செவ்வாழை.. மொத்த சத்துக்களின் சுரங்கம்.. செவ்வாழையை சாப்பிட்டா உடல்எடை கூடுமா? செவ்வாழையின் சீக்ரெட்
சென்னை: வாழைப்பழங்களில் பல்வேறு நன்மைகளை தருவது செவ்வாழை.. இந்த செவ்வாழையை தினமும் சாப்பிடலாமா? செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் எடை கூடுமா?
இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்று பெயர் உண்டு.. ஏன் தெரியுமா? பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தும் அத்தனை குணங்களும் செவ்வாழையில் உண்டு.. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் B6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்க செய்வதுடன், கருமுட்டைகள் சிதையாமலும் பாதுகாக்கிறது.

செவ்வாழை: குழந்தைபேறு இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், 40 நாட்களுக்குள் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதேபோல, ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும் என்கிறார்கள். இதற்காகத்தான், இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்பார்கள்.
செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சிறுநீரகங்களில் கற்கள் சேராமல் தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது. இதனால், இதயம் சீராக செயல்படுவதுடன், பக்கவாதம், மாரடைப்புகள் வராமல் தடுக்கப்படுகிறது..
ரத்த அழுத்த பாதிப்பு: அதிக ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கும், தோல் பிரச்சனை இருப்பவர்களும், செவ்வாழை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நுரையீரல், கல்லீரல், இதயம், குடல், என முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்துக்கு பெரும் உதவி புரிகிறது இந்த செவ்வாழை.
தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பிரச்சனைகளே வருவதே கிடையாதாம்.. மாலைக்கண் பாதிப்பு இருப்பவர்களும், செவ்வாழையை சாப்பிடுவதால் பார்வை கூர்மைபெறும்.. அவ்வளவு ஏன்? இந்த செவ்வாழையை துண்டு செய்து, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தாலே கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதலும் நின்றுவிடும்.
எடை அதிகரிக்குமா: பெரும்பாலும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பார்கள்.. இந்த செவ்வாழையை அதிகம் சாப்பிட்டால் எடை கூடுமோ? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆனால், மற்ற எல்லா வாழைகளையும்விட செவ்வாழை மிகச்சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.. காரணம், பொட்டாசியம், மக்னீசியம் இரண்டுமே இந்த செவ்வாயில் உண்டு. இந்த இரண்டுமே ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது.. இந்த இரண்டுமே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அதாவது, 2 வாரங்களுக்கு, தினமும் 1 செவ்வாழையை, சாப்பிட்டு வந்தால் நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு உயருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மலச்சிக்கலை போக்கக்கூடிய மிகச்சிறந்த மருந்து என்பதால், செவ்வாழையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்கிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications