முருங்கை சாறு.. 1 இலை + 1 பூ + 1 காய் = சர்க்கரை நோயாளிக்கு 3 சூப்பர் கஷாயம்.. அருமையான மூலிகைகள்
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு கை கொடுத்து உதவக்கூடிய எத்தனையோ மூலிகைகள் உள்ளன.. இந்த மூலிகைகளை கொண்டு கஷாயம் தயாரித்து குடித்து வந்தால், நீரிழிவு கட்டுப்படும் என்கிறார்கள். அதில் 3 விதமான கஷாயம் பற்றி பார்ப்போம்.
ஆவாரம் பூக்களை எடுத்து கொண்டால் மிகவும் குளிர்ச்சியை தரக்கூடியது.. பூக்களை காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டால் பல வகைகளில் பயன்படுத்தலாம்.. வெறுமனே இந்த இலைகளை நீரில் போட்டு காயவைத்து குடித்தாலும் கோடி பலன்களை பெறலாம்.
சர்க்கரை நோயாளிகள்: இந்த பூக்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவர பேருதவி புரிகிறது. அத்துடன், நீரிழிவு நோயால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் கட்டுப்படுத்துகிறது... கட்டுக்கடங்காத சர்க்கரை நோயையும், கட்டுக்குள் கொண்டுவரும் தன்மை இந்த ஆவாரம்பூ கஷாயத்துக்கு உண்டு.

ஆவாரை பூ சூரணம், ஆவாரை இலை சூரணம், ஆவாரை விதை சூரணம், ஆவாரை மரப்பட்டை சூரணம், ஆவாரை வேர்ப்பட்டை சூரணம், இவைகள் எல்லாம் தலா 2 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். 300 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த சூரணங்களையும் கொட்டி கொதிக்க விட வேண்டும்.
கஷாயம்: 100 மில்லியாக வரும்வரை கொதிக்கவிட்டு, அதை வடிகட்டு குடித்தாலே சர்க்கரை கட்டுக்குள் வரும். காலை, மாலை, 30 நாட்கள் இதை குடித்து வந்தாலே சர்க்கரை அளவின் மாற்றங்களை தெரிய ஆரம்பிக்குமாம். சர்க்கரை நோயாளல், கால் புண்கள் அழுகும் நிலையிலிருந்தாலும்கூட, இந்த கஷாயம் குடித்தால் சீராக்கிவிடுமாம்.. நரம்புகளிலுள்ள பாதிப்புகளை போக்கி திறன்பட செயல்படுத்த உதவுகிறது..
அதேபோல வில்வ இலையிலும் கஷாயம் செய்து குடிக்கலாம். ஆயுர்வேதத்தில் தவிர்க்க முடியாத மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது இந்த மூலிகைதான்.. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, வில்வ இலையில் கஷாயம் தயாரித்து குடிக்கலாம்.
வில்வ இலைகள்: வில்வ இலைகளை பறித்து சுத்தம் செய்து, அதை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, அந்தா சாற்றை, 1 கப் நீரில் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. இதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, ஒருநாளைக்கு 2 முறை குடித்து வந்தாலே சர்க்கரை கட்டுக்குள் வரும்.. இதனால், சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் சருமத்தில் அலர்ஜி, அரிப்பு, தழும்புகள் இருந்தாலும் நீங்கிவிடும்..
அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கைக்காயின் கஷாயமும் மிகவும் நல்லது.. இந்த கஷாயமும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு, வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும், இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது..
முருங்கை பூக்கள்: அதேபோல, முருங்கையின் பூக்களை வைத்தும் கஷாயம் செய்வார்கள்.. முருங்கை பூக்கள் மற்றும் முருங்கைக்கீரையை தனித்தனியாக காயவைத்து, பொடியாக்கி கொள்ள வேண்டும்.
இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.. உடலின் நச்சுத்தன்மையும் நீங்குகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த மூலிகைகளை உட்கொண்டு பலனடையலாம்.












Click it and Unblock the Notifications