந்த இலையில் டீ போட்டு குடித்தால், ரத்த சர்க்கரை கட்டுப்படும்.. உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை அழிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்க உதவுகின்றன-.

வில்வ இலைகள்: மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், வில்வ இலையை கொதிக்க வைத்து மிளகுத்தூள் சேர்த்து தேன் கலந்து குடித்தாலே மலச்சிக்கல் தீரும். வயிற்றிலுள்ள பூச்சிகளும் வெளியேறிவிடும்.. கடும் தலைவலி வந்தால், இந்த இலைகளை நசுக்கி, அந்த சாறை நெற்றியில் பற்று போட்டாலே நிவாரணம் கிடைக்கும்..

சரும பாதுகாப்பை உறுதிசெய்வதில், இந்த வில்வ இலைகளின் பங்கு அபரிமிதமானது.. ஆஸ்துமா, அலர்ஜி, மூச்சிரைப்பு பிரச்சனை இருப்பவர்கள், இரவில் மண் பானை நீரில், வில்வ இலைகளை போட்டுவைத்து, மறுநாள் காலையில், வெறும் தண்ணீரை குடித்தாலே, அலர்ஜி நீங்கும்.. ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு இப்படி எந்த தொந்தரவு சருமத்தில் ஏற்பட்டாலும் வில்வ இலை + வேப்பிலை + கல் உப்பு + மஞ்சள் தூள் என அனைத்தையும் கலந்து பூசிவந்தாலே பலன் கிடைக்கும்.

தம்பதிகள்: வில்வ இலையை நல்லெண்ணெய்யில் காய்ச்சி, காது நோய்களுக்கு காதில்விடுவார்கள். வில்வ இலை சாறு, கல்லீரலின் செயல்களை தூண்டி விட்டு, பித்தத்தை நீக்குகிறது.. இதயத்தை காக்கிறது.. வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகளில் இருந்து விடுபட இந்த வில்வம் இலைச்சாறு உதவுகிறது. ஆனால், கர்ப்பிணிகள், திருமணமான புதுமண தம்பதிகள் இந்த இலையை தவிர்க்க வேண்டும்.

வில்வ இலையை போலவே, அதிக சத்துக்களை கொண்டிருப்பது வில்வம் பழங்கள்.. ஒட்டுமொத்த குடலுக்கும் நன்மை தரக்கூடியது.. உடல்சூட்டைதணிக்கும் தன்மை இந்த பழத்துக்கு உள்ளது.. இதனால் மூலநோய் போன்ற உஷ்ண கோளாறுகளும் நீங்கும். வயிற்றுப் புண்களும் ஆறும்..

ஜூஸ்: கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், வைட்டமின், இரும்பு சத்து என பல்வேறு சத்துக்கள் இந்த ஜூஸில் உள்ளன. முக்கியமாக, இந்த பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து, உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. உடலில் கொழுப்புகளையும் அண்ட விடாது.. இதனால் தொப்பையும் விழாது. காரணம், 250 மில்லி ஜூஸ் குடித்தால், 140 முதல் 150 கலோரிகள் இதில் தருமாம்.. எனவே, உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையும் வேண்டாம்.

இந்த பழத்திலிருந்து இருமல் மருந்து நாமே தயாரிக்கலாம்.. இந்த பழத்தை 100 கிராம் எடுத்து, 200 மிலி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். அதில், நாட்டுச்சர்க்கரை சேர்த்து கம்பி பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். இதில் தேன் கலந்து, தினமும் 2 வேளை 1 ஸ்பூன் குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

வயிறு வலி: இந்த பழத்தின் மேலுள்ள ஓடுபோன்ற தோல்கள் கூட மருந்தாகின்றன.. இந்த ஓட்டினை நெருப்பில் வாட்டி, அதை தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசி வந்தால், பலன் தெரியும் என்பார்கள். ஸ்ரீபலம் என்று அழைக்கக்கூடிய வில்வ பழம், வயிற்றுப் போக்கு, சீத பேதிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+