கானா வாழையின் ஸ்பெஷாலிட்டி.. மாதவிடாய் கோளாறு, உடல் சூட்டினை தணிக்கும் ஜில் கன்றுக்குட்டி புல் ஜூஸ்
சென்னை: உடல் உறுப்புகளை பலம்பெறச்செய்யும் கானா வாழை கீரையை எப்படி பயன்படுத்துவது தெரியுமா? இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்னென்ன?
கன்றுக்குட்டிகளுக்கு தாய்ப்பால் மறக்கடிக்க கானா வாழை இலையை சாப்பிட தருவார்கள். அதனால்தான் இதற்கு கன்றுக்குட்டி புல் என்றும் இன்னொரு பெயர் உள்ளது.
வெறுமனே கானா வாழை கீரையை பறித்து சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து, மிளகு சேர்த்து குடித்தால் காய்ச்சல் தீரும்.. குளிர்ச்சி நிறைந்த இந்த கீரை வயிறு புண்களை ஆற்றக்கூடியது.. மூல நோய்களை விரட்டக்கூடியது.. கானா வாழை இலையுடன் துத்தி இலையும் சேர்த்து அரைத்து குடிக்கும்போது ரத்த மூலம் சரியாகும் என்பார்கள்.

உள்ளுறுப்புகள்: ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது தன்மை இந்த கானா வாழை கீரைக்கு உண்டு.. கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது. சிறுநீர்ப் பாதை, நுரையீரல் பாதை தொற்றுக்கள், நச்சுக்களை அகற்றக்கூடியது.. அதனால், இந்த கீரைகளிலிருந்து சாறு எடுத்து அதில் தண்ணீரும் கலந்து வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய்ப்புண் ஆறுவதுடன், கிருமிகள் இருந்தாலும் பறந்துவிடும்.. பல் ஈறுகளுக்கும் பலம் கிடைக்கும்.
புண்கள், காயங்கள் இருந்தால் இந்த குளுகுளு கீரையை, சிறிது மஞ்சள் வைத்து அரைத்து தடவினால் போதும்.. பெண்களின் மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் ஏற்பட்டாலும், இதில் பற்று போடலாம்.. வாத நோய்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த கானா வாழை .
வெள்ளைப்படுதல்: மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற கோளாறுகள் இருந்தால், இந்த கானா வாழை கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து விழுதாக்கி நெல்லிக்காய் அளவு 3 வேளை தினமும் தயிரில் கலந்து சாப்பிட்டு வரலாம்..
அதேபோல, ஒரு டம்ளர் தண்ணீரில் கானவாழை இலை, தூதுவளைப்பூ, முருங்கைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, சூடான பாலில் பனங்கற்கண்டுடன் கலந்து 40 நாள்களுக்கு குடித்தால் ஆண்களுக்கு தாது விருத்தி அதிகமாகுமாம்.
அல்லது கானா வாழையில் சாறு எடுத்து, அதில் ஜாதிக்காயை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து தினசரி 3 கிராம் அளவு சாப்பிட்டு வந்தாலும்ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் நீங்குமாம்..
பூசணிக்காய்: அல்லது உலர்ந்த கானா வாழை 100 கிராம், முருங்கை பிசின், கொட்டைப் பாக்கு, தென்னம்பாளை என தலா 100 கிராம் எடுத்து பவுடர் செய்து, தினமும் 2 வேளை, 1 கிராம் அளவு சாப்பிட்டு வந்தாலும், ஆண்மை கோளாறுகள் நீங்குமாம். இந்த செடியின் இலைகளை பூசணிக்காயுடன் சேர்த்து சாப்பிடும்போது பாலியல் இன்பத்தை அதிகரிக்கிறதாம்.. அல்லது கசகசாவுடன் கானாவாழை இலைச்சாற்றை ஊறவைத்து, தேனுடன் அரைத்தும் சாப்பிடலாம்.
ஆனால், இப்படி மருந்தாக சாப்பிடும்போது டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே ஆரோக்கியமாகும். அந்தவகையில், ஆண், பெண் இருவருமே வழக்கமான கீரைகளை போலவே இதையும் துவரம் பருப்புடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம்..












Click it and Unblock the Notifications