Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாமா? அடடே இத்தனை நாளாக "இது" தெரியாம போச்சே.. உடனே கவனியுங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெறும் வயிற்றில் நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுதான் அன்றைய நாள் முழுக்க நமக்கு தரும் டானிக் எனர்ஜியாகும்.. அந்தவகையில், வெறும் வயிற்றில் நாம் தண்ணீர் குடிப்பதால், ஏற்படும் அபரிமிதமான நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நம்முடைய உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானவை... அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும், 83 சதவீத தண்ணீரால் ரத்தமும் உருவாகியுள்ளது.. அதனால்தான், எல்லா உடல் உறுப்புகளும் சிறப்பாக செயல்பட தண்ணீர் அவசியமாகிறது.

Do you know the Excellent Health Benefits of Water and amazing uses of drinking water in Empty Stomach

நைட் தூங்கி காலையில் எழுவதற்கு எப்படியும் குறைந்தது 6, 7மணி நேரமாகிவிடும். இந்த இடைப்பட்ட நேரத்தில் வயிற்றில் எதுவுமே இருக்காது.. அதனால்தான், காலையில் வயிற்றில் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள்.

- இதனால், உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும்

- வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது

- ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்க செய்கிறது

- ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது.

- பருக்கள், அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளை நீக்கி, சருமத்தை பாதுகாக்கிறது

- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது

- வெறும் வயிற்றை நீரால் குளிரவைத்து அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட செய்கிறது

- உடலின் சுறுசுறுப்புத்தன்மையை கூட்ட செய்கிறது.

- நீர்ச்சத்து அதிகமாவதால், நீரிழிவு, தலைவலி பிரச்சனையை வராமல் தடுக்க செய்கிறது

ஜப்பான்: இப்படி தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரத்துக்கு எதுவுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும்.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் இந்த முறையானது ஜப்பான் மக்களிடமிருந்தே, நாடெங்கும் பரவியிருக்கிறது. இதை தான் அவர்கள் "வாட்டர் தெரபி" என்று சொல்கிறார்கள்.

ஆனால், எவ்வளவு தண்ணீரை குடிக்க வேண்டும் என்ற அளவுகோலும் உள்ளது.. பிரபல ஆயுர்வேத மருத்துவர், ரேச்சல் ரெபேக்கா ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சில டிப்ஸ்களை தந்திருந்தார்.

தாகம் குடிநீர்: அதாவது, நம்முடைய உடலுக்கு தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும்.. அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்க தேவையில்லை. தாகமே எடுக்கிறதில்லையே என்றால், அவர்களுக்கு கபம் அதிகமாகிறது என்று அர்த்தம். அதேபோல அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.. இதற்கு மருத்துவரிடம் அணுக வேண்டும்.

உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனை ஏற்படலாம். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால்தான்.. அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.. தாகம் எடுத்தும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நீர்ச்சத்து குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.

தண்ணீர் பலன்: காலையில் எழுந்ததும், ஒரு குவளை தண்ணீர் குடித்த பிறகே காலைக்கடமைகளை முடிக்க முடிகிறது என்றால், கழிவை வெளியேற்றும் வாயு உற்பத்தி உடலில் நின்றுவிட்டது என்று அர்த்தம். தானாக நடக்க வேண்டிய விஷயத்தை தண்ணீர் குடித்துதான் தூண்ட வேண்டும் என்றால், உடலில் ஏதோ பிரச்சனை என்றே அர்த்தம்.

பொதுவாக, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, ஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கும். குறிப்பாக, காலை எழுந்ததும்! அதற்காக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. உணவைத் தவிர்த்து, ஒரு பழம் சாப்பிடலாம்.

நிலத்தடி நீர்: நிலத்தடி நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் குடிப்பது சிறந்தது. தண்ணீரை லேசாக சூடுபண்ணுவதும், வெந்நீரில் பச்சை தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாக குடிப்பதும் தவறு.. இதனால் கிருமிகள் அழியாது" என்பது உட்பட பல்வேறு விஷயங்களை அந்த பேட்டியில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+