Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துண்டு துண்டு மூங்கில் தண்டு.. நோய்களை விரட்டும் சத்தான மூங்கில் குருத்து.. சபாஷ் "மழைக்கால டாக்டர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூங்கில் குருத்துக்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? ஆச்சரிய மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த நோய்களை இந்த மூங்கில் குருத்துகள் தீர்க்கின்றன தெரியுமா?

இந்த மூங்கில் தாவரத்திலிருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகளையே, மூங்கில் குருத்து அல்லது மூங்குறுத்து என்று அழைக்கப்படுகிறது.. மூங்கில் தாவரத்திலிருந்து, பெறக்கூடிய இந்த மூங்கில் மூங்கில் முளைகள், நாம் சாப்பிடத்தகுந்தவையாக உள்ளது ஆச்சரியமான விஷயம்.. எண்ணற்ற நோய்களை இந்த மூங்கில் குருத்துகள் தீர்க்கின்றன என்பது, அதைவிட ஆச்சரியமான விஷயம்.

Bamboo Shoots Moongil Kuruththu Weight Loss


வைட்டமின்கள்:
மூங்கில் குருத்துகளிலுள்ள ஏராளமான வைட்டமின்களும், தாதுக்களும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளன.. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நரம்பியல் கடத்தல் நோயை தாமதப்படுத்தக்கூடியவை என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

1 கப் மூங்கில் குருத்துக்களில் சுமார் 13 கலோரிகள் மற்றும் அரை கிராம் கொழுப்பு இருக்கிறதாம்.. மூங்கிலின் இளந்தளிர்களில் அதிக கலோரிகளும், கொழுப்பும் கிடையாது.. எனவே, அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த மூங்கில் குருத்துக்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இந்த தண்டுகள் முழுக்க முழுக்க நார்ச்சத்து நிறைந்தவை என்பதால்,வளர்சிதை மாற்ற நோய்க்குறியையும் தடுக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன.

கெட்ட கொழுப்பு: இதய நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், அங்கு படிந்துள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்றவும் உதவுகின்றன. அதனால், இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 2 முறையாவது இதை சாப்பிடுவது நல்லது என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த மூங்கில் குருத்துகளில் பைட்டோஸ்டெரால்ஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்துள்ளதால், உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய எல்டிஎல் கொழுப்பை கரைப்பதற்கு பேருதவி புரிகின்றன.. முக்கியமாக தமனிகளிலிருந்து கொழுப்பை எளிதாக்க உதவுகிறது.

வயிறு உபாதைகள்: வயிறு உபாதைகளை சரிசெய்து, குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த மூங்கில் குருத்துகள் உதவுகின்றன.. சுவாச கோளாறுகளுக்கு எதிராகவும், இந்த மூங்கில் குருத்து செயல்படுவதாக சொல்கிறார்கள்.

இதுவொரு நுண்ணுயிர் கொல்லி என்பதால், சளி, காய்ச்சல் போன்ற நுரையீரல் தொந்தரவுகள் இருந்தால், மூங்கில் குருத்தினை, தேனுடன் கலந்து கஷாயமாக்கி தருவார்களாம்.. இதனால், உடலிலுள்ள அலர்ஜிகள் முழுமையாக விலகிவிடும்.. ஆஸ்துமா தொந்தரவும் குறையும்.. முறையற்ற மாதவிடாய் பிரச்சனையையும் இந்த மூங்கில் குருத்துகள் சரிசெய்கின்றன.. இதனால் வயிற்றுப்பிடிப்பு, அதிக ரத்தபோக்கு, கை கால் குடைச்சல் போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது.

பொட்டாசியம்: ரத்த அழுத்தம் உள்ளவர்களின் அருமருந்தாக திகழ்கிறது இந்த மூங்கில் குருத்துகள்.. காரணம், உடலில் பொட்டாசியம் நிறைந்திருந்தாலே, ரத்த அழுத்தம் சீராக இருக்கும்... எனவே ரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்கள், மூங்கில் குருத்து உணவில் சேர்த்து வரலாம்.. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

ஊட்டியை சேர்ந்த தம்பதி நவீன் ராமன் மற்றும் உமா தம்பதியினர், மூங்கில் குருத்துக்களின் பயன்பாடு குறித்து நம்மிடம் சொல்லும்போது, "பெரும்பாலும் குளிர்பிரதேசத்தில்தான் இந்த மூங்கில் குருத்துகள் கிடைக்கும்.. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள், இயற்கை உணவு பயிர்களை சேகரித்து சாப்பிட்டு வருகிறார்கள்.. ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் எந்த நோயும் அண்டாது என்ற நம்பிக்கை நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களிடம் எப்போதுமே உள்ளது..

மழைக்காலம்:
பருவமழை காலத்தில் மட்டுமே இந்த மூங்கில் குருத்துகள் கிடைப்பதால், இதற்கு நீலகிரியில் எப்போதுமே அதிக டிமாண்டு உள்ளது.. அதனால், மூங்கில் குருத்துக்களை விற்பனை செய்பவர்களிடம் முன்கூட்டியே நாம் சொல்லி வைத்தால், மழைக்காலங்களில், விளையும் இந்த மூங்கில் குருத்துகளை சேகரித்து வந்து நமக்கு தருவார்கள்..

பார்ப்பதற்கு பனங்கிழங்கு போலவே மெல்லிதாக நீண்டு காணப்படும், இந்த குருத்துக்களின் மேல்புற தோலை சீவிவிட்டு, வெண்மை நிறத்திலுள்ள குருத்தினை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து நமக்கு தருவார்கள்.. 1 கிலோ 250 முதல் 300 ரூபாய் வரை தற்போது விற்கப்படுகிறது...

பிறகு உப்பு சேர்த்த தண்ணீரில் இந்த குருத்தினை வேக வைத்து எடுத்துக்கொண்டு, விருப்பம்போல் பொரியல், குழம்பு செய்யலாம்.. சிலர் உப்பு தண்ணீரில் இதை வேகவைத்துவிட்டு, அந்த தண்ணீரை பிழிந்து எடுத்துவிடுவார்கள். இதனால், அதிலிருக்கும் கசப்பு தன்மை நீங்கிவிடும்.

அபார ருசி: மட்டன் அல்லது சிக்கன் க்ரேவியில் இந்த குருத்துக்களை சேர்த்து சமைக்கலாம்... பருப்புகளை சேர்த்தும், காய்கறி குருமா போலவும் வைக்கலாம். சூப் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. சிலர் இதனை ஊறுகாய் செய்தும் சாப்பிடுவார்கள்..

மழை காலங்களில் உடல் உஷ்ணத்தை இந்த குருத்துகள் தீர்க்கின்றன.. குளிர்காலத்தின்போது, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து சிறந்த பாதுகாப்பை இந்த குருத்துகள் தருகின்றன.. இந்த மூங்கிலிலிருந்து கிடைக்கும் சாறு, பாம்பு, தேள் என விஷக்கடிகளுக்கு பயன்படுகிறது. மூல நோய் உள்ளவர்களும், நீரிழிவு நோயாளிகளும் இந்த குருத்தினை தேடி விரும்பி சாப்பிடுவார்கள். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதால், வளரும் பிள்ளைகளுக்கு இந்த குருத்தினை தரலாம்.

தவிர்க்கலாம்:
இந்த மூங்கில் குருத்துக்களை, குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதை அதிகமாக சேர்க்ககூடாது. அதேபோல, உஷ்ணத்தை தரக்கூடியது என்பதால், கர்ப்பிணிகள் ஆரம்ப காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும். காரணம், கருப்பை சுருக்கத்தை இந்த குருத்துகள் உண்டாக்கலாம்... தைராய்டு உள்ளர்களும், தாய்ப்பால் தரும் பெண்களும் இந்த மூங்கில் குருத்தை தவிர்க்க வேண்டும்" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+