மீனின் ஸ்பெஷாலிட்டி.. இந்த மீனை மட்டும் மிஸ் பண்ணாதீங்க.. மீன் வாங்கினால் மேஜர் 5 மேட்டரை கவனியுங்க.
சென்னை: மீன்களை வாங்கும்போது, கவனமாக பார்த்து வாங்க வேண்டியிருக்கிறது.. எவ்வளவுதான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், கெட்டுப்போன மீன்கள் அதிக அளவில், சில வியாபாரிகள் விற்பனை செய்வது அதிர்ச்சியை தந்துவருகிறது.
நாம் மீன்களை வாங்கும்போது, சதைப்பகுதி கெட்டியாக இருக்க வேண்டும். கைகளால் மீனை தொட்டதுமே அமுங்க கூடாது. விற்பனை செய்யப்படும் மீன்களின்மீது, ஈக்கள் மொய்த்தாலே அது, பிரஷ் மீன்கள் என்று கருதலாம். மீன்கள் மீது ரசாயன மருந்துகளை தெளித்து வைத்திருந்தால், மருந்து வாசனைக்கு ஈக்கள் மொய்க்காது....

மீன்கள்: மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிய கூடாது, மீனின் கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டுமே தவிர, வெள்ளை கலரில் இருக்கக்கூடாது.. மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கவேணடுமே தவிர, வெள்ளை கலராக இருக்கக்கூடாது.
மீனின் தலைப்பகுதியை கைகளால் தூக்கி பார்த்தால், வால் பகுதி விறைப்பாக இருக்க வேண்டுமே, தவிர கொழகொழவென இருக்கக்கூடாது.. மீனின் கழுத்து பகுதி விறைப்பாகவும், நிறைய செதில்களுடன் சிவப்பு கலரில் இருக்க வேண்டும்..
கடல் மீன்கள்: கடலிலிருந்து பிடித்துவரப்பட்ட மீன்களை பதப்படுத்தினாலும், சில இடங்களில், மீன்களின் மீது ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசி விற்பார்கள்.. அதாவது, சவக்கிடங்குகளில் மனித உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும்தான் இந்த ஃபார்மலினை பயன்படுத்துவார்கள். இதைத்தான் மீன்கள் மீது பூசி விற்கிறார்கள். இதனால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
இந்த ஃபார்மலின் பூசப்பட்ட மீனை நாம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்... ஃபார்மலின் பூசப்படாவிட்டாலும்கூட, பல நாட்கள், ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனையாகும் மீன்களை நாம் வாங்கி சாப்பிட்டாலும், புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாம்.
அதிகாரிகள் அதிரடி: இதற்காகவே, உணவுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது மீன் மார்க்கெட் பகுதிகளில் நேரடியாகவே சோதனை நடத்தி வருகிறார்கள்.. அப்படித்தான், நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட் பகுதிகளில், கெட்டுப்போன மீன்களை விற்பதாக புகார் வந்துள்ளது..
அதாவது, ஃபார்மலின் கலந்து மீன்கவிற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவும்,அவர்கள் நேரடியாகவே மீன் மார்க்கெட் பகுதிக்கு வந்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்களை ஆய்வு செய்தனர்..
அப்போது சில வியாபாரிகள், உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழித்தனர்.. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெட்டு போன மீன்கள்: எனினும், மீன்களை அன்றே வாங்கி பயன்படுத்துவது நல்லது அல்லது 2 நாள்கள்வரை ஐஸில் வைத்த மீன்களை சாப்பிட்டால் மட்டுமே போதும்.. அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications