அரச மரம்.. "அடிவயிற்றை தொட்டுப்பார்த்தாள்".. மரங்களின் அரசன் தரும் மகத்துவம்.. அதிசய அரச மர பட்டைகள்
சென்னை: "அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வழக்கத்தில் கொண்டிருந்ததற்கு காரணம் என்ன? அரச மரம் தரும் நன்மைகள் என்னென்ன?
அரசமரம் - இந்த மரத்திலிருந்து வெளியிடும் காற்றில், பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.. அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அரச மரம்: 'அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் "என்ற சொல்வார்கள்.. இதற்கு காரணம், சூலகத்தில் உண்டான நோய்களை நீக்குவதுடன், இந்த அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளையும் போக்கும் தன்மையுடையது.
அதாவது, அரச மரத்தின் பட்டை, வேர், விதை போன்றவற்றை பாலில் கொதிக்கவைத்து, ஆறிய பிறகு, தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே தாது விருத்தியடையும் என்பார்கள்..
கருப்பை கோளாறுகள்: பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகளும் நீங்கும்... இந்த மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு, மாதவிலக்கு நேரத்திலும் கஷாயம் போல செய்து குடித்தால், மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
இந்த மரத்தின் இலையை அரைத்து வெறும் வயிற்றில் ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தாலும் குழந்தை பேறு உண்டாகும் என்பார்கள். ஆனால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, மருந்தாக இதனை பயன்படுத்த வேண்டும்.
பட்டுப்பூச்சிகள்: இந்த இலைகளில், புல்லைவிட 2-3 மடங்கு கூடுதலாக புரோட்டீன் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்கிறதாம்..
வட இந்தியாவில் இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகவே பயன்படுகின்றன.
நன்றாக வளர்ந்த அரச மரம், தினமும் 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.. மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டுகிறதாம். அரச மரத்தை சுற்றி வருவதற்கும் இதுதான் காரணம்.
பித்த வெடிப்புகள்: இந்த மரத்தின் குச்சிகளை, வெட்டி மருந்தாக சாப்பிடும்போது, ரத்தத்திலுள்ள பித்தம் தீருகிறது.. இந்த மரத்திலிருந்து வரும் பால், காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு மருந்தாகிறது.. இந்த பாலை, பித்த வெடிப்புகளில் தடவிவந்தாலே, அவைகள் விரைவில் மறைந்துவிடும். அரச மரத்தின் இலையை எரித்து, தேங்காய் எண்ணெய்யில் குழைத்து உடலில் தடவினால், தீப்புண் தழும்புகளும் மறைந்துவிடும்.
இம்மரத்தின் குச்சிகளிலிருந்து வெளிவரும் புகையானது, சுவாசிப்பவர்களின் சளி, மூச்சுத்திணறல் பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது. அதிக களைப்பு இருந்தாலும், அவைகளை நீக்கி உடல் தசைகளை வலுவேற்றக் கூடியது,..
விதைகள்: இந்த விதைகளை பொடியாக்கி, சிறிதளவு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். இந்த மரத்தின் பட்டையை நீரில் சுடவைத்து, வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப்புண்கள் ஆறிவிடும்.. அதேபோல, இந்த பட்டையை தூளாக்கி, நீரில் கொதிக்க குடித்து வந்தால், சரும வியாதிகளும் குணமடையும். இவ்வளவு நன்மைகளையும் தருவதால்தான், மரங்களின் அரசனாக இந்த அரச மரம் இன்றுவரை திகழ்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications